ரூ.72 லட்சம் மதிப்புடைய கவாஸாகி பைக் மும்பை வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இந்தியாவின் முதல் கவாஸாகி எச்2ஆர் பைக் மும்பையை சேர்ந்த வாடிக்கையாளருக்கு டெலிவிரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரூ.72 லட்சம் மதிப்புடைய கவாஸாகி பைக் மும்பை வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

உலகின் அதிசக்திவாய்ந்த தயாரிப்பு நிலை பைக் மாடல் என்ற பெருமை கவாஸாகி எச்2ஆர் பைக் பெற்றிருக்கிறது. ஆண்டுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு உலக அளவில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்படுகிறது.

ரூ.72 லட்சம் மதிப்புடைய கவாஸாகி பைக் மும்பை வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இந்தநிலையில், இந்தியாவிலும் இந்த பைக்கிற்கு சில யூனிட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டு முன்பதிவு ஏற்கப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பர்- அக்டோபர் மாதத்தில் முன்பதிவு ஏற்கப்பட்ட இந்த பைக்கிற்கு மும்பையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் முன்பதிவு செய்தார்.

ரூ.72 லட்சம் மதிப்புடைய கவாஸாகி பைக் மும்பை வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

முன்பதிவு செய்யப்பட்டு ஆறு மாத காலம் கடந்த நிலையில், நேற்று அந்த வாடிக்கையாளருக்கு இந்த ஹைப்பர் பைக் டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் செயல்பட்டு வரும் அன்ஸென் கவாஸாகி என்ற அங்கீகரிக்கப்பட்ட டீலர் மூலமாக இந்த பைக் டெலிவிரி செய்யப்பட்டுள்ளது. உரிமையாளர் அடையாளத்தை தெரிவிக்க விரும்பவில்லை என்றும் டீலர் சார்பில் கூறப்பட்டுள்ளது.

ரூ.72 லட்சம் மதிப்புடைய கவாஸாகி பைக் மும்பை வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

கவாஸாகி எச்2 பைக்கின் அடிப்படையில் ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கான சிறப்பம்சங்களுடன் தயாரிக்கப்பட்ட மாடல்தான் கவாஸாகி எச்2ஆர் பைக். இந்த பைக் பந்தய களத்தில் மட்டுமே ஓட்ட இயலும். சாதாரண சாலைகளில் ஓட்ட முடியாது.

ரூ.72 லட்சம் மதிப்புடைய கவாஸாகி பைக் மும்பை வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

உலகின் அதிசக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்ட பைக் மாடல் என்ற பெருமையை இந்த பைக் பெற்றிருக்கிறது. இந்த பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட 998சிசி சூப்பர்சார்ஜ்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 308 பிஎச்பி பவரையும், 165 என்எம் டார்க் திறனையும் வழங்கும். எஞ்சின் திறனை 321 பிஎச்பி பவரை அதிகரிக்கவும் முடியும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

ரூ.72 லட்சம் மதிப்புடைய கவாஸாகி பைக் மும்பை வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இந்த பைக்கில் குயிக் ஷிஃப்ட் வசதி, ஹைட்ராலிக் க்ளட்ச் மற்றும் பேக் டார்க் லிமிட்டர் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. இந்த பைக் மணிக்கு 400 கிமீ வேகம் வரை எட்டிப்பிடிக்கும் திறன் வாய்ந்தது.

ரூ.72 லட்சம் மதிப்புடைய கவாஸாகி பைக் மும்பை வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

வளைவுகளில் விபத்தை தவிர்க்கும் உதவி புரியும் கார்னரிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம், வேகத்தை உடனடியாக கட்டுப்படுத்தும் எஞ்சின் பிரேக் கன்ட்ரோல், அதிக தரைப்பிடிப்பை வழங்கும் டிராக்ஷன் கன்ட்ரோல், பாஷ் நிறுவனத்தின் ஐஎம்யூ சாதனம் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.

ரூ.72 லட்சம் மதிப்புடைய கவாஸாகி பைக் மும்பை வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இந்த பைக்கில் ஓலின்ஸ் எலெக்ட்ரானிக் ஸ்டீயரிங் டேம்பருடன் கூடிய 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் டிடிஎக்ஸ்36 கேஸ் சார்ஜ்டு மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. பிரெம்போ நிறுவனத்தின் டிஸ்க் பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

ரூ.72 லட்சம் மதிப்புடைய கவாஸாகி பைக் மும்பை வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

இந்த பைக்கில் கவாஸாகி நிறுவனத்தின் விசேஷ லோகோ கொடுக்கப்படுகிறது. அத்துடன் கீறல்கள் விழாதவாறு தாக்குப்பிடிக்கும் விசேஷ பெயிண்ட் ஆகியவை கொடுக்கப்படுகிறது. இந்த பைக் வரிகள் உள்பட ரூ.72 லட்சம் அடக்க விலையில் டெலிவிரி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, March 4, 2019, 11:38 [IST]
English summary
India’s First Kawasaki Ninja H2R Bike Delivered To Customer.
மேலும்... #கவாஸாகி #kawasaki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+