ஜாவா 300, 42 பைக்குகளில் இடம்பெறும் பிஎஸ்-6 எஞ்சின் பற்றி புதிய தகவல்!

ஜாவா 300, 42 பைக்குகளில் இடம்பெறும் பிஎஸ்-6 எஞ்சின் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரங்களை காணலாம்.

ஜாவா 300, 42 பைக்குகளில் இடம்பெறும் பிஎஸ்-6 எஞ்சின் பற்றி புதிய தகவல்!

கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட ஜாவா 300 மற்றும் 42 பைக் மாடல்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பேராதரவு இருந்து வருகிறது. ஜாவா பிரியர்கள் இந்த பைக்குகளை வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஜாவா 300, 42 பைக்குகளில் இடம்பெறும் பிஎஸ்-6 எஞ்சின் பற்றி புதிய தகவல்!

இந்த நிலையில், ஜாவா நிறுவனம் தனது மூன்றாவது மாடலாக பெராக் என்ற பாபர் வகை பைக் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. மிக தனித்துவமான வடிவமைப்புடன் இந்த பைக் ஜாவா பிரியர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தியது.

ஜாவா 300, 42 பைக்குகளில் இடம்பெறும் பிஎஸ்-6 எஞ்சின் பற்றி புதிய தகவல்!

மேலும், இந்த பைக்கில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 334 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வரும்போதுதான் இந்த புதிய பைக்கின் டெலிவிரி கொடுக்கும் பணிகளும் துவங்கப்பட இருக்கின்றன.

ஜாவா 300, 42 பைக்குகளில் இடம்பெறும் பிஎஸ்-6 எஞ்சின் பற்றி புதிய தகவல்!

இந்த சூழலில், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளில் 293 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், பெராக் பைக்கில் இருக்கும் பிஎஸ்-6 எஞ்சினை ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளில் ஜாவா அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.

ஜாவா 300, 42 பைக்குகளில் இடம்பெறும் பிஎஸ்-6 எஞ்சின் பற்றி புதிய தகவல்!

இந்த சூழலில், ஜாவா நிறுவனம் இந்த செய்தி குறித்து விளக்கம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, தற்போது ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளில் பயன்படுத்தப்படும் அதே 293 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சினை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஜாவா 300, 42 பைக்குகளில் இடம்பெறும் பிஎஸ்-6 எஞ்சின் பற்றி புதிய தகவல்!

எனவே, இதுதொடர்பாக வந்த செய்திகளுக்கு அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், ஜாவா பெராக் பைக் போலவே, பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட ஜாவா 300 மற்றும் 42 மாடல்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பின்னரே டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

ஜாவா 300, 42 பைக்குகளில் இடம்பெறும் பிஎஸ்-6 எஞ்சின் பற்றி புதிய தகவல்!

தற்போதைய மாடலைவிட பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்கள் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை கூடுதல் விலையில் வரும் வாய்ப்புள்ளது. ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளில் பயன்படுத்தப்படும் 293 சிசி எஞ்சின் 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்ப்டடுள்ளது.

ஜாவா 300, 42 பைக்குகளில் இடம்பெறும் பிஎஸ்-6 எஞ்சின் பற்றி புதிய தகவல்!

ஜாவா 300 மற்றும் 42 பைக்குகள் முறையே ரூ.1.55 லட்சம் மற்றும் ரூ.1.64 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. புதிய ஜாவா பெராக் பைக்கிற்கு ரூ.1.94 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஎஸ் 6 எஞ்சினுடன் வரும்போது ஜாவா 300 மற்றும் 42 பைக்குகளுக்கும் பெராக் பைக்கிற்கும் இடையே உள்ள விலை இடைவெளி கணிசமாக குறையும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 20, 2019, 10:00 [IST]
English summary
Jawa Motorcycles is planning to offer BS-VI compliant engines on the Jawa 300 and the Jawa Forty Two. The company says that it will upgrade the engines that are currently featured on the motorcycles, and will launch the BS-VI compliant 293cc engines during 2020.
மேலும்... #ஜாவா #jawa motorcycles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+