நாசிக்கைத் தொடர்ந்து டெல்லியை குறிவைக்கும் ஜாவா... எதற்காக தெரியுமா???

நாசிக்கைத் தொடர்ந்து தனது பார்வையை டெல்லியில் மீது வைத்துள்ள ஜாவா வைத்துள்ள ஜாவா நிறுவனம். எதற்காக என்பதை இந்த செய்தியில் பார்ப்போம்.

நாசிக்கைத் தொடர்ந்து டெல்லியை குறிவைக்கும் ஜாவா... எதற்காக தெரியுமா???

புத்துயிர் பெற்ற ஜாவா

ஜாவா பைக்குகள் இந்திய மார்கெட்டை கலக்க மீண்டும் அறிமுகமாகியுள்ளது. 1970களில் பலரின் கனவு பைக்காக இது இருந்தது. இன்றும் பழைய மாடல் ஜாவா பைக்குகளை முறையாக பராமரித்து வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது பைக் கான்வாயையும் நடத்தி வருகின்றனர்.

நாசிக்கைத் தொடர்ந்து டெல்லியை குறிவைக்கும் ஜாவா... எதற்காக தெரியுமா???

பாரம்பரியம் மிக்க ஜாவா நிறுவனம், தனது பிராண்டின் புதிய தலைமுறை மோட்டார்சைக்கிள் மாடல்களை மஹிந்திரா குழுமத்தின் அங்கமாக செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் மூலம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் ஆகிய மூன்று புதிய மோட்டார்சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இதில், ஜாவா பெராக்கின் விற்பனை தேதி மட்டும் அறிவிக்கப்படவில்லை.

நாசிக்கைத் தொடர்ந்து டெல்லியை குறிவைக்கும் ஜாவா... எதற்காக தெரியுமா???

வண்ணங்கள்

ஜாவா 42 மாடலானது ஹாலிஸ் டீல், கெலக்டிக் க்ரீன், ஸ்டார்லைட் புளூ, லூமோஸ் லைம், நெபுலா புளூ மற்றும் காமட் ரெட் ஆகிய 6 வண்ணங்களிலும், ஜாவா மாடல் பிளாக், மெரூன் மற்றும் க்ரே ஆகிய மூன்று வண்ணங்களிலும் கிடைக்கும்.

நாசிக்கைத் தொடர்ந்து டெல்லியை குறிவைக்கும் ஜாவா... எதற்காக தெரியுமா???

புத்தம் புதிய எஞ்ஜின்

ஜாவா 42 மற்றும் ஜாவா மோட்டார்சைக்கிளில் 293சிசி சிங்கிள் சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேலும், பாரத் ஸ்டேஜ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது. இரட்டை புகைப்போக்கி குழல் இதன் முக்கிய அம்சமாக உள்ளது.

MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!

நாசிக்கைத் தொடர்ந்து டெல்லியை குறிவைக்கும் ஜாவா... எதற்காக தெரியுமா???

பாரம்பரிய தோற்றம்

பழைய ஜாவா மோட்டார்சைக்கிள்களில் காணப்பட்ட வட்ட வடிவிலான ஹெட்லைட், பக்கவாட்டில் இருக்கும் டூல் பாக்ஸ், க்ரோம் பூச்சுடன் கூடிய இரட்டை புகைப்போக்கி குழாய்கள், அகலமான பின்புற மட்கார்டு ஆகியவை புதிய ஜாவா 42 மாடலிலும் தக்கவைக்கப்பட்டு இருப்பது பாரம்பரியத்தை உணர்த்தும் விஷயமாக இருக்கிறது. வட்ட வடிவிலான சிறிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சிறிய மின்னணு திரை மூலமாக தகவல்களை பெறுவதற்கான வசதியுடன் இடம்பெற்றுள்ளது.

நாசிக்கைத் தொடர்ந்து டெல்லியை குறிவைக்கும் ஜாவா... எதற்காக தெரியுமா???

ஏபிஎஸ் பிரேக்

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு இரட்டை ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. முன்புறத்தில் 280 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 153 மிமீ டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாசிக்கைத் தொடர்ந்து டெல்லியை குறிவைக்கும் ஜாவா... எதற்காக தெரியுமா???

ஜாவாவின் இரண்டு மாடல் பைக்குகள் அதாவது ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகள் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மாடலைப் போலவே அமைக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு பைக்கின் விற்பனை பற்றி உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. ரெட்ரோ லுக் ரக பைக்குகளில் போட்டிக்கு பெரிய அளவில் ஆளே இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாக மார்கெட்டில் களம்கண்டு வருகிறது.

நாசிக்கைத் தொடர்ந்து டெல்லியை குறிவைக்கும் ஜாவா... எதற்காக தெரியுமா???

உற்பத்தி ஆலை

இந்த நிலையில், தற்போது அதே ரெட்ரோ டிசைன் லுக்குடன் ஜாவாவின் இரண்டு மாடல் பைக்குகள் கிட்டத்தட்ட அதே விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பீதம்பூரில் உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் ஆலையில் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

நாசிக்கைத் தொடர்ந்து டெல்லியை குறிவைக்கும் ஜாவா... எதற்காக தெரியுமா???

டீலர் நெட்வொர்க்

மேலும், மஹிந்திரா இருசக்கர வாகனப் பிரிவின் கீழ் நாடு முழுவதும் 105 பிரத்யேக டீலர்கள் வாயிலாக ஜாவா மோட்டார்சைக்கிள்களின் விற்பனை துவங்கப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, டீலர்களின் எண்ணிக்கையைப் படிப்படியாக அதிகரிக்க உள்ளது.

நாசிக்கைத் தொடர்ந்து டெல்லியை குறிவைக்கும் ஜாவா... எதற்காக தெரியுமா???

நாசிக்கைத் தொடர்ந்து டெல்லி

இதனடிப்படையில், இந்நிறுவனம் ஏற்கனவே இந்தியாவின் முக்கிய நகரங்களில் தனது ஆதிக்கத்தைச் செலுத்த துவங்கிவிட்டது. கடைசியாக நாசிக் நகரத்தில் துவங்கப்பட்ட டீலர் ஷிப்பைத் தொடர்ந்து, டெல்லியில் மேலும் புதிய நான்கு டீலர்ஷிப்புகளை கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. தற்போது, டெல்லியில் 9 ஷோரூம்களையும், பெங்களூருவில் 3ம், புனேவில் 2 ம், நாசிக்கில் ஒரு ஷோரூமையும் அந்நிறுவனம் புதிதாக தொடங்கியுள்ளது.

நாசிக்கைத் தொடர்ந்து டெல்லியை குறிவைக்கும் ஜாவா... எதற்காக தெரியுமா???

இதைத்தொடர்ந்து, இந்தியாவில் 15 புதிய ஷோரூம்களைக் கொண்டு போட்டியாளர்களை மிரட்டத் துவங்கியுள்ளது. மேலும், இந்த நிறுவனம் வருகின்ற மார்ச் மாதம் முடிவுக்குள் 105 ஜாவா மோட்டர்சைக்கிள் ஷோரூம்களை இந்தியாவில் தொடங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

நாசிக்கைத் தொடர்ந்து டெல்லியை குறிவைக்கும் ஜாவா... எதற்காக தெரியுமா???

கிளாசிக் லெஜெண்ட்ஸ் பற்றி...

புதிய டீலர்ஷிப் தொடக்கத்தைத் தொடர்ந்து, கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஆஷிஸ் ஜோஷி பேசுகையில், 'ஜாவா தனது தயாரிப்பை முடக்கி பல ஆண்டுகளைக் கடந்தும், அதன்மீது தீராத காதல் கொண்டு தற்போதுவரை அதற்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றிகள்' என தெரிவித்தார்.

நாசிக்கைத் தொடர்ந்து டெல்லியை குறிவைக்கும் ஜாவா... எதற்காக தெரியுமா???

'ஜவாவை மற்றுமொரு துடிப்பான நகரத்திற்கு கொண்டு வருவதற்கு நான் பெருமையடைகிறேன். கடந்த முறை ஜாவாவிற்கு கிடைத்த வெற்றியைப் போலவே இம்முறையும் கிடைக்கும் என நம்புகிறேன். அந்த வகையில், விற்பனையில் புதிய மைல் கல்லை ஜாவா தொடும்' என அவர் கூறினார்.

நாசிக்கைத் தொடர்ந்து டெல்லியை குறிவைக்கும் ஜாவா... எதற்காக தெரியுமா???

மேலும், 'வாடிக்கையாளர்களுக்கான விற்பனை மற்றும் சேவைகளில் சிறந்த அனுபவங்களை வழங்குவதற்கு நிறுவனம் மற்றும் அதன் வணிக நிறுவனங்கள் கடமைப்பட்டுள்ளதாக' அவர் தெரிவித்தார்.

Most Read Articles
English summary
Jawa Added 4 New Dealers In Delhi NCR. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X