ஜாவா பைக் குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்... பணம் கட்டி முன்பதிவு செய்தவர்கள் கடும் அதிர்ச்சி...

ஜாவா மோட்டார் சைக்கிள்கள் தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவலால், பணம் கட்டி முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ஜாவா பைக் குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்... பணம் கட்டி முன்பதிவு செய்தவர்கள் கடும் அதிர்ச்சி...

வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஜாவா மோட்டார் சைக்கிள்கள் கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. அன்றைய தினம் ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா 42 ஆகிய 2 மோட்டார் சைக்கிள்கள் அறிமுகமானது. அத்துடன் அன்றைய தினமே புக்கிங்கும் தொடங்கியது.

ஜாவா பைக் குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்... பணம் கட்டி முன்பதிவு செய்தவர்கள் கடும் அதிர்ச்சி...

ஜாவா என்ற பிராண்டு மீது கொண்ட மோகம் காரணமாக வாடிக்கையாளர்கள் போட்டு போட்டு கொண்டு முன்பதிவு செய்தனர். இதன் காரணமாக நேரடி போட்டியாளரான ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள்களின் விற்பனை கணிசமாக குறைந்தது. ஆனால் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு ஜாவா மோட்டார் சைக்கிள்கள் டெலிவரி செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது.

ஜாவா பைக் குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்... பணம் கட்டி முன்பதிவு செய்தவர்கள் கடும் அதிர்ச்சி...

பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் ஜாவா ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிக்காட்டிய போதும் கூட, டெலிவரி எப்போது தொடங்கப்படும் என்ற உறுதியான தகவல் எதுவும் வெளியாகாமல் இருந்து வந்தது. ஒரு வழியாக நீண்ட இழுத்தடிப்பிற்கு பின், முதல் ஜாவா மோட்டார் சைக்கிள் கடந்த மார்ச் 30ம் தேதியன்று டெலிவரி செய்யப்பட்டது.

ஜாவா பைக் குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்... பணம் கட்டி முன்பதிவு செய்தவர்கள் கடும் அதிர்ச்சி...

இந்த சூழலில் ஜாவா மோட்டார் சைக்கிள்களை புக்கிங் செய்துள்ள இதர வாடிக்கையாளர்கள் அனைவரும் டெலிவரிக்காக பெரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். கடந்த மார்ச் 30ம் தேதியன்று ஒரு சில பைக்குகளை மட்டும் டெலிவரி செய்த ஜாவா, எஞ்சிய வாடிக்கையாளர்களுக்கு பைக்குகளை வழங்கும் பணிகளை தற்போது செய்து வருகிறது.

ஜாவா பைக் குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்... பணம் கட்டி முன்பதிவு செய்தவர்கள் கடும் அதிர்ச்சி...

இது தொடர்பாக இந்தியாவில் உள்ள ஜாவா டீலர்களுக்கு மெயில் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த மெயிலில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் பின்வருமாறு:

ஜாவா பைக் டெலிவரி தகவல்:

1. நவம்பர் 15ம் தேதி முன்பதிவு செய்த அனைத்து வாடிக்கையாளர்களும் ஏப்ரல் இறுதிக்குள்ளாக பைக்கை பெறுவார்கள் (கடைசி 10 நாட்கள்).

2.நவம்பர் 16ம் தேதி முன்பதிவு செய்த மற்றும் JAWA20181116003 முதல் JAWA201811163931 வரையிலான புக்கிங் ஐடி கொண்ட வாடிக்கையாளர்களுக்கு மே மாத முதல் பாதியில் பைக் டெலிவரி செய்யப்படும்.

3.நவம்பர் 16ம் தேதி புக்கிங் செய்த மற்றும் JAWA201811163949 முதல் JAWA201811166344 வரையிலான புக்கிங் ஐடி கொண்ட வாடிக்கையாளர்களுக்கு மே மாத இரண்டாவது பாதியில் பைக் டெலிவரி செய்யப்படும்.

4. இதில், ட்யூயல் சேனல் ஏபிஎஸ் முன்பதிவுகள் உட்படாது. ட்யூயல் சேனல் ஏபிஎஸ் டெலிவரி ஜூன் மாதம் முதல்தான் தொடங்குகிறது.

இவ்வாறு அந்த மெயிலில் கூறப்பட்டுள்ளதாக ரஸ்லேன் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜாவா பைக் குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்... பணம் கட்டி முன்பதிவு செய்தவர்கள் கடும் அதிர்ச்சி...

மேற்கண்ட தகவலின் அடிப்படையில் பார்த்தால், நவம்பர் 15 மற்றும் நவம்பர் 16 ஆகிய இரண்டு தினங்களில் புக்கிங் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பைக்குகள் டெலிவரி செய்யப்படவுள்ளன. அதன்பிறகு புக்கிங் செய்தவர்கள் ஜூன் அல்லது அதற்கு பிறகு வரை காத்திருக்க வேண்டும். அதே சமயம் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் புக்கிங் செய்தவர்கள், டெலிவரி தொடங்கவே ஜூன் மாத இறுதி வரை காத்திருக்க வேண்டும்.

ஜாவா பைக் குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்... பணம் கட்டி முன்பதிவு செய்தவர்கள் கடும் அதிர்ச்சி...

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் இரண்டு தினங்களில் புக்கிங் செய்தவர்களுக்கு பைக் டெலிவரி கிடைக்கவே மே மாத இறுதி வரை ஆகும் என்பதால், அதன்பிறகு முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகுதான் ஜாவா பைக் டெலிவரி தொடங்கியது. தற்போது பைக் கைக்கு கிடைக்க இன்னும் தாமதம் ஆகலாம் என வெளியாகியுள்ள தகவலால் அவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி உண்டாகியுள்ளது.

ஜாவா பைக் குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்... பணம் கட்டி முன்பதிவு செய்தவர்கள் கடும் அதிர்ச்சி...

இதனிடையே ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கு தற்போது வரை கிடைத்துள்ள முன்பதிவுகள் எவ்வளவு? என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. அதேபோல் கடந்த மார்ச் மாதத்தில் டெலிவரி செய்யப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை எவ்வளவு என்ற தகவலையும் அவர்கள் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாவா பைக் குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்... பணம் கட்டி முன்பதிவு செய்தவர்கள் கடும் அதிர்ச்சி...

முன்னதாக ஜாவா பெராக் என்ற மோட்டார் சைக்கிளும் கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி நடைபெற்ற விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால் ஜாவா பெராக் இந்திய மார்க்கெட்டில் இன்னும் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. நடப்பாண்டு இறுதியில்தான் ஜாவா பெராக் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 4, 2019, 9:30 [IST]
English summary
Jawa Bike Delivery Details. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+