ஜாவா பைக்கை தலை மேல் வைத்து கொண்டாடியவர்களுக்கு கிடைத்த பரிசு இதுதான்... அதிர்ச்சி தகவல்...

ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கு செய்திருந்த புக்கிங்கை கேன்சல் செய்து விட்டு, வேறு பைக்குகளை வாடிக்கையாளர்கள் வாங்கி வருகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜாவா பைக்கை தலை மேல் வைத்து கொண்டாடியவர்களுக்கு கிடைத்த பரிசு இதுதான்... அதிர்ச்சி தகவல்...

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஜாவா மோட்டார் சைக்கிள்கள் கடந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதி இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. அன்று முதல் சமூக வலை தளங்களில் ஜாவா மிகவும் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறது. குறிப்பாக டிவிட்டரில். டீலர்ஷிப் திறப்பு விழாக்கள் தொடர்பான தகவல்கள், பண்டிகை சமயங்களில் பின் தொடர்பவர்களுக்கு வாழ்த்து சொல்வது, விருதுகள் பெற்றது தொடர்பான அப்டேட்கள், செய்தித்தாள் நேர்காணல்கள் என ஜாவாவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் எப்போதும் பிஸிதான்.

ஜாவா பைக்கை தலை மேல் வைத்து கொண்டாடியவர்களுக்கு கிடைத்த பரிசு இதுதான்... அதிர்ச்சி தகவல்...

ஆனால் இவை அனைத்தும் கடந்த மார்ச் மாதம் வரைதான். அதன்பின் நிலைமை அப்படியே தலை கீழ் ஆனது. நடப்பு ஏப்ரல் மாதத்தில், ஜாவாவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் ஹேண்டில் அவ்வளவு ஆக்டிவ் ஆக இல்லை. இன்னும் சொல்லப்போனால், ஜாவா மோட்டார் சைக்கிள்கள் அறிமுகத்துக்கு பிந்தைய மாதங்களுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஏப்ரல் மாதத்தில்தான், ஜாவாவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தின் செயல்பாடுகள் வெகுவாக குறைந்துள்ளன.

ஜாவா பைக்கை தலை மேல் வைத்து கொண்டாடியவர்களுக்கு கிடைத்த பரிசு இதுதான்... அதிர்ச்சி தகவல்...

தற்போது வரை அந்நிறுவனத்தால் 3 அப்டேட்கள் மட்டுமே போஸ்ட் செய்யப்பட்டுள்ளன. பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்த அந்நிறுவன நிறுவனரின் நேர்காணல், டீலர்ஷிப் திறப்பு தொடர்பான ஒரு தகவல் மற்றும் 100வது டீலர்ஷிப் என்ற மைல்கல்லை எட்டுவது தொடர்பான ஒரு தகவல் என மொத்தம் 3 அப்டேட்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஆச்சரியம் அளிக்கும் விதமாக அதிகம் எழுப்பப்படும் கேள்வி ஒன்றுக்கு மட்டும் சொல்லிக்கொள்ளும்படி தெளிவான பதில் எதுவும் இல்லை.

ஜாவா பைக்கை தலை மேல் வைத்து கொண்டாடியவர்களுக்கு கிடைத்த பரிசு இதுதான்... அதிர்ச்சி தகவல்...

எங்களுக்கு ஜாவா மோட்டார் சைக்கிள் எப்போது டெலிவரி செய்யப்படும்? என்ற கேள்விதான் அது. ஜாவா டெலிவரி தொடர்பான அப்டேட்டிற்காக ஆயிரக்கணக்கானோர் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். ஜாவா மோட்டார் சைக்கிள்களின் டெலிவரி எப்போது தொடங்கப்படும்? முதல் ஜாவா பைக் எப்போது டெலிவரி செய்யப்படும்? என்கிற ரீதியில் 2019ம் ஆண்டின் தொடக்கத்திலேயே பலர் கேள்வி எழுப்ப தொடங்கி விட்டனர்.

ஜாவா பைக்கை தலை மேல் வைத்து கொண்டாடியவர்களுக்கு கிடைத்த பரிசு இதுதான்... அதிர்ச்சி தகவல்...

இறுதியில் 2019ம் ஆண்டின் மார்ச் 4வது வாரத்தில் ஜாவா மோட்டார் சைக்கிள்களின் டெலிவரி தொடங்கப்படும் என்ற தகவல் கடந்த மார்ச் 2வது வாரத்தில் வெளியிடப்பட்டது. இதன்படி முதல் ஜாவா மோட்டார் சைக்கிள் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி டெலிவரி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அன்றைய தினமும், அதற்கு மறு தினமும் கூடுதலாக சில ஜாவா மோட்டார் சைக்கிள்கள் டெலிவரி செய்யப்பட்டன.

ஜாவா பைக்கை தலை மேல் வைத்து கொண்டாடியவர்களுக்கு கிடைத்த பரிசு இதுதான்... அதிர்ச்சி தகவல்...

இந்த சூழலில் Auto Punditz தளம் பகிர்ந்துள்ள சேல்ஸ் ரிப்போர்ட்டின் படி, கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 54 ஜாவா பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இன்னும் சரியாக சொல்வதென்றால் இது டிஸ்பாட்ச் (Dispatch) செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை. டெலிவரி பெற்ற ஒரு சில அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுடன் இணைந்து, டீலர்ஷிப்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மற்றும் டெஸ்ட் ரைடு மோட்டார் சைக்கிள்களும் இதில் அடங்கும்.

ஜாவா பைக்கை தலை மேல் வைத்து கொண்டாடியவர்களுக்கு கிடைத்த பரிசு இதுதான்... அதிர்ச்சி தகவல்...

அதே நேரத்தில் நடப்பு ஏப்ரல் மாதத்தில் டெலிவரி செய்யப்பட்ட ஜாவா மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை எவ்வளவு? என்பது குறித்த உறுதியான தகவல் எதுவும் இல்லை. இது தொடர்பாக ஒரு சில டீலர்ஷிப்களில் விசாரித்து பார்த்ததில், ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. டெலிவரி காலக்கெடு தொடர்பாக ஜாவா நிறுவனத்திடம் இருந்து டீலர்ஷிப்களுக்கே இன்னும் எவ்விதமான அப்டேட்டும் வரவில்லையாம். இதுதவிர கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கு முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் சிலரோ, எப்போது டெலிவரி கிடைக்கும்? என்ற ஐடியாவே இல்லை என புலம்பி கொண்டுள்ளனர்.

ஜாவா பைக்கை தலை மேல் வைத்து கொண்டாடியவர்களுக்கு கிடைத்த பரிசு இதுதான்... அதிர்ச்சி தகவல்...

டெலிவரி தொடர்பாக உரிய அப்டேட்களை கொடுக்காததாலும், காலதாமதம் செய்வதாலும் ஒரு சில வாடிக்கையாளர்கள் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளனர். சமூக வலை தளங்களில் தங்கள் ஆத்திரத்தை அவர்கள் கொட்டி தீர்த்து வருகின்றனர். இன்னும் சிலரோ அதிருப்தி காரணமாக, ஜாவா மோட்டார் சைக்கிளுக்கு செய்த முன்பதிவை கேன்சல் செய்து விட்டு, வேறு பைக்குகளை வாங்கி வருகின்றனர். இன்னும் சிலரோ இதனையே செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.

ஜாவா பைக்கை தலை மேல் வைத்து கொண்டாடியவர்களுக்கு கிடைத்த பரிசு இதுதான்... அதிர்ச்சி தகவல்...

ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கான டிமாண்ட் மிகப்பெரிய அளவில் உள்ளது என்பதை மறுக்கவே முடியாது. ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கு புக்கிங் செய்து விட்டு ஆயிரக்கணக்கானோர் காத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் ஜாவா டெலிவரிக்காக காத்திருப்போரின் எண்ணிக்கையை தெளிவாக சொல்ல முடியாது. ஏனெனில் ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கு வந்துள்ள புக்கிங் எண்ணிக்கை எவ்வளவு? என்ற தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

Source: Jawa Twitter

More from DriveSpark

Article Published On: Monday, April 22, 2019, 17:37 [IST]
English summary
Delivery Delay: Jawa Customers Unhappy. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+