சென்னையில் 3 புதிய ஜாவா மோட்டார்சைக்கிள் ஷோரூம்கள் திறப்பு!
ஒரே நாளில் சென்னையில் 3 புதிய ஜாவா மோட்டார்சைக்கிள் ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளன. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த நவம்பரில் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் மீண்டும் இந்தியாவில் அறிமுகமானது. மஹிந்திரா நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் ஜாவா மோட்டார்சைக்கிள்களின் விற்பனையை கையாள இருக்கிறது.

இந்த நிலையில், நாடு முழுவதும் டீலர்களை நியமித்த அந்நிறுவனம் தற்போது ஷோரூம்களை திறந்து வருகிறது. பெங்களூர், டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஜாவா மோட்டார்சைக்கிள் ஷோரூம்கள் திறக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து, சென்னையிலும் 3 இடங்களில் ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கான விற்பனையகம் திறக்கப்பட்டுள்ளன. ஒரே நாளில் திறப்பு விழா நடத்தப்பட்டது.

சென்னையில் முதலாவது ஜாவா மோட்டார்சைக்கிள் ஷோரூம் அடையாறில் பெசன்ட் அவென்யூ பகுதியில் திறக்கப்பட்டது. பீனிக்ஸ் மோட்டார்ஸ் என்ற பெயரில் இந்த நிறுவனம் செயல்படும்.

இரண்டாவதாக குரோம்பேட்டை, காமராஜ் நகரில் அல்டிமேட் மோட்டார்ஸ் என்ற பெயரில் ஜாவா மோட்டார்சைக்கிள் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. மூன்றாவது ஜாவா ஷோரூம் அண்ணா நகரில் ஜேஎம்பி மோட்டார் வேர்ல்டு என்ற பெயரில் திறக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஷோரூம்களில் ஜாவா மோட்டார்சைக்கிள்களை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஷோரூம் திறப்பு விழாவில் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் வருகை தந்து ஜாவா மோட்டார்சைக்கிள்களை பார்த்து சிலிர்த்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆசிஷ் ஜோஷி கூறுகையில்," ஜாவா மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து வாடிக்கையாளர் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை மிக சிறப்பாக அமைந்துள்ளது.

அடுத்த மாத மத்தியிலிருந்து நாடு முழுவதும் அனைத்து ஷோரூம்களும் முழுமையாக செயல்பாட்டு வந்துவிடும். மார்ச் மாதம் முதல் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு மோட்டார்சைக்கிள்களை டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கும்.

பழைய மோட்டார்சைக்கிள்களை எக்ஸ்சேஞ்ச் செய்வதற்கான சிறப்பு திட்டங்களை வழங்க உள்ளோம். அதேபோன்று, பல முன்னணி கடன் நிறுவனங்களுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான ," என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, ஹைதராபாத் நகரிலும் ஷோரூம்ககள் திறக்கப்பட்டுள்ளன. மொத்தமாக இதுவரை மொத்தம் 23 ஜாவா ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மாத இறுதிக்குள் 100 ஷோரூம்களை திறக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








