ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்!

கடந்த வருடத்தில் காட்சிக்காக வைக்கப்பட்ட ஜாவா பெராக் பைக்கின் அறிமுகம் கடந்த நவம்பர் 15ஆம் தேதி ஜாவா நிறுவனத்தின் 90-ஆம் ஆண்டுவிழாவை முன்னிட்டு நடைபெற்றது. பைக் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டாலும் இன்னும் எந்த டீலர்ஷிப்களிலும் இந்த பைக்கிற்கான முன்பதிவு துவங்கவில்லை.

ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்!

இருப்பினும் மும்பை, மேற்கு அந்தேரியில் உள்ள க்ளோபல் ஜாவா டீலர்ஷிப் முதல் ஆளாக ஜாவா பெராக் பைக்கின் டெஸ்ட் ட்ரைவ்-ஐ ஆரம்பித்துள்ளது. இதனால் அடுத்த மாதத்தில் இருந்து இந்தியாவில் உள்ள அனைத்து ஜாவா டீலர்ஷிப்களும் டெஸ்ட் ட்ரைவ்-ஐ துவங்கிவிடுவார்கள் என தெரிகிறது.

ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்!

அதனை தொடர்ந்து 2020 ஜனவரி 1 முதல் ஜாவா பெராக் பைக்கிற்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுவிடும். ஆனால் பைக் டெலிவரிகள் சில மாதங்கள் கழித்து ஏப்ரல் 1ல் இருந்து தான் ஆரம்பமாகவுள்ளன.

ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்!

இதற்கிடையில் டெஸ்ட் ட்ரைவ்-ஐ துவங்கியுள்ள க்ளோபல் ஜாவா டீலர்ஷிப்பில் முதல் ஆளாக பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்தவரின் பெயர் கல்பேஷ் டெதியா. இவர் டெஸ்ட் ட்ரைவ் புகைப்படங்களை தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டு, இது அருமையான பைக். அமேசிங் பிக்-அப், 350சிசி பைக்கை ஓட்டுகிறோம் என்கிற பதட்டமான உணர்வையே இது தரவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்!

1946ல் இரண்டாம் உலகப்போரின்போது பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட ஒரிஜினல் பெராக் பைக்கின் தோற்றத்தை அடிப்படையாக கொண்டு தான் இந்த பெராக் பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்ணீர் துளி வடிவிலான பெட்ரோல் டேங்க், லோ ஸ்லங் இருக்கை மற்றும் குறைவான அகலத்தில் ஃபெண்டர்ஸ் போன்றவை அனைத்து அப்படியே ஒரிஜினல் பெராக் பைக்கில் உள்ளதை போலவே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்!

வட்டவடிவிலான ஹெட்லைட், கண்ணாடிகள், ஹேண்டில் போன்றவை வடிவமைக்கப்பட்டிருக்கும் விதங்களை வைத்து பார்த்தால் ரைடர் மிக சவுகரியமான பயணத்தை மேற்கொள்ளலாம். மேட் ப்ளாக் நிறத்தில் இந்த பெராக் பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டேங்க் மற்றும் பக்கவாட்டில் மட்டும் கூடுதலாக தங்கம் நிறத்தில் லோகோகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்!

இரு சக்கரங்களும் 90/90 கோணத்தில் முறையே 18 மற்றும் 17 இன்ச் அளவுகளில் உள்ளன. இந்த பைக்கின் 334சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் 30 பிஎச்பி பவர் மற்றும் 31 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த வெளிப்படுத்தும் ஆற்றல் அளவானது ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகளை விட 3 பிஎச்பி மற்றும் 3 என்எம் கூடுதலாகும். இந்த என்ஜினுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்!

இந்த பெராக் பைக் ஜாவா நிறுவனத்தின் வழக்கமான பெரிய ஸ்விங்கார்ம் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் அமைப்பிற்கு பதிலாக, ட்வின் ஷாக் 280 மிமீ டிஸ்க்கை முன்புறத்திலும் ட்வின் ஷாக் 240 மிமீ டிஸ்க்கை பின்புறத்திலும் கொண்டிருக்கின்றன. இதனுடன் ட்யூல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் அமைப்பும் வழங்கப்படுகிறது.

ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்!

ஜாவா பெராக் பைக்கிற்கு போட்டியாக ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தான் 350சிசி பைக்கின் சிங்கிள் சீட் வெர்சனை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. ராயல் எண்ட்பீல்டின் இந்த சிங்கிள் சீட் வெர்சன் பைக்கை பற்றி மேலும் அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்!

கடந்த வருடம் இந்த பெராக் பைக்குடன் கண்காட்சியில் வைக்கப்பட்ட ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகள் இன்னமும் தயாரிப்பில் தான் இருக்கிறது. இவ்விரு பைக்குகளை முன்பதிவு செய்தவர்கள் கிட்டத்தட்ட ஒரு வருடமாக காத்திருக்கும் நிலையில் ஜாவா பெராக்கின் டெஸ்ட் ட்ரைவ் துவங்கப்பட்டிருப்பது, அவர்களுக்கு சிறிது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Photo Credit: Kalpesh Dehdhia

More from DriveSpark

Article Published On: Monday, November 18, 2019, 20:07 [IST]
English summary
Jawa Perak test ride starts at Mumbai dealership
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+