கவாஸாகி நின்ஜா 400 பைக்கில் விசேஷ வண்ணத் தேர்வுகள் அறிமுகம்!

புதிய வண்ணத் தேர்வுகளில் கவாஸாகி நின்ஜா 400 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கவாஸாகி நின்ஜா 400 பைக்கில் விசேஷ வண்ணத் தேர்வுகள் அறிமுகம்!

கடந்த மாதம் ஜப்பானில் கவாஸாகி நின்ஜா 400 பைக்கின் புதிய வண்ணத் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த புதிய வண்ணத் தேர்வுகள் தற்போது இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

கவாஸாகி நின்ஜா 400 பைக்கில் விசேஷ வண்ணத் தேர்வுகள் அறிமுகம்!

கவாஸாகி நின்ஜா 400 பைக்கில் இப்போது மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் - லைம் க்ரீன் மற்றும் லைம் க்ரீன் - எபோனி (கேஆர்டி எடிசன்) ஆகிய இரண்டு புதிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். இந்த புதிய வண்ணத் தேர்வுகள் இந்தியாவில் தலா 10 யூனிட்டுகள் மட்டுமே லிமிடேட் எடிசன் மாடலாக விற்பனை செய்யப்பட இறுக்கிறது.

கவாஸாகி நின்ஜா 400 பைக்கில் விசேஷ வண்ணத் தேர்வுகள் அறிமுகம்!

இது விசேஷ வண்ணத் தேர்வுகளாக வந்தாலும் விலையில் எந்த மாற்றங்களும் இல்லை. தற்போது விற்பனை செய்யப்படும் ரூ.4.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலேயே இந்த இரண்டு புதிய வண்ணத் தேர்வுகளும் கிடைக்கும்.

கவாஸாகி நின்ஜா 400 பைக்கில் விசேஷ வண்ணத் தேர்வுகள் அறிமுகம்!

மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் - லைம் க்ரீன் வண்ணத் தேர்வில் கருப்பு வண்ணத்தின் அடிப்படையில் ஆங்காங்கே கிளி பச்சை வண்ண ஸ்டிக்கர் அலங்காரத்துடன் கவர்ச்சியாக இருக்கிறது. கூடுதலாக சிவப்பு வண்ண ஸ்டிக்கர் அலங்காரமும் தூக்கலாக இருக்கிறது.

கவாஸாகி நின்ஜா 400 பைக்கில் விசேஷ வண்ணத் தேர்வுகள் அறிமுகம்!

லைம் க்ரீன்- எபோனி கேஆர்டி எடிசன் மாடலில் நின்ஜா பைக்கின் பாரம்பரியமான கிளி பச்சை வண்ணத்தில் கூடுதலாக சிவப்பு வண்ண ஸ்டிக்கர் அலங்காரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஃபேரிங் பேனல்களில் தங்க வண்ணத்திலான 400 என்ற பேட்ஜ் இடம்பெற்றுள்ளது.

கவாஸாகி நின்ஜா 400 பைக்கில் விசேஷ வண்ணத் தேர்வுகள் அறிமுகம்!

புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக்கில் 399 சிசி லிக்யூடு கூல்டு பேரலல் ட்வின் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 47.5 பிஎச்பி பவரையும், 36 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

கவாஸாகி நின்ஜா 400 பைக்கில் விசேஷ வண்ணத் தேர்வுகள் அறிமுகம்!

புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக்கில் இரட்டை எல்இடி ஹெட்லைட்டுகள், மல்டி பங்ஷன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், க்ளிப் ஆன் ஹேண்டில்பார், ஸ்டெப் இருக்கைகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

கவாஸாகி நின்ஜா 400 பைக்கில் விசேஷ வண்ணத் தேர்வுகள் அறிமுகம்!

இந்த பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் உள்ளன. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகளும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்ப்டடு இருக்கின்றன.

கவாஸாகி நின்ஜா 400 பைக்கில் விசேஷ வண்ணத் தேர்வுகள் அறிமுகம்!

கவாஸாகி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களில் இந்த புதிய வண்ணத் தேர்வுகளுக்கு புக்கிங் ஏற்கப்படுகிறது. இந்த மாத இறுதியில் இருந்து டெலிவிரி கொடுக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

More from DriveSpark

di
Article Published On: Thursday, September 12, 2019, 11:17 [IST]
English summary
Kawasaki Motor has introduced two new special colour schemes for the Ninja 400 in India.
மேலும்... #கவாஸாகி #kawasaki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+