கவாஸாகியின் இந்த மாடலை பெற்ற முதல் இந்தியர் இவர்தான்... சிறப்பு தகவல்...!

கவாஸாகியின் நிஞ்சா இசட்எக்ஸ் 10ஆர் பைக்கின் டெலிவரி தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

கவாஸாகியின் இந்த மாடலை பெற்ற முதல் இந்தியர் இவர்தான்... சிறப்பு தகவல்...!

கவாஸாகி நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த நிஞ்சா பைக் வரிசையில் இசட்எக்ஸ் 10ஆர் என்ற புதிய மாடலை கடந்த மே மாதம் 21ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்து விற்பனைக்கு வந்த புதிய நிஞ்சா பைக், ரூ. 13.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது.

கவாஸாகியின் இந்த மாடலை பெற்ற முதல் இந்தியர் இவர்தான்... சிறப்பு தகவல்...!

இந்த புதிய பைக்கிற்கான புக்கிங் கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி முதல் நடைபெற்று வந்த நிலையில், அதனை டெலிவரி செய்யும் பணியை கவாஸாகி நிறுவனம் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ஆரம் கவாஸாகி என்ற டீலர், அம்ரித் பிர் சிங் என்ற வாடிக்கையாளருக்குநிஞ்சா இசட்எக்ஸ் 10ஆர் பைக்கின் முதல் மாடலை டெலிவரி செய்துள்ளது. இதுகுறித்த செய்தியை மேக்ஸ்அபவுட் என்ற ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

கவாஸாகியின் இந்த மாடலை பெற்ற முதல் இந்தியர் இவர்தான்... சிறப்பு தகவல்...!

கவாஸாகி நிறுவனம், நிஞ்சா இசட்எக்ஸ் 10ஆர் பைக்கை, சிகேடி வழியாக இந்தியாவில் விற்பனைச் செய்து வருகிறது. கவாஸாகியின் இந்த நடவடிக்கையால், அதன் மோட்டார்சைக்கிள்கள் சர்வதேச தரத்திற்கு ஏற்ப அதிக தொழில்நுட்பம் பொருந்தியதாகவும், நியாயமான விலையைக் கொண்டதாகவும் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

கவாஸாகியின் இந்த மாடலை பெற்ற முதல் இந்தியர் இவர்தான்... சிறப்பு தகவல்...!

அந்தவகையில், தற்போது டெலிவரி செய்யப்படும் நிஞ்சா இசட்எக்ஸ் 10ஆர் பைக்குகள், இதற்கு முன்பாக விற்பனையில் இருந்த பைக்கைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கின்றது. அதேசமயம், ஸ்டைலிஸான கிராஃபிக் மற்றும் ஸ்போர்ட் லுக்கினால் இந்த பைக் மிகவும் ரம்மியமான லுக்கைப் பெற்றதாக இருக்கின்றது.

கவாஸாகியின் இந்த மாடலை பெற்ற முதல் இந்தியர் இவர்தான்... சிறப்பு தகவல்...!

அவ்வாறு, இந்த பைக்கை மிகவும் அழுகுபடுத்தும் வகையில், பச்சை நிறம் மற்றும் கருப்பு நிறத்தால் வர்ணம் பூசி அலங்கரிக்கப்பட்டுள்ளது. பைக்கின் பெட்ரோல் டேங்க் மற்றும் முன்பக்க மட்குவார்ட் பகுதிக்கு முழுவதுமாக பச்சை நிறம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஹெட்லேம்ப் மாஸ்க் மற்றும் டெயில் விளக்கு பகுதியில் பச்சை நிறம் மற்றும் பகுதியாக கருப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.

கவாஸாகியின் இந்த மாடலை பெற்ற முதல் இந்தியர் இவர்தான்... சிறப்பு தகவல்...!

ஒருவர் மட்டுமே செல்லும் வகையில் காட்சியளிக்கும் இந்த பைக்கில், பின்னிருக்கை இல்லை. பின் பக்க இருக்கை வேண்டுமென விரும்பும் வாடிக்கையாளர்கள், அதனை கூடதலாக பணம் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம். இத்துடன் பின் பக்கத்திற்கான கால் வைக்கும் ஸ்டாண்டுகள் வழங்கப்படுகின்றன. மேலும், பைக்கில் மூன்று ஸ்போக்குகளைக் கொண்ட, கருப்பு நிற பினிஸிங்கினாலான அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கவாஸாகியின் இந்த மாடலை பெற்ற முதல் இந்தியர் இவர்தான்... சிறப்பு தகவல்...!

இவற்றுடன், கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ் 10ஆர் பைக்கில், 998சிசி, இன்-லைன் 4 சிலிண்டர், லிக்யூட் கூல்ட் திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 203 பிஎச்பி பவரை 13,500 ஆர்பிஎம்மிலும், 114.9 என்எம் டார்க்கை 11,200 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. ஆனால், இதன் முந்தைய மாடல் 200.2 பிஎச்பி பவரை மட்டுமே வெளிப்படுத்தியது.

கவாஸாகியின் இந்த மாடலை பெற்ற முதல் இந்தியர் இவர்தான்... சிறப்பு தகவல்...!

6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த எஞ்ஜினில் புது விஷயமாக, ஃபிங்கர்-பாலோவர் வால்வ் ஆக்டுவேஷன் இணைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பான சஸ்பென்ஷனுக்காக, அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும் ரகத்திலான 43எம்எம் ஷோவா இன்வெர்டட் ஃபோர்க் முன்பக்கத்திலும், பேக்-லிங்க் கேஸ் சார்ஜட் மோனோசாக் பின்பக்கத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.

கவாஸாகியின் இந்த மாடலை பெற்ற முதல் இந்தியர் இவர்தான்... சிறப்பு தகவல்...!

ஒட்டு மொத்தமாக 206 கிலோ எடைக் கொண்டுள்ள இந்த பைக்கில், பாதுகாப்பு அம்சங்களாக முன்பக்கத்தில், ப்ரெம்பா எம்50 மோனோபிளாக் காலிபர்ஸ் அமைப்பு கொண்ட 330எம்எம் ட்யூவல் செமி ப்ளோட்டிங் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்தில் சிங்கிள் பிஸ்டன் அமைப்பு கொண்ட 220எம்எம் டிஸ்க் பிரேக்கும் இணைக்கப்பட்டுள்ளது. இது ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்திற்கு இணையானது.

கவாஸாகியின் இந்த மாடலை பெற்ற முதல் இந்தியர் இவர்தான்... சிறப்பு தகவல்...!

மேலும், தொழில்நுட்ப வசதிகளாக, இந்த பைக்கில் கவாஸாகியின் குயிக் ஷிஃப்ட் சிஸ்டம், எலக்ட்ரானிக் டிராக்ஷன் கன்ட்ரோல், கார்னரிங் மேனேஜ்மென்ட் மற்றும் லாஞ்ச் கன்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கவாஸாகியின் இந்த மாடலை பெற்ற முதல் இந்தியர் இவர்தான்... சிறப்பு தகவல்...!

இந்த பைக் இந்தியாவில், யமஹா ஒய்இசட் ஆர்1, பிஎம்டபிள்யூ எஸ்100ஆர்ஆர், அப்ரில்லா ஆர்எஸ்வி4 ஆர்ஆர், சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் ஆர்1000ஆர், டுகாட்டி பனிக்ளே, வி4, எம்வி அகஸ்டா எஃப்4 மற்றும் ஹோண்டா சிபிஆர் 1000ஆர் ஆகிய பைக்குகளுடன் போட்டியை சந்திக்கும்.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki Ninja ZX-10R Delivery Starts. Read In Tamil.
Story first published: Tuesday, June 4, 2019, 16:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X