அதிக சக்தி கொண்ட 2019 நிஞ்சா பைக் அறிமுகம்: இதன் முன்பதிவிற்கான தொகை எவ்வளவு தெரியுமா...?
கவாஸாகி நிறுவனம், இதற்கு முன்பாக விற்பனைக்கு வெளியிட்ட நிஞ்சா பைக்குகளைக்காட்டிலும் தற்போது கூடுதல் சக்தி கொண்ட 2019 நிஞ்சா இசட்எக்ஸ்10ஆர் மற்றும் 2019 நிஞ்சா இசட்எக்ஸ்10ஆர் கேஆர்டி எடிசன் பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான புக்கிங்கும் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

கவாஸாகி இந்தியா நிறுவனம் அதன் புதிய மடால்களான அனைத்து 2019 நிஞ்சா இசட்எக்ஸ்10ஆர் பைக்குகள் மற்றும் 2019 நிஞ்சா இசட்எக்ஸ்10ஆர் கேஆர்டி எடிசன் பைக்குகளை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும், இந்த பைக்குகளுக்கிற்கான புக்கிங்குகளை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் தொடங்கியுள்ளது.

இந்த இரண்டு ஸ்போர்ட்ஸ் பைக்குகளும் அதிக சக்தி மற்றும் நவீன வேரியண்டாக களமிறக்கப்பட உள்ளன. அந்த வகையில், இந்த புதிய மாடல் நிஞ்சா பைக்குகளில் அப்கிரேட் செய்யப்பட்ட எஞ்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை, இதற்கு முன்பாக விற்பனைக்கு வந்த நிஞ்சா பைக்குகளைக்காட்டிலும் அதிக சக்தி வாய்ந்தவையாகும்.

அந்த வகையில், பழைய மாடல் கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்10ஆர் மாடலைக் காட்டிலும் 3 பிஎஸ் பவர் புதிய நிஞ்சா பைக்குகளில் அதிகமாக உள்ளது. அவ்வாறு, தற்போது வரவிருக்கும் நிஞ்சா பைக்குகளில் 4 ஸ்ட்ரோக், 4 சிலிண்டர், டிஓஎச்சி, 4 வால்வ், லிக்யூட் கூல்ட், 1 லிட்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 203 பிஎஸ் பவரை வழங்கும் திறன்கொண்டது.

பழைய மாடல் கவஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்-10ஆர் மற்றும் இசட்எக்ஸ்-10ஆர்ஆர் ஆகிய இரு பைக்குகளும் கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் 29ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, அதில் இசட்எக்ஸ்-10ஆர் பைக் இந்திய மதிப்பில் ரூ. 12.80 லட்சமாக இருந்தது. அதேபோன்று, இசட்எக்ஸ்-10ஆர்ஆர் பைக்கின் விலை ரூ.16.10 லட்சமாக இருந்தது.

அதேசமயம் விற்பனைக்கு அறிவிக்கப்படட சில வாரங்களிலேயே அனைத்து பைக்குகளும் விற்றுத் தீர்ந்தன. இதேபோன்று, தற்போது அறிமுகமாகும் பைக்குகளுக்கும் வரவேற்பு கிடைக்கம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டப்பட்ட சக்தி, புதிய கலர் போன்ற பல சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வரும் இந்த மோட்டார்சைக்கிளுக்கான புக்கிங் தற்போது தொடங்கியுள்ளது. இதற்கு, வாடிக்கையாளர்கள் ரூ. 1.5 லட்சம் செலுத்தி முன் பதிவைச் செய்ய வேண்டும்.

மேலும், இந்த புக்கிங்கானது இன்று (ஏப்ரல் 26) முதல் தொடங்கியுள்ளது. இது, வருகின்ற மே மாதம் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் குறிப்பிட்ட அளவு பைக்குகளுக்கு மட்டுமே ப்ரீ புக்கிங் செய்யப்பட உள்ளது.

புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூடிய விரைவில் பைக்குகள் டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, 2020 எடிசனாக வெளியாக இருக்கும் சிகேடி வேரியண்ட் சற்று கணிசமான விலையுயர்வைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த புதிய மாடல் பைக்குகள் மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள பிளாண்டில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.


Click it and Unblock the Notifications








