போலீஸிடம் வசமாக சிக்கிய கவஸாகி நிஞ்சா உரிமையாளர்... எதற்கு தெரியுமா...?

இந்தியாவில் காவல்துறையினர் முறைகேட்டில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகளை குறி வைத்தே போலீசார்களின் நடவடிக்கை அரங்கேற்றப்பட்டு வருகின்றது.

போலீஸிடம் வசமாக சிக்கிய கவஸாகி நிஞ்சா உரிமையாளர்... எதற்கு தெரியுமா...?

அந்தவகையில், ஹெல்மெட் இல்லாமல் பயணித்தல், ரேஷ் டிரைவ் செய்தல், ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்தல், ஆஃப்டர் மார்க்கெட் சாதனங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளுக்கு எதிராக போலீஸார் தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது.

போலீஸிடம் வசமாக சிக்கிய கவஸாகி நிஞ்சா உரிமையாளர்... எதற்கு தெரியுமா...?

பெரும்பாலும், போலீஸார் உயர் விலை கொண்ட மற்றும் அதிக சத்தத்துடன் செல்லும் இருசக்கர வாகனங்களை மடக்கி ஆய்வு மேற்கொள்வது வழக்கம்.

அதன்படி, விலையுயர்ந்த பைக்காக இருக்கும் கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்10ஆர் பைக்கை, பெங்களூரு நகர போக்குவரத்து போலீஸார் மடக்கினர்.

போலீஸிடம் வசமாக சிக்கிய கவஸாகி நிஞ்சா உரிமையாளர்... எதற்கு தெரியுமா...?

முதலில், பைக்கின் நம்பர் பிளேட் சேதமடைந்திருந்த காரணத்திற்காகவே அவர் நிறுத்தப்பட்டார். பின்னர், அவரின் ஓட்டுநர் உரிமம் மற்றும் பைக்கின் சான்றுகளைச் சாரிபார்த்த காவலர், காரில் அமர்ந்திருந்த மூத்த அதிகாரியைச் சந்திக்குமாறு அனுப்பி வைத்தார்.

போலீஸிடம் வசமாக சிக்கிய கவஸாகி நிஞ்சா உரிமையாளர்... எதற்கு தெரியுமா...?

அங்கு சென்றபின், கவாஸாகி பைக்கின் சைலென்சர் ஆஃப்டர் மார்க்கெட்டில் இருந்து பொருத்தப்பட்டிருப்பதாக கூறி போலீஸார் செலாண் வழங்கினார். இதைக் கண்ட, நிஞ்சா பைக்கின் உரிமையாளர், நம்பர் பிளேட்டிற்காக தானே என்னை மடக்கினீர்கள், இப்போது என்ன சைலென்சருக்காக செலாண் போட்டுள்ளீர் என வாக்கு வாதம் செய்தார்.

போலீஸிடம் வசமாக சிக்கிய கவஸாகி நிஞ்சா உரிமையாளர்... எதற்கு தெரியுமா...?

ஆனால், அந்த இளைஞரின் நம்பர் பிளேட் மற்றும் சைலென்சர் ஆகிய இரண்டும் போக்குவரத்து விதியை மீறியதாக இருந்துள்ளது. இருப்பினும், தவறான தகவல் பரிமாற்றத்தால் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சருக்கு மட்டும் ரூ. 1,100-க்கான அபராத ரசீது வழங்கப்பட்டது.

ஒரே சமயத்தில், போலீஸாரால் இரு வேறு குற்றங்களுக்கான அபராத தொகையை வழங்க முடியும். ஆனால், இங்கு அது தவிர்க்கப்பட்டுள்ளது.

போலீஸிடம் வசமாக சிக்கிய கவஸாகி நிஞ்சா உரிமையாளர்... எதற்கு தெரியுமா...?

அண்மைக் காலங்களாக, போக்குவரத்து போலீஸார் ஆஃப்டர் மார்க்கெட் சாதனங்களுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, அதிக ஒலியை எழுப்பும் சைலென்சர் மற்றும் ஹாரன்களுக்கு எதிராக தீவிர வேட்டையை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸிடம் வசமாக சிக்கிய கவஸாகி நிஞ்சா உரிமையாளர்... எதற்கு தெரியுமா...?

அந்தவகையில், ஆஃப்டர் மார்க்கெட் பொருட்களைப் பறிமுதல் செய்யும் போலீஸார், அதனை அங்கேயே அழித்து வருகின்றனர். அல்லது, அவற்றை பறிமுதல் செய்து, அந்தந்த வாகன உரிமையாளர்கள்மீது வழக்கு பதிவு செய்கின்றனர்.

போலீஸிடம் வசமாக சிக்கிய கவஸாகி நிஞ்சா உரிமையாளர்... எதற்கு தெரியுமா...?

ஆஃப்டர் மார்க்கெட்டில் விற்பனையாகும் பல பொருட்கள் விதிகளை மீறி தயாரிக்கப்பட்டவையாக இருக்கின்றன. ஆகையால், அவற்றை பயன்படுத்தும்போது, நாம் உணர முடியாத வகையிலான பாதிப்புகளை நமக்கும், சுற்றுப்புறச்சூழலுக்கும் அவை உண்டாக்கி விடுகின்றன. இதன்காரணமாகவே, ஆஃப்டர் மார்க்கெட் சாதனங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

போலீஸிடம் வசமாக சிக்கிய கவஸாகி நிஞ்சா உரிமையாளர்... எதற்கு தெரியுமா...?

அதிலும், மிக முக்கியமாக ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள், அரசு நிர்ணயித்த அளவைக் காட்டிலும் அதிகமான சப்தத்தை வெளிப்படுத்துகின்றன. இதனால், ஒலி மாசு உண்டாகுகின்றது. அதுமட்டுமின்றி, இந்த சைலென்சர்களில் இருந்து வெளிவரும் அதீத சத்தம் சக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறுகின்றது.

போலீஸிடம் வசமாக சிக்கிய கவஸாகி நிஞ்சா உரிமையாளர்... எதற்கு தெரியுமா...?

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் ஆஃப்ட் மார்க்கெட் தரம் கொண்ட பொருட்களைப் பயன்படுத்த அரசு தடைவிதித்துள்ளது. இதனடிப்படையிலேயே கவாஸாகி நிஞ்சா பைக்கின் உரிமையாளரும் தற்போது சிக்கியுள்ளார்.

இதேபோன்ற அதிரடி நடவடிக்கையை அனைத்து மாநில போலீஸாரும், முறைகேட்டில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளை போலீஸார் சுற்றி வளைத்து வருகின்றனர்.

போலீஸிடம் வசமாக சிக்கிய கவஸாகி நிஞ்சா உரிமையாளர்... எதற்கு தெரியுமா...?

அவ்வாறு ஆயிரக்கணக்கான ராயல் என்பீல்டு பைக்குகளின் முறையற்ற சைலென்சர்களை இதுவரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்த தகவலை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும். மேலும், இவற்றிற்கான எதிரான நடவடிக்கை அண்மைக்காலங்களாக தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kawasaki Ninja ZX10R Busted For Loud Exhaust. Read In Tamil.
Story first published: Tuesday, August 20, 2019, 11:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X