பாரம்பரிய தோற்றத்துடன் இந்தியாவுக்கு வருகை தரும் கவாஸாகி: கலக்கத்தில் ராயல் என்ஃபீல்ட், டிரையம்ப்!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கவாஸாகி w800 மாடல் பைக் இந்தியாவில் இந்த வருடம் விற்பனைக்கு வர உள்ளது.

ஜப்பானை மையமாகக் கொண்டு இயங்கி வரும் கவாஸகி பைக் நிறுவனம், ஸ்போர்ட்ஸ் ரக வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் வெளியான நிஞ்சா உள்ளிட்ட பல்வேறு மாடல் பைக்குகள் சர்வேத அளவில் மிகவும் பிரபலமானவை.

இதைத்தொடர்ந்து, கவஸாகி நிறுவனம் பிலிப்பைன்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தனது உற்பத்தி நிலையங்களைத் தொடங்கி உள்ளது. இளைஞர்கள், நடுத்தர வயதினர் என அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ப ஸ்போர்ட்ஸ் ரக வாகனங்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனம் முன்னணி வகித்து வருகிறது.

அதன்படி, கவாஸகியின் w வரிசையில் வெளியிடப்பட்ட மாடல்களில் w800 மாடல் மிகவும் பிரசித்திப் பெற்ற மற்றும் அதிக விற்பனையான மாடல் ஆகும். இந்த மாடல் பைக் தற்போது வரை வெளிநாடுகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த வருடத்தில் கவாஸகி w800 மாடல் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மாடல், பிரத்யேகமான பாரம்பரிய லுக்கைக் கொண்டுள்ளது. ஸ்டைல் மட்டும் தான் பழசு ஆனால், அந்த பைக்கின் தொழில்நுட்பம் நவீன யுகத்துக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது.

கவாஸகியின் w800 மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ள வட்ட வடிவிலான ஹெட்லைட், முந்தைய கால ரெட்ரோ பைக்குகளின் ஸ்டைலைக் குறிக்கிறது. அதே சமயம் தொழில்நுட்பத்தைக் குறிக்கும் விதமகா அதில் LED விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, அந்த பைக்கின் பெட்ரோல் டோங்க் அமைப்பு, இருக்கை, டுயூவல் காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷன், மட்குவார்ட், சைலென்சர், ஸ்போக்ஸ் வீல் ஆகியவையும் பாரம்பரிய லுக்குக்கு குறைவில்லாமல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் இரண்டு சிலிண்டர்கள் கொண்ட 773 cc எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 47.5 குதிரைத் திறனையும் 6,500rpm, 62.9Nm டார்க்யுவையும் வெளிப்படுத்தும்.

அதபோல, இந்த பைக்கில் நவீன தொழில்நுட்பங்களாக தற்போதைய காலக்கட்டத்துக்கு ஏற்ப டிஸ்க் பிரேக் மற்றும் டெலிஸ்கோப்பிக் செஸ்பென்ஷன் ஆகியவைப் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த பைக்கின் விலையானது, ரூ. 6.5 முதல் 7 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் இந்திய இருசக்கர வாகன சந்தையில் பாரம்பரிய மிக்க மாடல் பைக்குகளின் விற்பனை அதிகரித்து வரும்நிலையில், கவஸாகியின் w800 வரவு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு கவாஸகி விற்பனையைத் துவங்கும் பட்சத்தில் ராயல் என்ஃபீல்ட் 650, டிரையம்ப் ஆகிய பைக்குகளுடன் கடுமையான போட்டி ஏற்படும் என எதிர்பார்க்ப்படுகிறது.


Click it and Unblock the Notifications








