புதிய கவாஸாகி டபிள்யூ800 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!
பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் கூடிய புத்தம் புதிய மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது கவாஸாகி நிறுவனம். இந்த புதிய மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கவாஸாகி டபில்யூ-800 ஸ்ட்ரீட் என்ற பெயரில் வந்துள்ள இந்த புதிய மோட்டார்சைக்கிள் தனித்துவமான பிரிமீயம் பைக் பிரியர்களையும், பழமையை போற்றும் மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களையும் வெகுவாக கவரும்.

1965 காலக்கட்டத்தில் கவாஸாகி நிறுவனம் தயாரித்த W1 என்ற மோட்டார்சைக்கிளின் டிசைன் அம்சங்களுடன் கூடிய நவீன யுக மோட்டார்சைக்கிள் மாடலாக இந்தியாவில் களமிறங்கியுள்ளது.

பாரம்பரிய மோட்டார்சைக்கிள்களில் காணப்படும் வட்ட வடிவிலான ஹெட்லைட் அமைப்பு, பெட்ரோல் டேங்க், ஸ்போக்ஸ் வீல்கள், இருக்ககைகள், சைலென்சர் ஆகியவற்றுடன் இந்த மோட்டார்சைக்கிள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய மோட்டார்சைக்கிளில் பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடன் கூடிய 773 சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. பவரை வெளிப்படுத்தும் திறன் குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும், இந்த மோட்டார்சைக்கிளில் 62.9 என்எம் டார்க் திறனை அளிக்க வல்லதாக இருக்கும்.

புதிய கவாஸாகி டபிள்யூ-800 ஸ்ட்ரீட் மோட்டார்சைக்கிளானது டபுள் கிராடில் சேஸீயில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில், முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் டியூவல் ஷாக் அப்சார்பர்களும் உள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 270 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் முக்கிய பாதுகாப்பு அம்சமாக கூறலாம்.

புதிய கவாஸாகி டபிள்யூ-800 ஸ்ட்ரீட் பைக்கில் 18 அங்குல அலுமினியம் ஸ்போக்ஸ் சக்கரங்கள், ஸ்லிப்பர் க்ளட்ச், 5 விதமான நிலைகளில் மாற்றும் வசதியுடன் க்ளட்ச் லிவர், 4 வே அட்ஜெஸ்ட் வசதியுடன் பிரேக் லிவர், இரட்டை சைலென்சர்கள், அடக்கமான சுவிட்சுகள் ஆகியவை இதன் நவீன தொழில்நுட்ப அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

இந்த மோட்டார்சைக்கிளில் இரட்டை டயல்களுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. எல்சிடி திரையுடன் கூடிய மல்டி இன்ஃபர்மேஷன் திரையும் கொடுக்கப்பட்டுள்ளது. இலகுவான கையாளுமை, சிறப்பான இருக்கை அமைப்பு ஆகியவை பாரம்பரிய மோட்டார்சைக்கிளை ஓட்டும் அனுபவத்தை தரும்.

புதிய கவாஸாகி டபிள்யூ-800 ஸ்ட்ரீட் பைக் மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக்/ மெட்டாலிக் மேட் கிராஃபைட் க்ரே என்ற ஒரே வண்ணத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும். முதல் லாட்டில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே முன்பதிவு ஏற்கப்பட உள்ளது.

கவாஸாகி இணையதளம் அல்லது டீலர்கள் மூலமாக இந்த புதிய மோட்டார்சைக்கிளுக்கு முன்பதிவு செய்து கொள்ள முடியும். அடுத்த மாதம் மத்தியில் இந்த புதிய மோட்டார்சைக்கிளுக்கான டெலிவிரி பணிகள் துவங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ரு.7.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய கவாஸாகி டபிள்யூ-800 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுககம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் விற்பனையில் உள்ள பைக் மாடல்களுடன் போட்டி போடும். ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக்கிற்கு இது நேரடி போட்டியாக இருக்கும். ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் ரூ.7.45 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








