கவாஸாகியின் புதிய சூப்பர்சார்ஜ்டு சூப்பர் பைக்கின் புதிய டீசர் வெளியீடு!

கவாஸாகி நிறுவனத்தின் புதிய சூப்பர்சார்ஜ்டு சூப்பர் பைக்கின் புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. பைக்கின் டிசைன், பெயர் உள்ளிட்ட முக்கிய விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கவாஸாகியின் புதிய சூப்பர்சார்ஜ்டு சூப்பர் பைக்கின் புதிய டீசர் வெளியீடு!

கவாஸாகி நிறுவனத்தின் சூப்பர்சார்ஜ்டு எஞ்சின் பொருத்தப்பட்ட புதிய சூப்பர் பைக் இசட் எச்2 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த பைக்கிற்காக வெளியிடப்பட்டு இருக்கும் புதிய டீசரில் இசட்1000 சூப்பர் பைக்கின் டிசைன் அம்சங்களை காண முடிகிறது. அதேநேரத்தில், குறிப்பிட்ட சில மாற்றங்களுடன் வேறுபடுப்பட்டு இருக்கும் என்று நம்பலாம்.

கவாஸாகியின் புதிய சூப்பர்சார்ஜ்டு சூப்பர் பைக்கின் புதிய டீசர் வெளியீடு!

இந்த பைக்கின் பெட்ரோல் டேங்க் மிக பிரம்மாண்டமாகவும், முரட்டுத் தனமான தோற்றத்தையும் இந்த பைக்கிற்கு வழங்கும். பின்புறம் மேல்நோக்கிய வகையில் இருப்பதால், மிரட்டலாக தெரிகிறது.

கவாஸாகியின் புதிய சூப்பர்சார்ஜ்டு சூப்பர் பைக்கின் புதிய டீசர் வெளியீடு!

இந்த பைக்கில் இரட்டை குடுவை அமைப்புடன் கூடிய எல்இடி ஹெட்லை, முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் புளூடூத் இணைப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

நின்ஜா எச்2 பைக்கில் பயன்படுத்தப்படும் ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃப்ரேமில்தான் இந்த புதிய பைக் மாடலும் கட்டமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், துணை ஃப்ரேம் அமைப்பு சற்று மாறுபட்டு இருக்கும்.

கவாஸாகியின் புதிய சூப்பர்சார்ஜ்டு சூப்பர் பைக்கின் புதிய டீசர் வெளியீடு!

இந்த பைக்கில் மிக விசேஷமான பெயிண்ட் பூசப்பட இருக்கிறது. இந்த பெயிண்ட் சிறிய கீறல் மற்றும் வீறல்களிருந்து தானாக சரிசெய்து கொள்ளும் அம்சத்தை பெற்றிருக்கும் என்று தெரிகிறது. இது மிகவும் கவரும் விஷயமாக இருக்கும்.

புதிய கவாஸாகி நின்ஜா எச்2 பைக்கில் பயன்படுத்தப்படும் அதே 4 சிலிண்டர்கள் கொண்ட 998 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் இதிலும் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 231 எச்பி பவரையும், 141 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் இசட் எச்2 பைக்கில் சிறிய மாற்றங்களுடன் வர இருப்பதாக தெரிகிறது.

கவாஸாகியின் புதிய சூப்பர்சார்ஜ்டு சூப்பர் பைக்கின் புதிய டீசர் வெளியீடு!

இந்த பைக்கில் ஹைட்ராலிக் அசிஸ்ட் ஸ்லிப்பர் க்ளட்ச், குயிக் ஷிஃப்டர் வசதிகள் வழங்கப்படும். கவாஸாகி பந்தய அணி வழங்கிய ஆலோசனைகளின் அடிப்படையில் விசேஷ ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு பயன்படுத்தப்பட இருக்கிறது.

புதிய கவாஸாகி இசட் எச்2 பைக்கில் 43 மிமீ இன்வர்டெட் ஃபோர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷனும் பின்புறத்தில் ஓலின்ஸ் நிறுவனத்தின் கேஸ் சார்ஜ்டு சஸ்பென்ஷனும் இடம்பெற இருக்கின்றன. ஓலின்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரானிக் ஸ்டீயரிங் டேம்பரும் இந்த பைக்கில் கொடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

கவாஸாகியின் புதிய சூப்பர்சார்ஜ்டு சூப்பர் பைக்கின் புதிய டீசர் வெளியீடு!

மேலும், பிரெம்போ நிறுவனத்தின் பிரேக் சிஸ்டமும் இதில் இடம்பெற்றிருக்கும். மொத்தத்தில் மிகச் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த புதிய சூப்பர் பைக் மாடல் வரும் 23ந் தேதி உலகளாவிய அளவில் பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 10, 2019, 14:52 [IST]
English summary
Kawasaki has released new teaser video of the upcoming supercharged roadster has confirmed its name - Z H2. The supercharged roadster will debut on 23 October.
மேலும்... #கவாஸாகி #kawasaki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+