விற்பனையில் சக்கை போடு போடும் புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக்!

சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட, புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக் விற்பனையில் கலக்கி வருகிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

விற்பனையில் சக்கை போடு போடும் புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக்!

கேடிஎம் ட்யூக் வரிசை பைக் மாடல்களுக்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்து வருகிறது. இதனால், வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டிற்கு தக்கவாறு, பல்வேறு சிசி திறன் கொண்ட ட்யூக் மாடல்களை கேடிஎம் வரிசை கட்டியுள்ளது.

விற்பனையில் சக்கை போடு போடும் புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக்!

இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பரில் கேடிஎம் ட்யூக் வரிசையில் விலை குறைவான 125சிசி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.1.18 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் களமிறக்கப்பட்டது.

விற்பனையில் சக்கை போடு போடும் புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக்!

கேடிஎம் ட்யூக் பைக் கனவுடன் வலம் வந்த இந்திய இளைஞர்களை சுண்டி இழுத்துள்ளது. மேலும், கேடிஎம் நிறுவனத்தின் விற்பனையிலும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

விற்பனையில் சக்கை போடு போடும் புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக்!

கடந்த மாதம் 3,014 கேடிஎம் 125 ட்யூக் பைக்குகள் விற்பனையாகி இருக்கின்றன. இது கேடிஎம் நிறுவனத்திற்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. கேடிஎம் 125 ட்யூக் பைக்கின் எஞ்சின் சிசி திறன் குறைவாக இருந்தாலும், உருவத்திலும், டிசைனிலும் கேடிஎம் 200 ட்யூக் பைக்கை ஒத்துப்போகிறது.

விற்பனையில் சக்கை போடு போடும் புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக்!

இதனால், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தோற்றம் மட்டுமின்றி, பல முக்கிய பாகங்களை 200சிசி மாடலுடன் பங்கிட்டுக் கொண்டுள்ளது. எனினும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கேடிஎம் 125 ட்யூக் பைக்கில் எல்இடி ஹெட்லைட் உள்ளிட்ட அஅம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்த பைக்கில் இல்லை என்பது குறை.

விற்பனையில் சக்கை போடு போடும் புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக்!

இந்த பைக்கில் இருக்கும் 124.7 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 14.3 பிஎச்பிபவரையும், 12 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதன் ரகத்தில் மிகவும் சக்திவாய்ந்த மாடலாகவும் உள்ளது.

விற்பனையில் சக்கை போடு போடும் புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக்!

இந்த பைக்கில் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் இருப்பது பைக்கின் கவர்ச்சிக்கும், உறுதிக்கும் சிறப்பானதாக உள்ளது. அடுத்து, முன்புறத்தில் இன்வர்டெட் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 10 ஸ்டெப் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளது.

விற்பனையில் சக்கை போடு போடும் புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக்!

இதேபோன்று, முன்சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

விற்பனையில் சக்கை போடு போடும் புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக்!

இந்த பைக் 148 கிலோ எடை கொண்டது. 10.2 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. இந்திய சாலை நிலைகளுக்கு தக்கவாறு 175 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் தரையிலிருந்து 818 மிமீ உயரத்தில் இருக்கை அமைப்பு ஆகியவை குறிப்பிடத்தக்க விஷயங்களாக இருக்கின்றன.

விற்பனையில் சக்கை போடு போடும் புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக்!

புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக் ஆரஞ்ச், வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய மூன்று விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. அனைத்து வண்ண பைக்குகளிலும் ஆரஞ்ச் வர்ணம் பூசப்பட்ட அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, March 23, 2019, 10:59 [IST]
English summary
The KTM 125 Duke becomes the best selling KTM model in the Indian market. Reports have revealed that 3,014 units of the KTM 125 Duke were sold in February 2019. This figure makes it the best-selling KTM India motorcycle yet.
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+