மேலும் ஒரு மாடலை இந்தியாவில் பரிசோதனை செய்த கேடிஎம்: ஸ்பை படங்கள் கசிந்தன...!

கேடிஎம் நிறுவனம் தனது புதிய மாடல் 390 அட்வென்சர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் வைத்து பரிசோதனை செய்யும் ஸ்பை புகைப்படங்கள் கசிந்துள்ளன.

கேடிஎம் 390 அட்வென்சர் மோட்டைர்சைக்கிளின் ஸ்பை படங்கள் கசிந்தன...!

இருசக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் கேடிஎம் நிறுவனம், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் தனது மோட்டார்சைக்கிள்களை விற்பனைச் செய்து வருகிறது. அந்த வகையில், கேடிஎம்-இன் மோட்டார்சைக்கிள்களுக்கென உலகம் முழுவதும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர்கள் இந்த மோட்டார்சைக்கிளிற்கென மிகப்பெரிய சந்தையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

கேடிஎம் 390 அட்வென்சர் மோட்டைர்சைக்கிளின் ஸ்பை படங்கள் கசிந்தன...!

இதேபோன்று, கேடிஎம்-இன் மோட்டார்சைக்கிள்களுக்கு இந்தியாவிலும் தீவிர ரசிகர்கள் இருக்கின்றனர். இதன் காரணமாக, அந்த நிறுவனம் அவ்வப்போது இந்திய இளைஞர்களை வளைத்துப் போடும் வகையில் புதுரக மோட்டார்சைக்கிளை இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது.

கேடிஎம் 390 அட்வென்சர் மோட்டைர்சைக்கிளின் ஸ்பை படங்கள் கசிந்தன...!

அந்த வகையில் மலிவான விலையில் ட்யூக்125 மாடல் மோட்டார்சைக்கிளை கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மோட்டார்சைக்கிளின் சக்தியானது சற்று குறைவாக இருந்தாலும், கேடிஎம் பைக்கிற்கே உரித்தான ஸ்டைலை பெற்றிருந்ததால் அமோகமான விற்பனையைப் பெற்றது.

கேடிஎம் 390 அட்வென்சர் மோட்டைர்சைக்கிளின் ஸ்பை படங்கள் கசிந்தன...!

இந்த நிலையில், கேடிஎம் நிறுவனம் தனது புதிய ஆர்சி 125 மாடல் மோட்டார்சைக்கிளை இந்தியச் சாலையில் வைத்து பரிசோதனை செய்ததது. இதுகுறித்த புகைப்படங்கள் அண்மையில் இணையதளத்தில் வைரலாகின.

இந்நிலையில், கேடிஎம் நிறுவனம் மேலும் ஓர் புதிய மாடலை இந்தியா சாலையில் வைத்துப் பரிசோதிக்கும் காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த புகைப்படங்களை ஜிக்வீல்ஸ்.காம் இணையதளம் வெளியிட்டுள்ளது. அவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் மோட்டார்சைக்கிள் கேடிஎம் 390 அட்வென்சர் என தெரியவந்துள்ளது.

கேடிஎம் 390 அட்வென்சர் மோட்டைர்சைக்கிளின் ஸ்பை படங்கள் கசிந்தன...!

இந்த 390 அட்வென்சர் மோட்டார்சைக்கிளில் ட்யூக்390-இன் சில பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் ட்யூக்390-இன் எஞ்ஜின் தான் இந்த புதிய மாடல் மோட்டார்சைக்கிளிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த அட்வென்சர் 390-இல் டிஎஃப்டி ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கூடுதலாக மேலும் ஒரு ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது.

கேடிஎம் 390 அட்வென்சர் மோட்டைர்சைக்கிளின் ஸ்பை படங்கள் கசிந்தன...!

இரண்டாவதாக கொடுக்கப்பட்டுள்ள ஸ்கிரீன் எந்த பயனுக்காக கொடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகவில்லை. அது எவ்வாறு பயன்படும் என்பதும் இதுவரை தெரியவில்லை. இதேபோன்று, மோட்டார்சைக்கிளின் பின்புறத்தில் லக்கேஜ் எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக மவுண்ட் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, லக்கேஜை இருக்கமாக கட்டி எடுத்துச் செல்லும்விதமாக அந்த மவுண்டில் மூன்று முனை பாயிண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கேடிஎம் 390 அட்வென்சர் மோட்டைர்சைக்கிளின் ஸ்பை படங்கள் கசிந்தன...!

இந்த புத்தம் புதிய அட்வென்சர் 390-இன் பெட்ரோல் டேங்க் ட்யூக் 390-ஐ காட்டிலும் பெரியதாக உள்ளது. இதன் ஹேண்டில் பார்கள் மூன்று மரக்கிளை வடிவில் பிரத்யேமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளை ஆன் செய்யும் ஸ்லாட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டருக்குக் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டார்சைக்கிள் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் இஐசிஎம்ஏ வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்தே, இந்தியாவில் விற்பனைக்கு வருவது குறித்த தகவல்கள் வெளியாகும்.

கேடிஎம் 390 அட்வென்சர் மோட்டைர்சைக்கிளின் ஸ்பை படங்கள் கசிந்தன...!

கேடிஎம்-இன் புதிய 390 அட்வென்சர் மாடல் மோட்டார்சைக்கிளில் 373சிசி கொண்ட லிக்யூட்-கூல்ட் சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 43.5 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த மோட்டார்சைக்கிள் எக்ஸ்-ஷோரூமில் ரூ.3 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த பைக் பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் மற்றும் கவாஸகி வெர்சிஸ் எக்ஸ்300 ஆகியவற்றுடன் போட்டியிடும்.

More from DriveSpark

Article Published On: Friday, April 5, 2019, 19:11 [IST]
English summary
KTM 390 Adventure Spied Testing In India. Read In Tamil.
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+