புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் அறிமுக விபரம்!

பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ள, புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் அறிமுக விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் அறிமுக விபரம்!

கேடிஎம் வரிசையில் ட்யூக் மற்றும் ஆர்சி மாடல்களை தவிர்த்து, அட்வென்ச்சர் மாடலுக்கும் பெரிய அளவிலான வரவேற்பு உலக அளவில் உள்ளது. இந்தியாவிலும் இந்த பைக் மீதான எதிர்பார்ப்பு மிக அதிக அளவில் உள்ளது.

புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் அறிமுக விபரம்!

இந்தத நிலையில், கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் வரும் நவம்பர் மாதம் இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற இருக்கும் ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் டிசம்பர் மாதம் புனே நகருக்கு அருகில் சகன் பகுதியில் அமைந்துள்ள பஜாஜ் ஆட்டோ தொழிற்சாலையில் இந்த பைக்கின் உற்பத்தி துவங்கப்பட இருப்பதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் அறிமுக விபரம்!

இதுவரை வெளியான ஸ்பை படங்களின் மூலமாக, கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் டிசைன் மிக வசீகரமாக இருப்பது உறுதியாகி இருக்கிறது. முழுமையான எல்இடி ஹெட்லைட், டெயில் லைட்டுகள் மற்றும் இண்டிகேட்டர்கள் இடம்பெற்றிருக்கும்.

புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் அறிமுக விபரம்!

டிஎஃப்டி திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு, புளூடூத் இணைப்பு வசதி, டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதிகளும் இந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் வழங்கப்படும். அட்வென்ச்சர் டூரர் ரகத்தில் வரும் இந்த புதிய பைக் மாடலின் முன்புறத்தில் 19 அங்குல அலாய் வீல்களும், பின்புறத்தில் 17 அங்குல அலாய் வீல்களும் இடம்பெற்றிருக்கும். அதேநேரத்தில், ஸ்போக்ஸ் வீல்களும் ஆப்ஷனலாக வழங்கப்படும் வாய்ப்புள்ளது.

புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் அறிமுக விபரம்!

கேடிஎம் 390 ட்யூக் மற்றும் ஆர்சி பைக்குகளில் பயனப்டுத்தப்படும் அதே 373.2 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 43.5 எச்பி பவரையும், 35 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்ததும்.

புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் அறிமுக விபரம்!

முன்புறத்தில் லாங் டிராவல் அமைப்புடைய அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டு இருக்கும். இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வசதி இடம்பெற்றிருக்கும். ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் நிரந்தர பாதுகாப்பு தொழில்நுட்பமாக வழங்கப்படும்.

புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் அறிமுக விபரம்!

புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. இது மிகச் சிறந்த தேர்வாக இருப்பதுடன், மிக சவாலான விலையில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, கேடிஎம் 390 ட்யூக் பைக்கைவிட ரூ.30,000 வரை கூடுதல் விலையில் வரலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, September 30, 2019, 10:42 [IST]
English summary
According to media reports, The KTM 390 Adventure bike will be revealed at the 2019 EICMA show in Italy.
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+