பெரும் பொருட் செலவில் ஆஃப்ரோடு பைக்காக உருமாறிய 390 ட்யூக்: எவ்வளவு என தெரிந்தால் ரத்த கண்ணீரே வரும்

இளைஞர் ஒருவர் பெரும் பொருட் செலவு செய்து, கேடிஎம் ட்யூக் 390 பைக்கினை ஆஃப் ரோடு மோட்டார்சைக்கிளாக மாற்றியுள்ளார். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

பெரும் பொருட் செலவில் ஆஃப்-ரோடு பைக்காக உருமாறிய 390 ட்யூக்: எவ்வளவு என தெரிந்தால் ரத்த கண்ணீரே வரும்!

பல இளைஞர்களின் கனவு மோட்டார்சைக்கிளாக இருக்கும் கேடிஎம் 390 ட்யூக் அட்வென்சர் பைக்கினை, இளைஞர் ஒருவர் ஆஃப் ரோடு வாகனமாக மாற்றியுள்ளார். இதுகுறித்த வீடியோவை ஹெச்டிடி கஸ்டம்ஸ் என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது. இந்த ஹேச்டிடி கஸ்டம்ஸ் நிறுவனம் அந்த பைக்கை ஆஃப் ரோடு பயணத்திற்கு ஏற்ப மாடிஃபை செய்துள்ளது.

பெரும் பொருட் செலவில் ஆஃப்-ரோடு பைக்காக உருமாறிய 390 ட்யூக்: எவ்வளவு என தெரிந்தால் ரத்த கண்ணீரே வரும்!

ஆஃப் ரோடு வாகனம் என்பது, கரடு முரடனா சாலையில் எந்தவொரு இடையூறும் இல்லாதவாறு செல்வதற்கு பயன்படுத்தக் கூடிய ஒன்று. இந்த ரகத்தினாலான வாகனங்கள், ஆஃப் ரோடு பாதைகளான, கற்கள் நிறைந்த பாதை மற்றும் தண்ணீர் உள்ள பாதைகள், ஆகியவற்றில் எளிதாக பயணிக்க உதவும். இதற்கேற்ப, டயர், கணிசமான கிரவுண்ட் கிளியரன்ஸ், சற்று உயரமான சைலென்சர் உள்ளிட்டவைப் பொருத்தப்பட்டிருக்கும்.

பெரும் பொருட் செலவில் ஆஃப்-ரோடு பைக்காக உருமாறிய 390 ட்யூக்: எவ்வளவு என தெரிந்தால் ரத்த கண்ணீரே வரும்!

இதனால், மற்ற வாகனங்களில் ஏற்படும் அசௌகரியமான, உணர்வு இந்த ஆஃப் ரோடு வாகனங்களில் ஏற்படாது. அதேபோன்று, சிறப்பான ஆஃப் ரோடு பயணத்தையும் இந்த வாகனங்கள் ஏற்படுத்திக் கொடுக்கும்.

பெரும் பொருட் செலவில் ஆஃப்-ரோடு பைக்காக உருமாறிய 390 ட்யூக்: எவ்வளவு என தெரிந்தால் ரத்த கண்ணீரே வரும்!

அந்தவகையில், இரு சக்கர வாகன சந்தையில் ஆஃப் ரோடு பயணத்தை மையமாகக் கொண்டு பல்வேறு பைக்குகள் விற்பனையில் இருக்கின்றன. ஏன் சமீபத்தில் கூட, ஹீரோ நிறுவனம் மலிவான விலையைக் கொண்ட ஆஃப் ரோடு மோட்டார் சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. புதிதாக விற்பனைக்கு களமிறங்கியுள்ள இந்த ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை அந்த நிறுவனம், ரூ. 94 ஆயிரம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

பெரும் பொருட் செலவில் ஆஃப்-ரோடு பைக்காக உருமாறிய 390 ட்யூக்: எவ்வளவு என தெரிந்தால் ரத்த கண்ணீரே வரும்!

இந்த பைக் குறித்த தகவலை நாம் இங்கு பார்ப்பதற்கு காரணம் என்னவென்றால், ஆஃப் ரோடு பயணத்திற்கான பைக்குகளை, வாகனம் தயாரிக்கும் நிறுவனங்கள் தயார் செய்துவரும்நிலையில், பெரும் பொருட்செலவில் இதுபோன்ற வாகனத்தை ஆஃப் வாகனமாக மாற்றுவது அதிக செலவீணத்தை ஏற்படுத்தும், அதுமட்டுமின்றி, இது எந்த அளிவிற்கு நீடித்து உழைக்கும் என்ற உத்தரவாதமும் கிடைக்காது.

பெரும் பொருட் செலவில் ஆஃப்-ரோடு பைக்காக உருமாறிய 390 ட்யூக்: எவ்வளவு என தெரிந்தால் ரத்த கண்ணீரே வரும்!

தற்போது, மாடிஃபை செய்யப்பட்டுள்ள கேடிஎம் நிறுவனத்தின் இந்த 390 ட்யூக் பைக்கானது, எக்ஸ்-ஷோரூமில் ரூ. 2.50 லட்சத்திற்கு விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது. இந்த பைக் அட்வென்சர் டூரர் ரகத்தில் இருப்பதால் இந்தியர்கள் மத்தியில் பெரும் டிமாண்ட் நிலவி வருகிறது.

பெரும் பொருட் செலவில் ஆஃப்-ரோடு பைக்காக உருமாறிய 390 ட்யூக்: எவ்வளவு என தெரிந்தால் ரத்த கண்ணீரே வரும்!

மேலும், இந்த மோட்டார்சைக்கிள் பெரும்பாலான இளைஞர்களின் கனவு பைக்காகவும் இருந்து வருகின்றது. இவ்வளவு விலை மதிப்பைக் கொண்ட இந்த பைக்கை, அந்த இளைஞர் ஸ்பெஷலாக ஆர்டர் செய்து மாடிஃபை செய்துள்ளார். இதன் காரணமாக இந்த அட்வென்சர் டூரர் பைக் தற்போது, ஸ்பெஷல் ஆஃப் ரோடு வாகனமாக மாறியுள்ளது.

பெரும் பொருட் செலவில் ஆஃப்-ரோடு பைக்காக உருமாறிய 390 ட்யூக்: எவ்வளவு என தெரிந்தால் ரத்த கண்ணீரே வரும்!

அந்த வகையில், இந்த பைக்கில் சிறப்பான சஸ்பென்ஷனை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் மாடலுடைய செஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், ஆஃப் ரோடு பயணத்திற்கேற்ப டயர் மற்றும் வீல் உள்ளிட்டவை மாற்றிப் பொருத்தப்பட்டுள்ளன.

பெரும் பொருட் செலவில் ஆஃப்-ரோடு பைக்காக உருமாறிய 390 ட்யூக்: எவ்வளவு என தெரிந்தால் ரத்த கண்ணீரே வரும்!

இதுமட்டுமின்றி, பின்பக்கத்தில் பொருட்களை எடுத்துச் செல்ல ஏதுவாக பெட்டிபோன்ற அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மோட்டார்சைக்கிளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு, இந்த மோட்டார்சைக்கிளை ஆஃப் ரோடு வாகனமாக மாற்ற, அந்த இளைஞர் ரூ. 1.5 லட்சம் வரை செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த மாற்றங்களைச் செய்ய நான்கு மாதங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரவிக்கின்றன.

பெரும் பொருட் செலவில் ஆஃப்-ரோடு பைக்காக உருமாறிய 390 ட்யூக்: எவ்வளவு என தெரிந்தால் ரத்த கண்ணீரே வரும்!

ஆகையால், தற்போது அதிக விலையில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஆஃப் ரோடு பைக்கான ஹிமாலயனைக் காட்டிலும் அதிக விலைக் கொண்டதாக இந்த பைக் மாறியுள்ளது. ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் ரூ. 2 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
KTM 390 Duke Modified Into An Off-Road Bike. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X