யமஹா பைக்கின் உதிரிபாகங்களால் தாறு மாறாக உருமாறிய கேடிஎம் அட்வென்சர் பைக்... புகைப்படங்கள் உள்ளே..!
கேடிஎம் 390 ட்யூக் பைக்கை இளைஞர் ஒருவர் 1970-ஸ் காலத்து யமஹா ஆர்டி 400 மாடல் பைக்கின் உதிரி பாகங்களைக் கொண்டு மாடிஃபிகேஷன் செய்துள்ளார். இதனால், கேடிஎம் பைக் பார்ப்பதற்கு ஆஃப் ரோடு பயணத்திற்கு ஏற்ற ஸ்க்ராம்பளர் பைக்காக மாறியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

அசத்தலான ஸ்டைல், ஹை என்ட் தொழில்நுட்ப அம்சங்கள், பவர்புல் எஞ்ஜின் இவையே கேடிஎம் 390 ட்யூக்கை மாடிஃபிகேஷன் செய்ய காரணமாக அமைந்துள்ளன. அண்மைக் காலங்களாக பைக் பிரியர்கள், மாடிஃபிகேஷனுக்கு கேடிஎம் 390 ட்யூக் பைக்கையேப் பயன்படுத்தி வருகின்றனர். இதனை நாங்கள் உறுதியாக கூற, பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதுகுறித்த பல்வேறு பதிவுகளை நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் குழு வெளியிட்டுள்ளது.

இதனை நிரூபிக்கும் வகையில், கேடிஎம் 390 ட்யூக் பைக் மாடிஃபிகேஷன் சம்பவம் அண்மையில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை கோல்ட்ரேங்லர் என்ற தளம் வெளியிட்டுள்ளது. கோல்ட் ரேங்லர் என்பது பைக்குகளை மாடிஃபை செய்யும் நிறுவனமாகும். இந்த நிறுவனம்தான், தற்போது கேடிஎம் 390 ட்யூக் பைக்கை ஆஃப் ரோடு பயணத்திற்கு ஏற்ப ஸ்க்ராம்பளர் பைக்காக மாற்றியமைத்துள்ளது.

அந்தவகையில், தற்போது மாடிஃபிகேஷன் செய்யப்பட்டிருக்கும் கேடிஎம் 390 ட்யூக் பைக்கிற்கு பெரும்பாலும், யமஹா ஆர்டி 400 மாடல் மோட்டார்சைக்கிளின் உதிரிபாகங்களே பொருத்தப்பட்டுள்ளன. யமஹாவின் இந்த மோட்டார்சைக்கிள் 70ஸ் காலத்து பைக்காகும். இதன் உதிரிபாகங்களைத் தான் மாடிஃபிகேஷன் பணிக்காக கோல்ட் ரேங்லர் லியோன்ஸ் நிறுவனம் பயன்படுத்தியுள்ளது.

இந்த மாடிஃபிகேஷன் பணியின் காரணமாக நேக்கட் ரக 390 ட்யூக் பைக், ஸ்க்ராம்ப்ளர் பைக்கைப் போன்று காட்சியளிக்கின்றது. அதற்கேற்ப அமைப்பில் பாடியின் க்ளாடிங்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அமைப்பிற்காக பைக்கின் பல ஒரிஜினல் பாகங்கள் மாற்றப்பட்டுள்ளன. அவ்வாறு, பைக்கின் பெட்ரோல் டேங்க் அகற்றப்பட்டு, யமஹா ஆர்டி400 பைக்கின் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஹெட்லேம்ப், சீட், வீல், டயர், எக்சாஸ்ட் யூனிட், பின்பக்க மின் விளக்கு, கண்ணாடிகள் உள்ளிட்ட பல முக்கிய பாகங்கள் மாற்றப்பட்டுள்ளன. புதிதாக பொருத்தப்பட்டுள்ள, ஒவ்வொரு பாகங்களும் ஆஃப் ரோடு வாகனங்களில் பொருத்தப்படும் பாகங்களுக்கு ஈடானதாகப் அமைந்துள்ளன.

கேடிஎம் 390 ட்யூக் பைக்கை முழுவதும் கழட்டிப்போட்ட மாடிஃபையர், அதன் எஞ்ஜின், கீ மெக்கானிக்கல் காம்பனென்ட்ஸ் மற்றும் லேசான எடைக்கொண்ட ட்ரெல்லிஸ் ஃப்ரேம் உள்ளிட்டவற்றைத் தவிர மற்ற அனைத்து பாகங்களையும் மாற்றம் செய்துள்ளனர். ஆகையால், தற்போது விற்பனையில் இருக்கும் கேடிஎம் 390 ட்யூக் பைக்கைக் காட்டிலும் இந்த பைக் சற்று எடை குறைவானதாக இருக்கின்றது.

இந்த நடவடிக்கை பைக்கின் வேகத்தை அதிகரிக்க உதவுகிறது. இந்த பைக்கின் 8 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டரை நீக்கிவிட்டு, ஆர்டி400 பைக் டேங்கின் நிறுவியது பணி மிகவும் சவலானதாக அமைந்ததாக மாடிஃபையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக நேரத்தையும், உழைப்பையும் அது எடுத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.

இத்துடன் பிரத்யேக மாற்றமாக, ரிமூவபில் ஏர்பாக்ஸ், எமிஸ்ஸன் ரெகுலேஷன் யூனிட் உள்ளிட்டவற்றிற்கு பதிலாக கே அன்ட் என் ஃபில்டர் மற்றும் க்ராங்கேஸ் ப்ரீதர் மற்றப்பட்டுள்ளன. அதேபோன்று, பைக்கின் உற்பத்தியாளர் வழங்கிய சைலென்சரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை நீக்கிய மாடிஃபையர் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் உருவான ஸ்லிப் ஸ்லிப் ரக சைலென்சரை இருக்கைக்கு கீழே பொருத்தியுள்ளனர்.

இந்த மாடிஃபிகேஷன் பணியால் நேக்கட் ரக கேடிஎம் 390 ட்யூக் பைக், அச்சு அசல் ஸ்க்ராம்ப்ளர் பைக்காகவே மாறியுள்ளது. கேடிஎம் நிறுவனத்தின் இந்த 390 ட்யூக் பைக் இந்தியாவில் ரூ. 2.50 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








