விரைவில் அறிமுகமாகிறது புதிய கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக்!

புதிய கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. கூடுதல் தகவல்களை காணலாம்.

விரைவில் அறிமுகமாகிறது புதிய கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக்!

கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் நேக்கட் ரகத்தில் ட்யூக் பைக் மாடல்களையும், ஸ்போர்ட்ஸ் ரகத்தில் ஆர்சி மாடல்களையும் விற்பனை செய்து வருகிறது. இரு வகை கேடிஎம் மாடல்களுக்கும் பெரிய அளவில் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சூழலில், அட்வென்ச்சர் டூரர் ரகத்திலான மாடல்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய கேடிஎம் திட்டமிட்டுள்ளது.

விரைவில் அறிமுகமாகிறது புதிய கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக்!

இந்திய இளைஞர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் 790 அட்வென்ச்சர் மாடல் வரும் ஏப்ரலில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஓவர்ட்ரைவ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்த பைக்கை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு பெருமகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

விரைவில் அறிமுகமாகிறது புதிய கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக்!

புதிய கேடிஎம் 790 ட்யூக் இந்த பைக் அட்வென்ச்சர் மற்றும் அட்வென்ச்சர் ஆர் என்ற இரு வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது. அதன் பின்னர் பண்டிகை காலத்தையொட்டி, புதிய 390 அட்வென்ச்சர் பைக்கும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

விரைவில் அறிமுகமாகிறது புதிய கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக்!

புதிய கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் மாடலானது முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும். புனே அருகே சகன் தொழிற்பேட்டையில் உள்ள பஜாஜ் ஆட்டோ ஆலையில்தான் உற்பத்தி நடைபெற இருக்கிறது.

விரைவில் அறிமுகமாகிறது புதிய கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக்!

புதிய கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக்கில் 799சிசி பேரலல் ட்வின் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 95 பிஎச்பி பவரையும், 88 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

விரைவில் அறிமுகமாகிறது புதிய கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக்!

புதிய கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக்கின் முன்புறத்தில் WP அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. கரடுமுரடான சாலைகளில் செல்வதற்கு ஏற்ப, முன்புற மற்றும் பின்புற சஸ்பென்ஷன்கள் 200 மிமீ வரை டிராவல் செய்யும் அமைப்பை பெற்றிருக்கின்றன.

விரைவில் அறிமுகமாகிறது புதிய கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக்!

வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக்கில் கார்னரிங் ஏபிஎஸ், ஆஃப்ரோடு ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோரல் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. க்ரூஸ் கன்ட்ரோல் வசதியும் ஆப்ஷனலாக வழங்கப்படும். கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் சேஸீ உள்ளிட்ட பல முக்கிய பாகங்களை பங்கிட்டுக் கொண்டுள்ளது.

விரைவில் அறிமுகமாகிறது புதிய கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக்!

புதிய கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் மாடலானது கவாஸாகி வெர்சிஸ் 650, ட்ரையம்ஃப் டைகர் 800 எக்ஸ்ஆர், டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 950 மற்றும் பிஎம்டபிள்யூ எஃப் 850 ஜிஎஸ் ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 27, 2019, 12:20 [IST]
English summary
KTM is said to be launching the 790 Adventure and Adventure R offerings in the Indian market. Both variants of the KTM 790 Adventure is expected to go on sale this year, sometime around the festive season.
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+