பவர்ஃபுல் கேடிஎம் 790 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது... டீலர்களில் ரகசிய புக்கிங்!

சக்திவாய்ந்த புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கூடுதல் விபரங்களை இப்போது பார்க்கலாம்.

பவர்ஃபுல் கேடிஎம் 790 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது... டீலர்களில் ரகசிய புக்கிங்!

கேடிஎம் ட்யூக் வரிசை பைக்குகளுக்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இதனை மனதில் கொண்டு 125சிசி, 200சிசி, 250சிசி மற்றும் 390 ட்யூக் பைக் மாடல்கள் விற்பனையில் வைக்கபப்ட்டுள்ளன. இந்த நிலையில், பைக் பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், சக்திவாய்ந்த 790 ட்யூக் பைக்கும் விரைவில் விற்பனைக்கு களமிறக்கப்பட இருக்கிறது.

பவர்ஃபுல் கேடிஎம் 790 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது... டீலர்களில் ரகசிய புக்கிங்!

கடந்த 2017ம் ஆண்டு இத்தாலியில் நடந்த ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் கேடிஎம் 790 ட்யூக் பைக் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு இந்த புதிய மாடல் இந்தியாவில் அ்றிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அதனை கேடிஎம் அதிகாரிகள் மறுத்தனர்.

பவர்ஃபுல் கேடிஎம் 790 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது... டீலர்களில் ரகசிய புக்கிங்!

இந்த நிலையில், இந்த பைக் வருகை குறித்து மீண்டும் ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் மார்ச் மாதத்தில் புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கேடிஎம் டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பவர்ஃபுல் கேடிஎம் 790 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது... டீலர்களில் ரகசிய புக்கிங்!

மேலும், ரூ.10,000 முன்பணத்துடன் இந்த பைக்கிற்கு சில கேடிஎம் டீலர்களில் ரகசியமாக முன்பதிவு செய்யப்படுவதாகவும் அந்த தகவல் கூறுகிறது. இந்த புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் ரூ.8 லட்சத்தில் வரும் என்பதும் கூடுதல் தகவலாக உள்ளது.

பவர்ஃபுல் கேடிஎம் 790 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது... டீலர்களில் ரகசிய புக்கிங்!

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் முக்கிய பாகங்களாக தருவிக்கப்பட்டு, புனே அருகே சகனில் உள்ள பஜாஜ் ஆட்டோ ஆலையில் அசெம்பிள் செய்யப்படும். இந்த பைக் தோற்றத்தில் மிரட்டலாக இருப்பதுடன், அதே அளவுக்கு செயல்திறனிலும் மிரட்டும்.

பவர்ஃபுல் கேடிஎம் 790 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது... டீலர்களில் ரகசிய புக்கிங்!

இந்த பைக் ரேஸ் டிராக்குகளில் மிக விரைவாக கடக்கும் பைக் மாடல்களில் ஒன்றாக பெயர் பெற்றிருக்கிறது. இதனை கூர்மையான ஆயுதம் என்றே செல்ல பெயரிட்டு பைக் பிரியர்கள் அழைக்கின்றனர். இதன் தோற்றம் அவ்வாறு இருப்பதே காரணம்.

பவர்ஃபுல் கேடிஎம் 790 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது... டீலர்களில் ரகசிய புக்கிங்!

எல்இடி ஹெட்லைட்டுகள், டிஎஃப்டி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கேடிஎம் மாடல்களின் முத்தாய்ப்பான வர்ண கலவை ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.. இந்த பைக்கில் கார்னரிங் ஏபிஎஸ், குயிக் ஷிஃப்டர், ரைடு பை ஒயர் தொழில்நுட்பம், லான்ச் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

பவர்ஃபுல் கேடிஎம் 790 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது... டீலர்களில் ரகசிய புக்கிங்!

இந்த சக்திவாய்ந்த கேடிஎம் ட்யூக் பைக்கில் 799சிசி எல்சி8 பேரலல் ட்வின் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 87 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதிகள் உள்ளன. ஸ்போர்ட், ஸ்ட்ரீட், ரெயின் மற்றும் டிராக் ஆகிய டிரைவிங் மோடுகள் உள்ளன.

பவர்ஃபுல் கேடிஎம் 790 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது... டீலர்களில் ரகசிய புக்கிங்!

இந்த பைக் மணிக்கு 220 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. 169 கிலோ எடை கொண்டது. இந்த பைக்கின் முன்புறத்தில் 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், பின்புறத்தில் WP மோனோ ஷாக் அப்சார்பர் இடம்பெற்றுள்ளது.

பவர்ஃபுல் கேடிஎம் 790 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது... டீலர்களில் ரகசிய புக்கிங்!

முன்சக்கரத்தில் இரண்டு 300 மிமீ டிஸ்க் பிரேக்குகளும், பின்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. இந்த பைக்கில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இருக்கும்.

பவர்ஃபுல் கேடிஎம் 790 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது... டீலர்களில் ரகசிய புக்கிங்!

கவாஸாகி இசட்900, டுகாட்டி மான்ஸ்டர் 821, டிரையம்ஃப் ஸ்ட்ரீட் டிரிப்பிள் மற்றும் சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் - எஸ்750 ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும். போட்டியாளர்களைவிடவும் இந்த பைக் இந்தியர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, January 25, 2019, 10:15 [IST]
English summary
According to reports, KTM is said to be preparing the launch of their 790 Duke in the Indian market soon.
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+