ரூ.8.63 லட்சத்தில் புதிய கேடிஎம் 790 ட்யூக் விற்பனைக்கு அறிமுகம்!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ரூ.8.63 லட்சத்தில் புதிய கேடிஎம் 790 ட்யூக் விற்பனைக்கு அறிமுகம்!

கேடிஎம் ட்யூக் வரிசை பைக் மாடல்களுக்கு இந்தியாவில் பெரிய அளவிலான வரவேற்பு இருந்து வருகிறது. இதனை மனதில் வைத்து பல்வேறு சிசி திறன் கொண்ட மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இந்த நிலையில், ட்யூக் வரிசையில் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக 790 ட்யூக் பைக்கை கேடிஎம் நிறுவனம் இன்று களமிறக்கி உள்ளது.

ரூ.8.63 லட்சத்தில் புதிய கேடிஎம் 790 ட்யூக் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவில் கேடிஎம் நிறுவனம் அறிமுகம் செய்யும் சக்திவாய்ந்த பைக் மாடல் என்பதுடன், முதல் இரட்டை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட முதல் பைக் மாடல் 790 ட்யூக் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பைக் முதலில் 10 பெருநகரங்களில் உள்ள குறிப்பிட்ட டீலர்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. வரும் ஏப்ரலில் மேலும் 30 நகரங்களில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும்.

ரூ.8.63 லட்சத்தில் புதிய கேடிஎம் 790 ட்யூக் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் பேரலல் ட்வின் சிலிண்டர்கள் அமைப்புடைய 799 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 87 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் 189 கிலோ எடை கொண்டது. ஒரு டன் எடைக்கான விகிதாச்சார கணக்குப்படி, 612 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கிறது.

ரூ.8.63 லட்சத்தில் புதிய கேடிஎம் 790 ட்யூக் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக்கில் ரெயின், ஸ்ட்ரீட், ஸ்போர்ட்ஸ் மற்றும் டிராக் என நான்கு விதமான டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர்த்து, டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், பந்தய களங்களில் வளைவுகளில் திரும்பும்போது பைக் கீழே விழாமல் தவிர்க்கும் லீன் ஆங்கிள் சென்சிடிவிட்டி, ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஸ்லிப்பர் க்ளட்ச், 2 வே குயிக் ஷிஃப்ட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ரூ.8.63 லட்சத்தில் புதிய கேடிஎம் 790 ட்யூக் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள், டெயில் லைட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முழுமையான டிஜிட்டல் டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், எல்இடி விளக்குகள், லான்ச் கன்ட்ரோல், வீலி கன்ட்ரோல் ஆகிய முக்கிய தொழில்நுட்ப அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

ரூ.8.63 லட்சத்தில் புதிய கேடிஎம் 790 ட்யூக் விற்பனைக்கு அறிமுகம்!

கேடிஎம் 790 ட்யூக் பைக்கில் முன்புறத்தில் WP 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய WP மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன.

ரூ.8.63 லட்சத்தில் புதிய கேடிஎம் 790 ட்யூக் விற்பனைக்கு அறிமுகம்!

முன்சக்கரத்தில் 300 மிமீ டியூவல் டிஸ்க் பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் 240 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் உள்ளது. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும்,17 அங்குல அலாய் வீல்கள் மற்றும் மேக்சிஸ் சூப்பர்மேக்ஸ் எஸ்டி டயர்களும் உள்ளன.

ரூ.8.63 லட்சத்தில் புதிய கேடிஎம் 790 ட்யூக் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் உதிரிபாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு புனே அருகில் சகனில் உள்ள பஜாஜ் ஆட்டோ ஆலையில் ஒருங்கிணைத்து விற்பனை செய்யப்பட உள்ளது.

ரூ.8.63 லட்சத்தில் புதிய கேடிஎம் 790 ட்யூக் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் ரூ. 8.63 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் முதல் 10 பெருநகரங்களில் டெலிவிரி துவங்கப்படும். சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750, டுகாட்டி மான்ஸட்டர் 797, ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள், யமஹா எம்டி-09 மற்றும் கவாஸாகி இசட்900 ஆகிய பைக் மாடல்களுடன் இந்தியாவில் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Monday, September 23, 2019, 13:58 [IST]
English summary
KTM Duke 790 launched in India. The new Duke 790 is priced at Rs 8.63 lakh and comes with a host of features and equipment. The KTM Duke 790 is now the new flagship motorcycle from the brand and is also the first middle-weight segment motorcycle in the Indian market.
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+