போலீஸ் வாகனத்தை விரட்டிபிடித்த இளைஞர்... எதற்காக என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

பொதுவாக போலீஸார்தான், முறைகேட்டில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை விரட்டிச் சென்று பிடிப்பார்கள். ஆனால், மாறாக இங்கு ஓர் இளைஞர் போலீஸ் வாகனத்தை விரட்டிச் சென்று பிடித்துள்ளார். அப்படிபட்ட ஓர் சம்பவம் குறித்த தகவலைதான் இங்கு பார்க்க உள்ளோம்.

போலீஸ் வாகனத்தை விரட்டிபிடித்த இளைஞர்... எதற்காக என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

பொதுவாக, இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் வாகன விதிகளை மதிப்பதே இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகளைக் கண்கானிக்கும் விதமாக, சிசிடிவி கேமிரா, நவீன எந்திரம் உள்ளிட்ட பல்வேறு வழிகளை போக்குவரத்துத்துறை போலீஸார் கையாண்டு வருகின்றனர். இருப்பினும், வாகனம் சார்ந்த விதிமீறல்கள் நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்ற வண்ணம் உள்ளது.

போலீஸ் வாகனத்தை விரட்டிபிடித்த இளைஞர்... எதற்காக என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

அதேசமயம், சட்டங்களை பாதுகாக்க வேண்டிய போலீஸ் அதிகாரிகள் சிலரே பல நேரங்களில் முறைகேட்டில் ஈடுபடுவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதேபோன்ற சம்பவம்தான் தற்போது கேரள மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

போலீஸ் வாகனத்தை விரட்டிபிடித்த இளைஞர்... எதற்காக என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

அவ்வாறு, முறைகேட்டில் ஈடுபட்ட போலீஸாரைதான், இங்கு ஓர் இளைஞர் விரட்டிச் சென்று அவர்களின் தவறை சுட்டுக்காட்டியுள்ளார். இதுகுறித்து, அவரது ஹெல்மெட்டில் பொருத்தியிருந்த கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

போலீஸ் வாகனத்தை விரட்டிபிடித்த இளைஞர்... எதற்காக என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

இச்சம்பவம், கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் அரங்கேறியுள்ளது. அதிகாரப்பூர்வமான போலீஸ் வாகனத்தில் செல்லும் சீரூடை அணிந்த இரு காவலர்கள், சீட் பெல்ட் அணியாமல் செல்கின்றனர். இதனைக் கண்ட கேடிஎம்390 ட்யூக் பைக்கர், போலீஸ் வாகனத்திற்கு இணையாகச் சென்று சீட் பெல்ட் அணியுமாறு கூறுகின்றார்.

போலீஸ் வாகனத்தை விரட்டிபிடித்த இளைஞர்... எதற்காக என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

ஆனால், இளைஞரின் குரலுக்கு சற்றும் மதிப்பு கொடுக்காமல் அவர்கள் முன்னேறிச் செல்கின்றனர். ஆனால், அந்த இளைஞரோ விடாப்பிடியாக அந்த போலீஸ் வாகனத்தை விரட்டிச் சென்று மடக்கி, அவர்களை சீட் பெல்ட் அணிய கட்டாயப்படுத்துகின்றார். பின்னர், சிறு வாக்குவதத்தை அடுத்து அவர்கள் இருவரும் சீட் பெல்ட் அணிகின்றனர். இதன் பின்னரே அந்த இளைஞர் அங்கிருந்து நகர்கின்றார்.

போலீஸ் வாகனத்தை விரட்டிபிடித்த இளைஞர்... எதற்காக என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

இளைஞரின் இந்த துணிச்சல் மிகுந்த செயல் நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகின்றது. அதேசமயம், விதிகள் நாட்டில் உள்ள அனைவருக்கும் சமமானது. போலீஸாரோ அல்லது மாநிலத்தின் முதல்வரோ யாராக இருந்தாலும், விதியைக் கடைபிடிப்பது கட்டாயம். இதில், யாருக்கும் விதி விலக்கு கிடையாது. என்பதனை போலீஸார் உணர்த்தும் வகையில், கேடிஎம் ட்யூக் உரிமையாளர் செய்திருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.

போலீஸ் வாகனத்தை விரட்டிபிடித்த இளைஞர்... எதற்காக என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

முன்னதாக, இதேபோன்றதொரு சம்பவம் சென்னையில் அரங்கேறியது. நாடு முழுவதும் ஹெல்மெட் விவகாரம் சூடுபிடித்து வரும்நிலையில், தி-நகர் காவல்நிலையத்தைச் சேர்ந்த துணை காவல் ஆய்வாளர், ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

போலீஸ் வாகனத்தை விரட்டிபிடித்த இளைஞர்... எதற்காக என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

இவ்வாறு, சூழ்நிலை அணல் பரந்தநிலையில் இருக்கையில் பல போலீஸார்கள் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் வகையில், கேரள இளைஞர் செய்த காரியம் உள்ளது.

ஒரு சில போலீஸார், வாகன ஓட்டிகளின் இதுமாதிரியான கேள்விக்கு முறையான பதில்கூட அளிப்பதில்லை. என்னை கேட்க நீ யார் என அதிகாரத் திமிரில் பேசுவதுண்டு. இவர்களைப் போன்ற அதிகாரிகளின் அராஜகப் போக்கை கண்டிக்கும் வகையில், காவல்துறை உயர் அதிகாரிகள் அவர்கள்மீது துறைசார்ந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்.

போலீஸ் வாகனத்தை விரட்டிபிடித்த இளைஞர்... எதற்காக என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

இருப்பினும், சில போலீஸார் அதனை பெரிதாகப் பொருட்படுத்திக் கொள்வதில்லை. அதேசமயம், முறைகேட்டில் ஈடுபடும் போலீஸாரை தடுத்தி நிறுத்தினால், அவர்களை பணி செய்ய விடமால் தடுப்பதாக கூறி நம் மீதே வழக்கு பதிவார்கள். இது நமக்கு பல்வேறு பிரச்னைகளை உருவாக்கும்.

போலீஸ் வாகனத்தை விரட்டிபிடித்த இளைஞர்... எதற்காக என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

ஆகையால், குற்றத்தில் ஈடுபடும் போலீஸார்களை தண்டிக்க, அவர்கள் குறித்த வீடியோ அல்லது புகைப்படங்களை எடுத்து, அதன்மூலம் தீர்வு காணலாம். இதை சமூக வலைதளத்திலோ அல்லது உயர் காவல் அதிகாரிகளிடம் கொடுத்து புகார் செய்யலாம். மாறாக, கேரள இளைஞர் செய்ததைப்போன்று, நாம் செய்தால் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 20, 2019, 13:17 [IST]
English summary
KTM Biker Chases And Stops Cops For Driving Without Seatbelts. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+