மிக மிக குறைந்த முன்பணத்துடன் ட்யூக் 125-ஐ வாங்கலாம்... இவ்வளவு தானா...

இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கேடிஎம் தனது ட்யூக் 125 மாடலுக்கு அசத்தலான சலுகைகளை இந்த தீபாவளிக்கு அறிவித்துள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் அசரடிக்கும் பல விஷயங்கள் உள்ளன. அவற்றை இந்த செய்தி பார்ப்போம்.

தீபாவளி ஸ்பெஷல்... கேடிஎம் ட்யூக் 125-விற்கு அறிவிக்கப்பட்ட அசத்தலான சலுகைகள்

கேடிஎம் நிறுவனம் ட்யூக் 125-விற்கு விலையில் 95 சதவீம் கடனாக ரூ.12,000 முன்பணம் கட்டினால் போதும் எனவும் மாத தவணையாக வெறும் ரூபாய் 4,000 செலுத்தினால் போதும் எனவும் அறிவித்துள்ளது.

தீபாவளி ஸ்பெஷல்... கேடிஎம் ட்யூக் 125-விற்கு அறிவிக்கப்பட்ட அசத்தலான சலுகைகள்

வாடிக்கையாளர்களுக்கு இந்த 95 சதவீத கடன் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கேடிஎம் ஷோரூம்களிலும் 3 வருடங்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ட்ரீ-லெவல் மோட்டார்சைக்கிளுக்கு விற்பனையை அதிகரிப்பதற்காகவே இப்படிப்பட்ட அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தீபாவளி ஸ்பெஷல்... கேடிஎம் ட்யூக் 125-விற்கு அறிவிக்கப்பட்ட அசத்தலான சலுகைகள்

கேடிஎம் 125 ட்யூக் மற்றும் ஆர்சி மாடல்கள் கேடிஎம் நிறுவனத்திற்கு பெரியளவில் விற்பனை வளர்ச்சியை கொடுத்துள்ளன. இவை கடந்த 10 மாதத்தில் மட்டும் 50,000 யூனிட்கள் விற்பனையாகி சமீபத்தில் சாதனை புரிந்தன.

தீபாவளி ஸ்பெஷல்... கேடிஎம் ட்யூக் 125-விற்கு அறிவிக்கப்பட்ட அசத்தலான சலுகைகள்

இதனால் ஆர்சி125 மற்றும் 125 ட்யூக்கின் விலைகள் கடந்த மாதத்தில் சற்று அதிகரிக்கப்பட்டன. கேடிஎம் 125 ட்யூக்கின் தற்போதைய விலை ரூ.1.32 லட்சமாக இந்திய எக்ஸ்ஷோரூம்களில் உள்ளது.

தீபாவளி ஸ்பெஷல்... கேடிஎம் ட்யூக் 125-விற்கு அறிவிக்கப்பட்ட அசத்தலான சலுகைகள்

கேடிஎம் ட்யூக் 125-ன் சிங்கிள் சிலிண்டர் லிக்யூட்-கூல்டு 124சிசி என்ஜின் 9,250 ஆர்பிஎம்மில் 14.5 பிஎச்பி பவரையும், 8,000 ஆர்பிஎம்மில் 12 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதன் என்ஜினுடன் ஆறு வேக நிலைகளை கொடுக்கக்கூடிய கியர்பாக்ஸும் இணைக்கப்பட்டுள்ளது.

தீபாவளி ஸ்பெஷல்... கேடிஎம் ட்யூக் 125-விற்கு அறிவிக்கப்பட்ட அசத்தலான சலுகைகள்

கேடிஎம் ட்யூக் 125-ன் முன்புற சக்கரத்தில் 43மிமீ ஃபோர்க்ஸும், மோனோ ஷாக் சஸ்பென்ஷன் பின்புறத்திலும் உள்ளது. அதேபோல் 300மிமீ டிஸ்க் முன்புற சக்கரத்திலும் 230மிமீ யூனிட் பின்புற சக்கரத்திலும் ப்ரேக் அமைப்பாக உள்ளது. ப்ரேக் அமைப்பிற்கு உதவிகரமாகவும் பாதுகாப்பு அமைப்பாகவும் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளி ஸ்பெஷல்... கேடிஎம் ட்யூக் 125-விற்கு அறிவிக்கப்பட்ட அசத்தலான சலுகைகள்

சேசிஸ், ஸ்விங்கார்ம் மற்றும் ட்யூக் 125-ன் மற்ற பாகங்கள் அனைத்தும் இதனுடன் வெளியான மற்ற இரு பெரிய பைக்குகளின் சாயலில் உள்ளன. இந்திய சந்தையில் இதனுடன் வெளியான ஆர்சி 125 என இரண்டும் ஏறக்குறைய ஒரே மாதிரியான என்ஜின், சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக் அமைப்புகளை கொண்டுள்ளது.

தீபாவளி ஸ்பெஷல்... கேடிஎம் ட்யூக் 125-விற்கு அறிவிக்கப்பட்ட அசத்தலான சலுகைகள்

ஆனால் ஆர்சி125யில் ஹேண்டில்பார் மற்றும் பின்புற இருக்கைகள் ஸ்போர்ட் பைக்கான லுக்கை அதற்கு தருகின்றன. இவை தான் இவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வித்தியாசமும் கூட. கேடிஎம்125, ஆரஞ்சு, கருப்பு மற்றும் வெள்ளை என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. மேலும் கேடிஎம் நிறுவனம் புதிய 390 அட்வென்சர் பைக்கை இந்த வருட முடிவில் அறிமுகம் செய்யவுள்ளது. அதன் விரிவான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளது.

தீபாவளி ஸ்பெஷல்... கேடிஎம் ட்யூக் 125-விற்கு அறிவிக்கப்பட்ட அசத்தலான சலுகைகள்

கேடிஎம் நிறுவனம் அதன் எண்ட்ரீ-லெவல் பைக்குகளுக்கு இனிப்பான சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் கேடிஎம் நிறுவனம் இளைஞர்களையே குறி வைப்பதை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் எப்படியோ இந்த சலுகைகளால் இந்த விழாகாலத்தில் கேடிஎம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Monday, October 14, 2019, 20:18 [IST]
English summary
KTM Duke 125 Finance Options On Offer: Low Downpayment & EMI Schemes Offered Across India
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+