ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள பைக்கை அக்கக்காக பிரித்து போட்ட இளைஞர்... ஏன் இந்த கொலை வெறி...? -வீடியோ!

இளைஞர் ஒருவர் தனது இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள மோட்டார்சைக்கிளை, அழுக்கான டம்மி மோட்டார்சைக்கிளைப் போல் உருவாக்கியிருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள பைக்கை அக்கக்காக பிரித்து போட்ட இளைஞர்... ஏன் இந்த கொலை வெறி...? - வீடியோ!

பல இளைஞர்களின் கனவு மோட்டார்சைக்கிளாக இருக்கும் கேடிஎம் 390 ட்யூக்கினை, இளைஞர் ஒருவர் அக்கு வேர் ஆணி வேராக பிரித்துப் போட்டுள்ளார். இதுகுறித்த வீடியோக் காட்சியினை மேக் ரைடர் என்னும் யுடியூப் தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள பைக்கை அக்கக்காக பிரித்து போட்ட இளைஞர்... ஏன் இந்த கொலை வெறி...? - வீடியோ!

வாகன ஓட்டிகள் தங்களுக்கு பிடித்தமான காரையே அல்லது பைக்கினையோ, பல ஆயிரங்கள் செலவு செய்து மாடிஃபை செய்து பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம். ஆனால், இங்கு ஓர் இளைஞர் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தொகையுள்ள மோட்டார்சைக்கிளினை மிகவும் கொடூரமான முறையில் மாற்றியமைத்துள்ளார்.

ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள பைக்கை அக்கக்காக பிரித்து போட்ட இளைஞர்... ஏன் இந்த கொலை வெறி...? - வீடியோ!

இந்த மாற்றத்தினால், அந்த மோட்டார்சைக்கிளை பார்ப்பதற்கு பழைய இரும்பு கடையில் இருந்து கொண்டுவரப்பட்ட டம்மி மோட்டார்சைக்கிளைப் போன்று காட்சியளிக்கிறது. மிகவும் மோசமான நிலையில், அழுக்காக காட்சியளிக்கும் அந்த மோட்டார்சைக்கிளை ரேஸிற்கு பயன்படுத்தும் விதமாக அவர் மாற்றியமைத்துள்ளார்.

ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள பைக்கை அக்கக்காக பிரித்து போட்ட இளைஞர்... ஏன் இந்த கொலை வெறி...? - வீடியோ!

இந்த மோட்டார்சைக்கிளானது, சென்னையில் சுமார் ரூ. 2.34 லட்சம் முதல் ரூ. 2.42 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மோட்டார்சைக்கிளின் ஆரம்ப நிலை உருவத்தைப் பார்க்கும் எந்த ஒரு இளைஞரும் வேதனைப்படுவார்கள். ஏனென்றால், அந்த பைக்கை அந்த அளவிற்கு கொடூரமான முறையில் உருமாற்றியுள்ளார் அதன் உரிமையாளர்.

ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள பைக்கை அக்கக்காக பிரித்து போட்ட இளைஞர்... ஏன் இந்த கொலை வெறி...? - வீடியோ!

ஆனால், அதன்பின்னர் அந்த கேடிஎம் 390 ட்யூக் மோட்டார்சைக்கிளை ரேஸ் மோட்டார் சைக்கிளைப் போன்று அவர் மாடிஃபை செய்கிறார். அவ்வாறு அந்த மோட்டார்சைக்கிளை டர்ட் ரேஸிங் மோட்டார்சைக்கிளாக மறு உருவெடுக்கிறது.

ஆனாலும், இவ்வளவு அதிக தொகையுடைய அந்த மோட்டார்சைக்கிளை இவ்வாறு செய்வதற்கு எவ்வாறு மனம் வருகிறதோ, என இந்த வீடியோவைப் பார்க்கும் பல இளைஞர்கள் புலம்பி தள்ளுவதை அந்த யுடியூப் வீடியோவிற்கு கீழே வந்துள்ள கமெண்டைப் பார்த்தால் தெரியும்.

ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள பைக்கை அக்கக்காக பிரித்து போட்ட இளைஞர்... ஏன் இந்த கொலை வெறி...? - வீடியோ!

கேடிஎம் ட்யூக் 390 மோட்டார்சைக்கிளில் 373.2 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 43 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.

ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள பைக்கை அக்கக்காக பிரித்து போட்ட இளைஞர்... ஏன் இந்த கொலை வெறி...? - வீடியோ!

இதுதவிர, சென்சார் மூலமாக எஞ்சினுக்கு எரிபொருள் செலுத்தும் ரைடு பை வயர் நுட்பம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிஎஃப்டி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவையும் இதில் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, April 6, 2019, 17:44 [IST]
English summary
KTM Duke 390 Transformed Into A Dirt Bike Video. Read In Tamil.
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+