கதிகலங்க போகும் கவாஸாகி-டுகாட்டி: சில வாரங்களில் அதீத சக்தி வாய்ந்த பைக்கை களமிறக்கும் கேடிஎம்!

கேடிஎம் நிறுவனம் கவாஸாகியின் இசட்900 மற்றும் டுகாட்டியின் மான்ஸ்ட்டர் 797 ஆகிய மாடலுக்கு போட்டியாக 799 சிசி கொண்ட புதிய ட்யூக் மாடல் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

கதிகலங்க போகும் கவாஸாகி-டுகாட்டி: இன்னும் சில வாரங்களில் அதீத சக்தி வாய்ந்த பைக்கை களமிறக்கும் கேடிஎம்!

இந்திய இளைஞர்களை கவர்ச்சியான பைக்குகளின்மூலம் வசியம் செய்து வைத்திருக்கும் கேடிஎம் நிறுவனம், அதன் மிகவும் ஸ்டைலிஸான ட்யூக் 790 மாடலை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கதிகலங்க போகும் கவாஸாகி-டுகாட்டி: இன்னும் சில வாரங்களில் அதீத சக்தி வாய்ந்த பைக்கை களமிறக்கும் கேடிஎம்!

ட்யூக் வரிசையில் 125சிசி முதல் 390சிசி வரையிலான திறன் கொண்ட, நான்கு மாடல்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனையாகி வரும்நிலையில், ஐந்தாவது மாடலாக சக்தி வாய்ந்த 790 சிசி மோட்டார் சைக்கிளை கேடிஎம் நிறுவனம் விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது. இதனை, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் விதமாக அண்மையில் பைக் குறித்த டீசர் ஒன்றை அந்த நிறுவனம் வெளியிட்டது.

ஆகையால், இந்த பைக் மிக விரைவில் விற்பனைக்கு வந்துவிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கேடிஎம் ட்யூக் 790 மாடல், இன்னும் சில வாரங்களிலேயே விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுவிடலாம் என காடிவாடி என்கிற ஆங்கில இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கதிகலங்க போகும் கவாஸாகி-டுகாட்டி: இன்னும் சில வாரங்களில் அதீத சக்தி வாய்ந்த பைக்கை களமிறக்கும் கேடிஎம்!

கேடிஎம் நிறுவனம், இந்த மோட்டார்சைக்கிளினை சிகேடி வழியாக இந்தியாவில் விற்பனைச் செய்ய இருக்கின்றது. இதற்காக 100க்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிள்கள் ஏற்கனவே இந்தியா வந்தடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துடன், இந்த மோட்டார்சைக்கிளிற்கான எஞ்ஜின் மற்றும் உதிரிபாகங்கள் உள்ளிட்ட முக்கிய பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

கதிகலங்க போகும் கவாஸாகி-டுகாட்டி: இன்னும் சில வாரங்களில் அதீத சக்தி வாய்ந்த பைக்கை களமிறக்கும் கேடிஎம்!

நேக்கட் ரகத்தில் இருக்கும் இந்த ஸ்ட்ரீட்பைட்டர் மாடல் மோட்டார்சைக்கிளை அந்த நிறுவனம், கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற இஐசிஎம்ஏ வாகன கண்காட்சியில்தான் முதல் முறையாக அறிமுகம் செய்தது. இந்த மோட்டார்சைக்கிளின் ஸ்டைல் மற்றும் தாத்பரியங்கள் 1290 சூப்பர் ட்யூக் ஆர் பைக்கினைக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கதிகலங்க போகும் கவாஸாகி-டுகாட்டி: இன்னும் சில வாரங்களில் அதீத சக்தி வாய்ந்த பைக்கை களமிறக்கும் கேடிஎம்!

மேலும், இந்த மோட்டார்சைக்கிளில் முழுக்க முழுக்க எல்இடி மின் விளக்குகள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. அவ்வாறு, முகப்பு பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள ஹெட்லைட் அமைப்பு ட்யூக் 390 மாடலை ஒத்ததாகக் காட்சியளிக்கின்றது. இத்துடன், சிங்கிள் பீஸ் ஹேண்டில்பார் மற்றும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட அட்வான்ஸட் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம், ரைடருக்கு தேவையான அனைத்து தகவல்களையும் பெற முடியும்.

கதிகலங்க போகும் கவாஸாகி-டுகாட்டி: இன்னும் சில வாரங்களில் அதீத சக்தி வாய்ந்த பைக்கை களமிறக்கும் கேடிஎம்!

கேடிஎம் 790 ட்யூக் பைக்கில் பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய 799சிசி லிக்யூடு கூல்டு எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 105பிஎஸ் பவரையும், 87என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு உள்ளது.

கதிகலங்க போகும் கவாஸாகி-டுகாட்டி: இன்னும் சில வாரங்களில் அதீத சக்தி வாய்ந்த பைக்கை களமிறக்கும் கேடிஎம்!

இத்துடன், குயிக் ஷிஃப்ட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. டிரைவிங் மோடுகள், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் பின்புற பயணிக்கான ஃபுட்ரெஸ்ட் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. கேடிஎம் 790 ட்யூக் பைக்கில் க்ரோமியம் மற்றும் மாலிபிடினம் கலப்பு உலோகத்தாலான ட்யூபிலர் ஃப்ரேம் உள்ளது.

கதிகலங்க போகும் கவாஸாகி-டுகாட்டி: இன்னும் சில வாரங்களில் அதீத சக்தி வாய்ந்த பைக்கை களமிறக்கும் கேடிஎம்!

மேலும், மோட்டார்சைக்கிளின் முன்புறத்தில் 43 மிமி WP அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ சாக் அப்சார்பரும் நிறுவப்பட்டுள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் 4 பிஸ்டன் கேலிபர் வசதி கொண்ட 300mm டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் சிங்கிள் பிஸ்டன் ப்ளோடிங் காலிபர் வசதி கொண்ட 240mm டிஸ்க் பிரேக்கும் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் பாதுகாப்பு வசதியாக டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளன.

கதிகலங்க போகும் கவாஸாகி-டுகாட்டி: இன்னும் சில வாரங்களில் அதீத சக்தி வாய்ந்த பைக்கை களமிறக்கும் கேடிஎம்!

இந்த புத்தம் புதிய கேடிஎம் 790 ட்யூக், ரூ. 7.50 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த பைக் களத்தில், கவாஸாகி இசட்900, டுகாட்டி மான்ஸ்ட்டர் 797, ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் எஸ் உள்ளிட்ட பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Sunday, May 5, 2019, 11:33 [IST]
English summary
KTM Duke 790 India Launch Details. Read In Tamil.
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+