புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் அறிமுக தேதி விபரம் வெளியானது!

பெரும் ஆவலை ஏற்படுத்தி இருக்கும் சக்திவாய்ந்த புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது.

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் அறிமுக தேதி விபரம் வெளியானது!

கேடிஎம் ட்யூக் வரிசையில் பல்வேறு சிசி திறன் கொண்ட எஞ்சின்களுடன் விற்பனையில் இருக்கிறது. இந்தியாவில் ட்யூக் வரிசையில் விற்பனையில் உள்ள அனைத்து பைக் மாடல்களுக்குமே அதீத வரவேற்பு இருந்து வருகிறது.

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் அறிமுக தேதி விபரம் வெளியானது!

இந்த நிலையில், அதிசக்திவாய்ந்த ட்யூக் மாடலை இந்தியாவில் கேடிஎம் அறிமுகம் செய்ய இருக்கும் தகவல் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்த காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் வரும் 23ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் அறிமுக தேதி விபரம் வெளியானது!

கேடிஎம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லையென்றாலும் கூட இந்த பைக் வருவது உறுதியானதால், அங்கீகரிக்கப்பட்ட டீலர்களில் ரூ.30,000 முன்பணத்துடன் முன்பதிவு ரகசியமாக ஏற்கப்பட்டு வருகிறது.

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் அறிமுக தேதி விபரம் வெளியானது!

எனினும், நாட்டின் பெருநகரங்களில் குறிப்பிட்ட கேடிஎம் டீலர்களில் வழியாகவே இந்த பைக் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இது மிகவும் பிரிமீயம் ரகத்தில் நிலைநிறுத்தப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் அறிமுக தேதி விபரம் வெளியானது!

கேடிஎம் 790 ட்யூக் பைக்கில் பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய 799 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 87 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் அறிமுக தேதி விபரம் வெளியானது!

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக்கில் 2 வே குயிக் ஷிஃப்ட் வசதியும், ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும், ஸ்போர்ட்ஸ், ஸ்ட்ரீட், ரெயின் மற்றும் டிராக் என 4 விதமான டிரைவிங் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் அறிமுக தேதி விபரம் வெளியானது!

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக்கில் ஏராளமான தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பைக்கில் வளைவுகளில் பைக் திரும்பும்போது கீழே விழுவதை தவிர்க்கக்கூடிய லீன் ஆங்கிள் சென்சிட்டிவிட்டி தொழில்நுட்பம் உள்ளது. ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் ரேஸ் டிராக்குகளில் இயக்கும்போது கூடுதல் பாதுகாப்பை வழங்கும் தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன.

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் அறிமுக தேதி விபரம் வெளியானது!

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக்கில் ஸ்டீல் ஃப்ரேம் சேஸீ பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் 43 மிமீ WP அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் அட்ஜெஸ்ட்டபிள் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. மேலும், முன்சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 240 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் உள்ளது. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் அறிமுக தேதி விபரம் வெளியானது!

கேடிஎம் 790 ட்யூக் பைக் முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு புனே பஜாஜ் ஆலையில் வைத்து ஒருங்கிணைத்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த பைக் மிகவும் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் அறிமுக தேதி விபரம் வெளியானது!

ரூ.8 லட்சம் முதல் ரூ.9 லட்சம் இடையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. கவாஸாகி இசட்900, சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750, டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 மற்றும் யமஹா எம்டி-09 பைக் மாடல்களுடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 17, 2019, 13:01 [IST]
English summary
KTM India has confirmed the launch of their new Duke 790 for the Indian market. The new KTM Duke 790 will go on sale in the Indian market on the 23rd September.
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+