புதிய கேடிஎம் ட790 ட்யூக் பைக் விரைவில் அறிமுகம்: விபரம்!

கேடிஎம் ட்யூக் வரிசை பைக் மாடல்களுக்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கிறது. இதனால், ட்யூக் வரிசையில் பல்வேறு சிசி திறன் கொண்ட மாடல்களை கேடிஎம் வரிசை கட்டி வருகிறது.

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய கேடிஎம் ட790 ட்யூக் பைக் விரைவில் அறிமுகம்: விபரம்!

கேடிஎம் ட்யூக் வரிசை பைக் மாடல்களுக்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கிறது. இதனால், ட்யூக் வரிசையில் பல்வேறு சிசி திறன் கொண்ட மாடல்களை கேடிஎம் வரிசை கட்டி வருகிறது. 125 சிசி, 200 சிசி, 250 சிசி மற்றும் 390 சிசி மாடல்கள் விற்பனைக்கு வந்துவிட்ட நிலையில், ட்யூக் வரிசையில் மிக சக்திவாய்ந்த 790சிசி மாடல் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.

புதிய கேடிஎம் ட790 ட்யூக் பைக் விரைவில் அறிமுகம்: விபரம்!

தற்போது சில கேடிஎம் டீலர்களில் இந்த புதிய ட்யூக் 790 மாடல் வந்துள்ளது குறித்த படங்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளன. இது கேடிஎம் பிரியர்களின் ஆவலை அதிகரித்துள்ளது.

புதிய கேடிஎம் ட790 ட்யூக் பைக் விரைவில் அறிமுகம்: விபரம்!

வழக்கம்போல் இந்த புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக்கும் மிக மிரட்டலான டிசைன் அம்சங்களை பெற்றிருக்கிறது. ஹெட்லைட், பெட்ரோல் டேங்க், பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் என அனைத்துமே கேடிஎம் பாரம்பரிய டிசைன் அம்சங்களை பிரதிபலிக்கின்றன.

புதிய கேடிஎம் ட790 ட்யூக் பைக் விரைவில் அறிமுகம்: விபரம்!

இந்த பைக்கில் 799சிசி ட்வின் சிலிண்டர் லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎச்பி பவரையும், 85 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் வாய்ந்தது. இது இரட்டை சிலிண்டர் எஞ்சின் கொண்ட மாடல் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய கேடிஎம் ட790 ட்யூக் பைக் விரைவில் அறிமுகம்: விபரம்!

புதிய 790 ட்யூக் பைக்கில் முன்புறத்தில் WP அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் WP மோனோ ஷாக்அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. முன்சக்கரத்தில் 300 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் முக்கிய பாதுகாப்பு அம்சமாக உள்ளது.

புதிய கேடிஎம் ட790 ட்யூக் பைக் விரைவில் அறிமுகம்: விபரம்!

இந்த பைக்கில் டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், குயிக் ஷிஃப்ட் வசதி, கார்னரிங் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் கூடிய ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் வசதி ஆகியவை உள்ளன. ஸ்போர்ட், ஸ்ட்ரீட், ரெயின் மற்றும் டிராக் ஆகிய நான்குவிதமான நிலைகளில் ஓட்டுவதற்கான டிரைவிங் மோடுகளும் உள்ளன.

புதிய கேடிஎம் ட790 ட்யூக் பைக் விரைவில் அறிமுகம்: விபரம்!

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக்கானது மஹாராஷ்டிர மாநிலம், புனே அருகே சகனில் அமைந்துள்ள பஜாஜ் ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது.

புதிய கேடிஎம் ட790 ட்யூக் பைக் விரைவில் அறிமுகம்: விபரம்!

இந்த பைக்கிற்கு ரூ.10,000 முன்பணத்துடன் முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. ரூ.8 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750, ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆகிய பைக்குகளுடன் போட்டி போடும்.

புதிய கேடிஎம் ட790 ட்யூக் பைக் விரைவில் அறிமுகம்: விபரம்!

அசத்தும் டிசைன் மற்றும் சக்திவாய்ந்த கேடிஎம் பைக் என்பதால், கேடிஎம் பிரியர்கள் மிக நீண்டகாலமாக இந்த பைக்கை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், விரைவில் அறிமுகமாக இருப்பது உறுதியாகி இருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Image Courtesy: news.maxabout.com

More from DriveSpark

Article Published On: Saturday, February 2, 2019, 11:08 [IST]
English summary
KTM India is all set to launch the 790 Duke in the market. The 2019 KTM Duke 790 has been spotted in company dealerships for the first time, indicating a launch soon. Reports do suggest the KTM could bring the much-awaited middleweight motorcycle to India as early as March 2019.
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+