கேடிஎம் 790 ட்யூக் பாகங்கள் இந்தியாவில் விற்பனை! ஒவ்வொன்றின் விலையும் எவ்வளவு தெரியுமா
ஆஸ்திரியன் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கேடிஎம் தனது அடுத்த தயாரிப்பு மாடலான 790 ட்யூக்கை கடந்த 24ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் இம்மாடலுக்குரிய அதிகாரப்பூர்வ பாகங்கள் கேடிஎம் நிறுவனத்தால் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கு கேடிஎம் பவர் பார்ட்ஸ் என பெயரிட்டுள்ள அந்நிறுவனம், இதில் காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் பாகங்களை சேர்த்துள்ளது. இவற்றின் மூலம் பைக்கின் தரத்தை உயர்த்த முடியும் எனவும் கூறுகிறது. அவற்றின் முழு தகவல்களையும் இச்செய்தியில் பார்ப்போம்.

எரிகோ டேங்க் பேட்
பைக் டேங்கின் பக்கவாட்டில் பொருத்த பயன்படும் இந்த பாகம், ஓட்டுபவரின் கால்முட்டிகள் பைக் டேங்கில் இருக்கும் பெயிண்ட்களில் படாமல் இருக்க பயன்படுகிறது. இதற்கு மட்டுமல்லாமல் பைக்கை வளைவுகளில் திருப்பும்போது ஒட்டுபவருக்கு நல்ல பிடிமானத்தையும் தருகிறது. கேடிஎம் 790 மாடல் பைக்கிற்கான இந்த எரிகோ டேங்க் பேட் ரூ.2354க்கு இந்திய மார்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

ஸ்விங்கார்ம்
கேடிஎம் நிறுவனம், பைக்கை விபத்து நேரங்களில் சேதாரம் அடையாமல் தடுக்கவும் பவர் பார்ட்ஸ்களை வழங்குகிறது. முன்புற ஃபோர்க்ஸ்களை பாதுகாக்க பாப்பின்ஸ் எனப்படும் தடுப்பாண்கள் முன்புற சக்கரத்தின் அச்சில் பொருத்தப்படுகிறது. பின்புற சக்கரத்தை பாதுகாக்க பின்புற ஸ்விங்கார்ம் பயன்படுத்தப்படுகிறது. இவ்விரண்டின் விலை இந்திய மதிப்பில் ரூ.3,575 ஆகும்.

முன்பக்க கண்ணாடி
790 ட்யூக் மாடலில் மிக சிறிய முன்பக்க கண்ணாடியை கேடிஎம் நிறுவனம் வழங்கியுள்ளது. ஆனால் வாடிக்கையாளர்கள் பவர் பார்ட்ஸில் உள்ள முன்பக்க கண்ணாடியின் மூலம் இதன் உயரத்தை அதிகரிக்க செய்ய முடியும். அதிக தூர பயணத்தின் போதும் வேகமான பயணத்தின் போதும் மிகவும் உதவிகரமாக இருக்கும் இந்த முன்பக்க கண்ணாடியின் விலை ரூ.7,868 ஆகும்.

பார்-எண்ட் கண்ணாடி
கேடிஎம் டியூக் 790ல் பைக்கின் ஓடும் வேகத்தை காட்டும் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்ட்டரில் அதன் அளவுக்கு ஏற்றாற்போல் சிறிய அளவிலான கண்ணாடியே பொருத்தப்பட்டிருக்கும். வாடிக்கையாளர் விரும்பினால் அந்த பகுதி முழுவதற்குமான கண்ணாடிகள் கிடைக்கும். இதன் மூலம் பைக்கானது ஸ்டைலாகவும் அதே நேரத்தில் வேகத்தின் மதிப்புகளை துல்லியமாகவும் காணலாம். இது இந்திய மார்கெட்டில் 9,866 ரூபாய்க்கு விற்கப்படவுள்ளது.

ப்ளூடூத்
கேடிஎம் நிறுவனம் ட்யூக் 790ல் நிலையான ப்ளூடூத் அமைப்பை கொடுக்கவில்லை. ஆனால் வாடிக்கையாளர்கள் ப்ளூடூத்தை கேடிஎம் மை ரைட் என்ற செயல்பாட்டின் மூலம் பெற்று கொள்ளலாம். இந்த ப்ளூடூத்தின் மூலம் பைக்கை ஓட்டுபவர் போனின் அழைப்புகள் மற்றும் பாடல்களை ஆன்-போர்ட்டு சுவிட்ச் கியர் வழியாக கேட்கலாம். இதன் விலை குறித்த விவரம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் கேடிஎம் நிறுவனம் ட்யூக் 790ல் சீட்டை அட்ஜெஸ்ட் செய்வதற்கான வசதியை பவர் பார்ட்ஸாக பைக்கின் அறிமுகத்தின் போதே வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த விவரமான தகவல்கள் கீழுள்ள லிங்கில் உள்ளன.

கேடிஎம் வழங்கும் பவர் பார்ட்ஸ்கள் பைக்கை அதன் உரிமையாளர்கள் அப்டேட் செய்ய நல்ல உதவிகரமாக இருக்கும். இந்த பாகங்கள் அனைத்தையும் கேடிஎம் நிறுவனமே தயாரித்துள்ளதால் இவை பைக்கில் கணக்கச்சிதமாக பொருந்தக்கூடியவை.


Click it and Unblock the Notifications








