இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் பைக் ஏப்ரலில் லான்ச் ஆகிறது... விலையை குறைக்கப்போவது இந்த யுக்திதான்

இந்தியாவில் உள்ள பைக் ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் பைக், அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் பைக் ஏப்ரலில் லான்ச் ஆகிறது... விலையை குறைக்கப்போவது இந்த யுக்திதான்

ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் ஸ்போர்ட்ஸ் பைக்குகளை தயாரித்து வருகிறது. கேடிஎம் நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு இந்தியாவில் பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. குறிப்பாக இந்திய இளைஞர்கள் மத்தியில் கேடிஎம் பைக்குகள் மிகவும் பிரபலம். இந்த சூழலில் இந்தியாவில் உள்ள கேடிஎம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் பைக் ஏப்ரலில் லான்ச் ஆகிறது... விலையை குறைக்கப்போவது இந்த யுக்திதான்

கேடிஎம் நிறுவனம் இறுதியாக தனது ட்யூக் 790 ஸ்ட்ரீட்ஃபைட்டர் (Duke 790 Streetfighter) பைக்கை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்தியாவில் உள்ள பைக் ஆர்வலர்கள் பலரும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருப்பது இந்த பைக்கிற்குதான். அனேகமாக கேடிஎம் ட்யூக் 790 ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக் அடுத்த மாதம் (ஏப்ரல்) களமிறங்கி விடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் பைக் ஏப்ரலில் லான்ச் ஆகிறது... விலையை குறைக்கப்போவது இந்த யுக்திதான்

ட்யூக் 790 ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்கை இந்தியாவில் சிகேடி (CKD-Completely Knocked Down) வழியில் விற்பனை செய்ய கேடிஎம் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதன்படி லைட்ஸ், இன்டிகேட்டர்ஸ் உள்ளிட்ட சில பார்ட்ஸ்கள் உள்ளூர் விற்பனையாளர்களிடம் வாங்கப்படவுள்ளன. அதே சமயம் இன்ஜின், சேஸிஸ் மற்றும் சஸ்பென்ஸன் ஆகியவை இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் பைக் ஏப்ரலில் லான்ச் ஆகிறது... விலையை குறைக்கப்போவது இந்த யுக்திதான்

போட்டி நிறுவனங்களின் பைக்குகளுடன் ஒப்பிடுகையில் விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக, கேடிஎம் நிறுவனம் சிகேடி வழியை தேர்வு செய்திருப்பதாக தெரிகிறது. இதில், மகிழ்ச்சியான மற்றொரு விஷயம் என்னவென்றால், ட்யூக் 790 ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்கின் 100 யூனிட்கள் ஏற்கனவே இந்தியாவிற்கு வந்து விட்டன.

இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் பைக் ஏப்ரலில் லான்ச் ஆகிறது... விலையை குறைக்கப்போவது இந்த யுக்திதான்

கேடிஎம் ட்யூக் 790 ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்கில், 799 சிசி, லிக்யூட் கூல்டு, எல்சி8சி பேரலல்-டிவின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 9,000 ஆர்பிஎம்மில் 105 பிஎஸ் பவர் மற்றும் 8,000 ஆர்பிஎம்மில் 86 என்எம் டார்க் திறனை உருவாக்கி சீறிப்பாயும் வல்லமை வாய்ந்தது. இதில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படவுள்ளது. இது சக்தியை பின் சக்கரத்திற்கு அனுப்பும்.

இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் பைக் ஏப்ரலில் லான்ச் ஆகிறது... விலையை குறைக்கப்போவது இந்த யுக்திதான்

ஸ்போர்ட், ஸ்ட்ரீட், ரெயின் மற்றும் டிராக் என மொத்தம் 4 ரைடிங் மோட்கள் வழங்கப்படவுள்ளன. இதுதவிர ஏபிஎஸ், கார்னரிங் ஏபிஎஸ், டிராக்ஸன் கண்ட்ரோல் மற்றும் வீலி கண்ட்ரோல் உள்பட பல்வேறு வசதிகளை கேடிஎம் நிறுவனம் ஸ்டாண்டர்டாக வழங்கவுள்ளது. கேடிஎம் ட்யூக் 790 ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்கில் முன்பகுதியில் ட்வின் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் இடம்பெற்றிருக்கும்.

இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் பைக் ஏப்ரலில் லான்ச் ஆகிறது... விலையை குறைக்கப்போவது இந்த யுக்திதான்

ட்யூக் 790 பைக்கை கேடிஎம் நிறுவனம் ரூ.6.5 லட்சம் என்ற மிக சவாலான ஆரம்ப விலையில் (எக்ஸ் ஷோரூம்) விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நெருங்கிய போட்டியாளர்களான கவாஸாகி இஸட்900 (Kawasaki Z900) மற்றும் டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் (Triumph Street Triple) ஆகிய பைக்குகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் பைக் ஏப்ரலில் லான்ச் ஆகிறது... விலையை குறைக்கப்போவது இந்த யுக்திதான்

கவாஸாகி இஸட்900 பைக்கின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 7.68 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் பைக்கானது, 9.20 - 11.13 லட்ச ரூபாய் என்ற டெல்லி எக்ஸ் ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கேடிஎம் என்ற பிராண்டு, குறைவான விலை ஆகிய காரணங்களால், ட்யூக் 790 ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்கின் விற்பனை அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் பைக் ஏப்ரலில் லான்ச் ஆகிறது... விலையை குறைக்கப்போவது இந்த யுக்திதான்

இதன் காரணமாக கவாஸாகி இஸட்900 மற்றும் டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆகிய பைக்குகளின் விலை குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதனிடையே மகாராஷ்டிர மாநிலம் புனேவிற்கு அருகே உள்ள அகுர்தி பகுதியில் பஜாஜ் நிறுவனத்தின் பிளாண்ட் உள்ளது. இங்கு அட்வான்ஸ்டு அசெம்ளி லைன் ஒன்றை அமைக்க கேடிஎம் நிறுவனம் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கும் பைக் ஏப்ரலில் லான்ச் ஆகிறது... விலையை குறைக்கப்போவது இந்த யுக்திதான்

உயர்ந்த தர நிலையை கடைபிடிப்பதற்காக ஆஸ்திரியாவில் இருந்து வருகை தரவுள்ள நிர்வாகிகள் குழு மூலமாக இந்த அசெம்ளி லைன் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source:MOTORING

More from DriveSpark

Article Published On: Wednesday, March 20, 2019, 18:20 [IST]
English summary
KTM Duke 790 Streetfighter To Launch In India By April 2019. Read in Tamil
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+