பிஎம்டபிள்யூ 320டி காருடன் போட்டியிட்ட கேடிஎம் 390 ட்யூக்: ஆச்சரியமளிக்கும் போட்டி முடிவு... வீடியோ!

கேடிஎம் 390 ட்யூக் பைக், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 320டி செடான் ரக காருடன் போட்டியிட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த போட்டியின் முடிவு பல்வேறு ஆச்சரியமளிக்கும் முடிவை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பிஎம்டபிள்யூ 320டி காருடன் போட்டியிட்ட கேடிஎம் 390 ட்யூக்: ஆச்சரியம் அளிக்கும் போட்டி முடிவு... வீடியோ!

காருக்கும், பைக்கிற்கும் இடையே ரேஸ் நடந்தால் எது வெற்றி பெறும்...? நம்மில் பெரும்பாலானோரின் பதில் காராகதான் இருக்கும். ஏனென்றால், பைக்கைக் காட்டிலும் கார்களில் அதிக திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜின்கள் நிறுவப்படுகின்றன. இதுவே, கார்தான் வெற்றிப் பெறும் என நாம் உறுதியாக கூற காரணமாக இருக்கின்றது.

ஆனால், அண்மைக் காலங்களாக விற்பனைக்கு வரும் பைக்குகள் அதிக திறன் கொண்டவையாக களமிறக்கப்படுகின்றன. அந்தவகையில், பைக்கில் நிறுவப்படும் எஞ்ஜினின் சிசி திறன், கார்களில் இருக்கும் எஞ்ஜின்களுக்கு இணையாக தாயரிக்கப்பட்டு வருகின்றன.

பிஎம்டபிள்யூ 320டி காருடன் போட்டியிட்ட கேடிஎம் 390 ட்யூக்: ஆச்சரியம் அளிக்கும் போட்டி முடிவு... வீடியோ!

பெரும்பாலான இளைஞர்களின் எதிர்பார்ப்பைக் கருத்தில் கொண்டு இரசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், களமிறக்கப்பட்ட கேடிஎம் 390 ட்யூக் பைக்கும், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 3-செரீஸ் வரிசையில் உள்ள 320டி மாடலும் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டன. இந்த போட்டியில் எது வெற்றியைப் தழுவியது என்ற சுவாரஸ்ய தகவலை இந்த பதிவில் காணலாம்.

பிஎம்டபிள்யூ 320டி காருடன் போட்டியிட்ட கேடிஎம் 390 ட்யூக்: ஆச்சரியம் அளிக்கும் போட்டி முடிவு... வீடியோ!

இந்த போட்டி குறித்த வீடியோ ஒன்றை ஆயுஷ் வர்மா என்ற யுடியூப் பக்கம் வெளியிட்டுள்ளது. அதில், கேடிஎம் நிறுவனத்தின் 390 ட்யூக் பைக்கும், என்ட்ரி லெவல் செடான் ரக காரான பிஎம்டபிள்யூ 320டி மாடல் காரும் ரேஸ் செய்கின்றன.

இதில், கேடிஎம்மின் ட்யூக் 390 பைக் அந்நிறுவனத்தின் மூலம் விற்பனை வரும் பைக்குகளிலேயே அதிக திறன் வாய்ந்த மாடலாக இருக்கின்றது. ஆகையால், அதன் எஞ்ஜினின் அதீத திறன், பல முன்னணி கார்களைக் கூட எளிதில் வீழ்த்திவிடும் வகையில் இருக்கின்றது.

பிஎம்டபிள்யூ 320டி காருடன் போட்டியிட்ட கேடிஎம் 390 ட்யூக்: ஆச்சரியம் அளிக்கும் போட்டி முடிவு... வீடியோ!

ஆகையால், இந்த போட்டியில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் என்ட்ரி லெவல் செடான் ரக காரை எளிதில் தோற்கடித்துவிட்டது. இது நமக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் இருக்கலாம். ஆனால், இதனை நாம் நம்பித்தான் ஆக வேண்டும். பிரிமியம் ரகத்தில் வரும் பிஎம்டபிள்யூ காரை, மிக எளிதாக ட்யூக் 390 பைக் வென்றுள்ளது. இதுகுறித்த காட்சிகளே அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.

வீடியோவில், ஆள்அரவமற்ற அந்த சாலையில் கேடிஎம் 390 ட்யூக் மற்றும் பிஎம்டபிள்யூ 320டி கார், ஆகிய இரண்டும் போட்டிக்காக தாயாரன நிலையில் நிற்கின்றன. மூன்று ஒலிக்கப்பட்ட ஹாரனை அடுத்து இரண்டு வாகனங்களும் வேகம் எடுக்க தொடங்குகின்றன. ஆனால், ஆரம்பத்திலேயே கேடிஎம் ட்யூக் 390 பைக் மின்னல் வேகத்தில் பாய ஆரம்பித்தது. அந்தவகையில், அதிகபட்சமாக மணிக்கு 155 கிமீ என்ற வேகத்தில் சென்று இலக்கை முதலில் தொட்டது.

பிஎம்டபிள்யூ 320டி காருடன் போட்டியிட்ட கேடிஎம் 390 ட்யூக்: ஆச்சரியம் அளிக்கும் போட்டி முடிவு... வீடியோ!

போட்டியின் இந்த முடிவு ஆச்சரியத்தை அளிக்கும் விதத்தில் இருந்தாலும், இதனை நாம் நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால், கேடிஎம்மின் பைக்குகள் அந்த அளவிற்கு திறன் வாய்ந்தவையாக இருக்கின்றன. இதன்காரணமாகவே இந்திய இளைஞர்கள் மத்தியில், கேடிஎம் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. மேலும், இந்த வரவேற்பின் காரணமாக அந்த நிறுவனம், அதிக திறன் கொண்ட பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கி வருகின்றது.

பிஎம்டபிள்யூ 320டி காருடன் போட்டியிட்ட கேடிஎம் 390 ட்யூக்: ஆச்சரியம் அளிக்கும் போட்டி முடிவு... வீடியோ!

அந்தவகையில், கேடிஎம் நிறுவனம் அதன் அதிக திறன் கொண்ட பைக்கான 790 ட்யூக் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது. ஆனால், இந்த பைக் வருகின்ற 2020ம் ஆண்டில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்னதாக, நடப்பாண்டிலேயே இந்த பைக் களமிறக்கப்பட இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால், சில காரணங்களால் 790 ட்யூக் அறிமுகத்தை அந்த நிறுவனம் அடுத்த வருடத்திற்கு தள்ளி வைத்துள்ளது.

பிஎம்டபிள்யூ 320டி காருடன் போட்டியிட்ட கேடிஎம் 390 ட்யூக்: ஆச்சரியம் அளிக்கும் போட்டி முடிவு... வீடியோ!

கேடிஎம் 390 ட்யூக் பைக்கில் 373.2சிசி திறன் கொண்ட லிக்யூட் கூல்ட், சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அது, 43 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. அதேபோன்று, பிஎம்டபிள்யூ 320டி செடான் காரில் 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 4,000 ஆர்பிஎம்மில் 184 பிஎச்பி பவரையும், 1,750-2,750 ஆர்பிஎம்மில் 380 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

பிஎம்டபிள்யூ 320டி காருடன் போட்டியிட்ட கேடிஎம் 390 ட்யூக்: ஆச்சரியம் அளிக்கும் போட்டி முடிவு... வீடியோ!

கேடிஎம் ட்யூக்கின் எஞ்ஜின் திறனைக் காட்டிலும், பிஎம்டபிள்யூ காரின் திறன் அதிகமாக இருக்கின்றது. இருப்பினும் இந்த கார் தோற்பதற்கு காரணமாக அதன் எடையே இருக்கின்றது. பிஎம்டபிள்யூ 320டி காரின் எடை ஒட்டு மொத்தமாக 1,490 கிலோவாக இருக்கின்றது. இதுவே, காரின் உடனடி உந்து விசையைத் தடுத்து, வேகத்தைக் குறைக்கின்றது. ஆனால், கேடிஎம் பைக் அவ்வாறு இல்லாமல், காற்றைக் கிழித்து செல்லும் வகையிலான தோற்றத்தையும் பிக்-அப் வேகத்தை அதிகமாக கொண்டிருப்பதால் இந்த போட்டியில் வெற்றிப்பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ 320டி காருடன் போட்டியிட்ட கேடிஎம் 390 ட்யூக்: ஆச்சரியம் அளிக்கும் போட்டி முடிவு... வீடியோ!

அதேசமயம், 0-த்தில் இருந்தது 100 கிமீ என்ற வேகத்தை பிஎம்டபிள்யூ கார் 7.2 செகண்டில் தொடுகின்றது. அதுவே கேடிஎம் ட்யூக் பைக்கை பார்த்தோமேயானால் வெறும் 5.6 செகண்டுகளிலேயே தொட்டுவிடும். ஆனால், பிஎம்டபிள்யூ 320டி கார் மணிக்கு 235 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.

பிஎம்டபிள்யூ 320டி காருடன் போட்டியிட்ட கேடிஎம் 390 ட்யூக்: ஆச்சரியம் அளிக்கும் போட்டி முடிவு... வீடியோ!

கேடிஎம் 390 ட்யூக் பைக் மணிக்கு 167 கிமீ வேகத்தில் மட்டுமே செல்லும். ஆகையால், இந்த போட்டியானது, நீண்ட இடைவெளியில் நிகழ்த்தப்பட்டிருந்தால், பிஎம்டபிள்யூ 320டி செடான் காரேப் பெற்றிருக்கும். இருப்பினும் தற்போதைய போட்டியில் சாமர்த்தியமாக செயல்பட்ட கேடிஎம் 390 ட்யூக் பைக் வெற்றிப் பெற்றுள்ளது.

Most Read Articles
English summary
KTM 390 Duke vs BMW 3-Series 320d Drag Race: Which One Faster. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X