டீலர்களின் லாபத்திற்கு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் தள்ளிய கேடிஎம்... முழு விபரம்!!!

கேடிஎம் நிறுவனம், அதன் டீலர்களுடைய லாபத்திற்காக அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதனால், அதன் ரசிகர்கல் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

டீலர்களின் லாபத்திற்கு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் தள்ளிய கேடிஎம்... முழு விபரம்!!!

கேடிஎம் நிறுவனம், அதன் குறிப்பிட்ட இரு மாடல்களின் விலையை மட்டும் உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில், ட்யூக் 125 மற்றும் ஆர்சி 125 ஆகிய இரு மாடல் பைக்குகளின் விலையை மட்டும் அந்நிறுவனம் உயர்த்தியுள்ளது. இதுகுறித்த தகவலை ஆட்டோகார் ஆங்கில தளம் வெளியிட்டுள்ளது.

டீலர்களின் லாபத்திற்கு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் தள்ளிய கேடிஎம்... முழு விபரம்!!!

கேடிஎம் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால், ட்யூக் 125 மீது ரூ. 2,248 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், இதன் விலை தற்போது ரூ. 1,32,500-ஆக உயர்ந்துள்ளது. அதேபோன்று, ஆர்சி 125 பைக்கின் விலையிலும் ரூ. 1,537 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், இதன் விலையும் சற்று உயர்ந்து ரூ. 1,48,750 என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட உள்ளது.

டீலர்களின் லாபத்திற்கு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் தள்ளிய கேடிஎம்... முழு விபரம்!!!

மேற்கூறிய அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும். ஆகையால், மாநிலத்திற்கு மாநிலம் இந்த தொகை மாறுபட்டு காணப்படலாம்.

கேடிஎம் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை, டீலர்களுக்கு கிடைக்கும் லாபத்தை சற்று உயர்த்தும் நோக்கிலேயே மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆட்டோகார் தகவல் வெளியிட்டுள்ளது.

டீலர்களின் லாபத்திற்கு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் தள்ளிய கேடிஎம்... முழு விபரம்!!!

தற்போது, இந்திய இளைஞர்கள் மத்தியில் 125 சிசி திறனிலான பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது, இந்த பைக்குகள் மலிவான விலையில், ஸ்போர்ட்ஸ் ரகத்தில் கிடைப்பதாகும். அத்துடன், இவை பிரிமியம் தரம் மற்றும் ஸ்போர்ட்ஸ் பைக்குகளைப் போல நல்ல பிக்-அப் திறனைப் வெளிப்படுத்துவதன் காரணத்தால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

டீலர்களின் லாபத்திற்கு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் தள்ளிய கேடிஎம்... முழு விபரம்!!!

ஆகையால், இந்தியாவில் 125சிசி பைக்குகளுக்கான வரவேற்பு அமோகமாக இருக்கின்றது. எனவே, இதனைப் பயன்படத்திக் கொள்ளும் விதமாக, வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் பிரபல புகழ்வாய்ந்த மாடல்களில் 125சிசி திறனிலான இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன.

டீலர்களின் லாபத்திற்கு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் தள்ளிய கேடிஎம்... முழு விபரம்!!!

இதனடிப்படையிலேயே கேடிஎம் நிறுவனமும், அதன் புகழ்வாய்ந்த ட்யூக் மற்றும் ஆர்சி மாடல்களில் 125சிசி திறன் கொண்ட பைக்குகளை இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றன. இந்த பைக்குகள் நல்ல விற்பனை விகிதத்தையும் பெற்று வருகின்றது.

டீலர்களின் லாபத்திற்கு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் தள்ளிய கேடிஎம்... முழு விபரம்!!!

இந்நிலையில், கேடிஎம் நிறுவனம் இவ்விரு பைக்குகளின் விலையையும் அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ளது. கேடிஎம் ஆர்சி 125 இந்தியாவில் விற்பனையாகும் 125சிசி பைக்குகளிலேயே அதிக விலைக் கொண்டதாக இருக்கின்றது. தற்போது, இதன் விலை கணிசமாக உயர்த்தப்பட்டிருப்பதால், அது மேலும் காஸ்ட்லியான பைக்காக மாறியுள்ளது.

டீலர்களின் லாபத்திற்கு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் தள்ளிய கேடிஎம்... முழு விபரம்!!!

முக்கியமாக இந்த பைக்கின் ஸ்டைல் மற்றும் திறன், மற்ற 125சிசி பைக்குகளைக் காட்டிலும் கூடுதலாக இருப்பதன் காரணத்தால், இந்த பைக்கிற்கு இத்தகைய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் கேடிஎம் ஆர்சி 390 மாடலின் டிசைன் தாத்பரியங்களை அப்படியேப் பெற்று உருவாகியிருக்கின்றது.

டீலர்களின் லாபத்திற்கு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் தள்ளிய கேடிஎம்... முழு விபரம்!!!

ஆனால் திறனில் மட்டும் அதைவிட மிகக் குறைவானதாக இருக்கின்றது.

அந்தவகையில், இதில் 124சிசி திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 14.9 பிஎஸ் பவரையும், 12 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

டீலர்களின் லாபத்திற்கு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் தள்ளிய கேடிஎம்... முழு விபரம்!!!

இதேஎஞ்ஜின் திறனைதான் கேடிஎம் ட்யூக்125 பைக் பெற்றிருக்கின்றது. எஞ்ஜின் ஒரே மாதிரியானதாக இருந்தாலும், ஸ்டைல் மற்றும் சிறப்பம்சங்களில் இரண்டு பைக்குகளுக்கும் வித்தியாசம் கொண்டவையாக இருக்கின்றது.

டீலர்களின் லாபத்திற்கு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் தள்ளிய கேடிஎம்... முழு விபரம்!!!

மேலும், இந்த பைக் ஆர்சி 125 நேக்கட் ரகமாகும். ஆகையால், ஒரு சில அம்சங்களிலும் மட்டும் இரண்டிற்குமான வித்தியாசம் வெளிப்படுகின்றது. இதுபோன்ற சில காரணங்களாலேயே இரண்டிற்கும் இடையேயான விலை கணிசமான வித்தியாசத்தைக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 14, 2019, 11:21 [IST]
English summary
KTM Hiked Duke 125 & RC 125 Prices In India. Read In Tamil.
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+