அதிர்ச்சி அறிவிப்புகளை வெளியிடும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள்: கேடிஎம் அறிவிப்பால் உறைந்த ரசிகர்கள்!

ட்யூக் ரசிகர்கள் உறைந்துபோகும் அளவிற்கு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட கேடிஎம் நிறுவனம். இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

தொடர்ச்சியாக அதிர்ச்சி அறிவிப்புகளை வெளியிடும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள்: கேடிஎம் அறிவிப்பால் உறைந்துபோன ரசிகர்கள்!

ஆஸ்திரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் கேடிஎம் நிறுவனம், ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளைத் தயாரிப்பதில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. அதன்படி, இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதேபோன்று, கேடிஎம்-இன் ஸ்டைலிஸான லுக்கிற்கு இந்திய இளைஞர்கள் மத்தியிலும் அமோகமான வரவேற்பு உண்டு. இதனாலேயே இந்த நிறுவனம், இளைஞர்களைக் கவரும் விதத்தில் ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் முக்கியத்துவம் செலுத்தி வருகிறது.

தொடர்ச்சியாக அதிர்ச்சி அறிவிப்புகளை வெளியிடும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள்: கேடிஎம் அறிவிப்பால் உறைந்துபோன ரசிகர்கள்!

அந்தவகையில், கடந்த ஆண்டு கேடிஎம் ட்யூக் வரிசையில் விலை குறைவான மாடலாக 125சிசி கொண்ட ட்யூக்125 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இதன் எஞ்ஜின் சக்தியானது மற்ற மாடல்களைக் காட்டிலும் சற்று குறைவாக தான் உள்ளது. இருப்பினும், கேடிஎம்-மிற்கே உரித்தான ஸ்டைலை இந்த ட்யூக்125 பெற்றிருந்ததால், இதன் விற்பனை அமோகமாக இருந்தது. அவ்வாறு கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 3 ஆயிரத்து 14 நான்கு யூனிட் ட்யூக்125 மோட்டார்சைக்கிள்கள் விற்பனையாகி உள்ளன.

தொடர்ச்சியாக அதிர்ச்சி அறிவிப்புகளை வெளியிடும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள்: கேடிஎம் அறிவிப்பால் உறைந்துபோன ரசிகர்கள்!

இதனால், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற மாடலாக இந்த மோட்டார்சைக்கிள் பார்க்கப்பட்டது. இந்த மோட்டார்சைக்கிளினை ரூ.1.18 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், ட்யூக்125 மாடலின் விலையை கேடிஎம் நிறுவனம் ரூ.7 ஆயிரம் உயர்த்தி அறிவித்துள்ளது. இதனால், ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர்.

தொடர்ச்சியாக அதிர்ச்சி அறிவிப்புகளை வெளியிடும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள்: கேடிஎம் அறிவிப்பால் உறைந்துபோன ரசிகர்கள்!

சமீபகாலமாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகள் மீதான விலையை உயர்த்தி அறிவித்து வருகின்றனர். இதற்கு காரணமாக உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் பொருளாதார காரணிகள் கூறப்படுகின்றன. அவ்வாறு, டாடா, நிஸான் மற்றும் மஹிந்திரா ஆகிய கார் நிறுவனங்கள் தங்கள் வாகனங்களின் விலையை கணிசமாக உயர்த்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, பல்வேறு இருசக்கர வாகன நிறுவனங்களும் தங்களின் மோட்டார்சைக்கிளின் விலையை உயர்த்தி அறிவித்து வருகின்றனர்.

தொடர்ச்சியாக அதிர்ச்சி அறிவிப்புகளை வெளியிடும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள்: கேடிஎம் அறிவிப்பால் உறைந்துபோன ரசிகர்கள்!

இந்நிலையில்தான், கேடிஎம் நிறுவனமும் தனது ட்யூக்125 மாடல் மோட்டார் சைக்கிள்மீது இந்திய மதிப்பில் ரூ.7 ஆயிரத்தை உயர்த்தி அறிவித்துள்ளது அந்த நிறுவனம். ஆகையால் இந்த மோட்டார்சைக்கிள் தற்போது ரூ. 1,24,998 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த மாற்றியமைக்கப்பட்ட விலையானது நேற்று (ஏப்ரல் 1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

தொடர்ச்சியாக அதிர்ச்சி அறிவிப்புகளை வெளியிடும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள்: கேடிஎம் அறிவிப்பால் உறைந்துபோன ரசிகர்கள்!

இந்த பைக்கில் இருக்கும் 124.7 சிசி எஞ்ஜின் அதிகபட்சமாக 14.3 பிஎச்பி பவரையும், 12என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது. மேலும், இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, இந்த பைக்கில் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் இருப்பது பைக்கின் கவர்ச்சிக்கும், உறுதிக்கும் சிறப்பான தோற்றத்தைக் கொடுக்கிறது.

தொடர்ச்சியாக அதிர்ச்சி அறிவிப்புகளை வெளியிடும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள்: கேடிஎம் அறிவிப்பால் உறைந்துபோன ரசிகர்கள்!

இதேபோன்று, முன்புறத்தில் இன்வர்டெட் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 10 ஸ்டெப் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய மோனோ ஷாக் அப்சார்பரும் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, முன்சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த விலை உயர்வானது, தற்போது விற்பனையாகும் அப்பாச்சி நிறுவனத்தின் ஆர்டிஆர் 200 மற்றும் பல்சர் என்எஸ்200 மோட்டார்சைக்கிளைக் காட்டிலும் விலையுயர்ந்ததாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 2, 2019, 10:37 [IST]
English summary
KTM Increased Duke125 Price In India. Read In Tamil.
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+