இந்தியாவில் 250 சிசி அட்வென்ச்சர் பைக்கை களமிறக்குகிறது கேடிஎம்!

புதிய 250 சிசி அட்வென்ச்சர் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய கேடிஎம் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவில் 250 சிசி அட்வென்ச்சர் பைக்கை களமிறக்குகிறது கேடிஎம்!

கேடிஎம் நிறுவனத்தின் ஆர்சி மற்றும் ட்யூக் வரிசை பைக் மாடல்களுக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், அட்வென்ச்சர் ரக மாடல்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் 250 சிசி அட்வென்ச்சர் பைக்கை களமிறக்குகிறது கேடிஎம்!

அதன்படி, தனது 390 அட்வென்ச்சர் பைக்கை இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு கேடிஎம் திட்டமிட்டுள்ளது. இந்த பைக் கேடிஎம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலைத் தூண்டி உள்ளது. இந்த நிலையில், கேடிஎம் பிரியர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் 250 சிசி அட்வென்ச்சர் பைக்கை களமிறக்குகிறது கேடிஎம்!

ஆம். 250 சிசி அட்வென்ச்சர் பைக் மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய கேடிஎம் திட்டமிட்டுள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. ஏற்கனவே விற்பனையில் உள்ள கேடிஎம் 250 ட்யூக் பைக்கின் அடிப்படையில் இந்த அட்வென்ச்சர் பைக் பங்கிட்டுக் கொள்ளும்.

இந்தியாவில் 250 சிசி அட்வென்ச்சர் பைக்கை களமிறக்குகிறது கேடிஎம்!

கேடிஎம் 250 ட்யூக் பைக்கின் எஞ்சின் உள்ளிட்ட பல பாகங்களை இந்த புதிய அட்வென்ச்சர் பைக் பங்கிட்டுக் கொள்ளும். ஆனால், கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கில் இடம்பெறும் பல முக்கிய அம்சங்கள் இதில் இருக்காது.

இந்தியாவில் 250 சிசி அட்வென்ச்சர் பைக்கை களமிறக்குகிறது கேடிஎம்!

இந்த பைக்கில் ஹாலஜன் பல்புகள் கொண்ட ஹெட்லைட் இடம்பெறும். அதேபோன்று, வண்ணத் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் இடம்பெறாது என்று தெரிகிறது. 390 அட்வென்ச்சர் பைக்கில் கான்டினென்டல் டயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், உள்ளூர் சப்ளையரிடமிருந்து டயர்கள் பெற்று இந்த பைக்கில் பயன்படுத்தப்படும்.

இந்தியாவில் 250 சிசி அட்வென்ச்சர் பைக்கை களமிறக்குகிறது கேடிஎம்!

புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் மாடலில் 250 சிசி எஞ்சின் 30 எச்பி பவரையும், 24 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். அதேநேரத்தில், இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்படும் வாய்ப்பும் இருக்கிறது.

இந்தியாவில் 250 சிசி அட்வென்ச்சர் பைக்கை களமிறக்குகிறது கேடிஎம்!

வரும் நவம்பர் மாதம் இத்தாலியில் நடைபெற இருக்கும் ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இந்த புதிய 250 சிசி அட்வென்ச்சர் பைக்கை கேடிஎம் பார்வைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் 250 சிசி அட்வென்ச்சர் பைக்கை களமிறக்குகிறது கேடிஎம்!

புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் ரூ.3 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 250 சிசி அட்வென்ச்சர் பைக் குறைவான விலையில் நிலைநிறுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது.

Source: Autocarindia

More from DriveSpark

Article Published On: Friday, August 30, 2019, 16:02 [IST]
English summary
According to media report, KTM is planning to launch new 250 Adventure in India by early next year.
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+