டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்... புதிய கேடிஎம் 890 ட்யூக் இந்திய அறிமுக விபரம்!

புதிய கேடிஎம் 890 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறித்து டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு கிடைத்துள்ள பிரத்யேக தகவலை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்... புதிய கேடிஎம் 890 ட்யூக் இந்திய அறிமுக விபரம்!

கேடிஎம் நிறுவனத்தின் ட்யூக் வரிசை பைக்குகளுக்கான வரவேற்பு அறிந்ததே. துள்ளலான தோற்றமும், செயல்திறனும் இந்திய இளைஞர்களை வசியம் செய்து விட்டன. நேக்கட் ரக ஸ்டைலிலான கேடிஎம் ட்யூக் வரிசை பைக்குகள் 125, 200, 250 மற்றும் 390 என பல்வேறு சிசி திறன் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்... புதிய கேடிஎம் 890 ட்யூக் இந்திய அறிமுக விபரம்!

இந்த நிலையில், அடுத்த மாதம் சக்திவாய்ந்த 790 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது செய்தி வெளியிட்டு இருந்தோம். தற்போது 890 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறித்து கேடிஎம் வட்டாரத்திலிருந்து எமக்கு பிரத்யேக தகவல் கிடைத்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்... புதிய கேடிஎம் 890 ட்யூக் இந்திய அறிமுக விபரம்!

அடுத்த ஆண்டு புதிய கேடிஎம் 890 ட்யூக் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த புதிய பைக் மாடல் புதிய டிசைன் அம்சங்கள், கூடுதல் செயல்திறன் மற்றும் யூரோ-6 மாசு உமிழ்வு திறன் கொண்ட எஞ்சினுடன் வர இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்... புதிய கேடிஎம் 890 ட்யூக் இந்திய அறிமுக விபரம்!

மேலும், அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய 790 ட்யூக் பைக்கிற்கு மாற்றாக புதிய 890 ட்யூக் பைக் நிலைநிறுத்தப்படும் என்றும் தெரிகிறது. மேலும், 790 ட்யூக் பைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்... புதிய கேடிஎம் 890 ட்யூக் இந்திய அறிமுக விபரம்!

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக்கில் 799 சிசி எல்சி-8 பேரலல் ட்வின் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 104 பிஎச்பி பவரையும், 86 என்எxம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் பெற்றிருக்கிறது. ஆனால், 890 ட்யூக் பைக்கின் எஞ்சின் 790 பைக்கைவிட 10 சதவீதம் கூடுதல் பவர் மற்றும் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்... புதிய கேடிஎம் 890 ட்யூக் இந்திய அறிமுக விபரம்!

புதிய கேடிஎம் 890 ட்யூக் பைக்கில் பிரெம்போ காலிபர்கள், குயிக் ஷிஃப்டர், டிராக்ஷன் கன்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், லான்ச் கன்ட்ரோல், ஸ்போர்ட், ஸ்ட்ரீட் மற்றும் ரெயின் என முன்று டிரைவிங் மோடுகள், ஆன்ட்டி வீலி கன்ட்ரோல் உள்ளிட்ட நுட்பங்களுடன் வரும் என்று தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்... புதிய கேடிஎம் 890 ட்யூக் இந்திய அறிமுக விபரம்!

புதிய கேடிஎம் 890 ட்யூக் பைக் வரும் நவம்பர் மாதம் இத்தாலியில் நடைபெற இருக்கும் ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இந்த புதிய பைக்கின் விபரங்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பிரிமீயம் ரக மாடலாக நிலைநிறுத்தப்படும்.

குறிப்பு: கேடிஎம் 790 ட்யூக் படங்கள் மாதிரிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, August 24, 2019, 17:06 [IST]
English summary
According to our sources, KTM is planning to launch 890 Duke bike in India by next year.
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+