பிஎஸ்-6 கேடிஎம் பைக்குகள் வருகை குறித்த புதிய தகவல்!

பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட கேடிஎம் பைக்குகளின் வருகை குறித்து புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பிஎஸ்-6 கேடிஎம் பைக்குகள் வருகை குறித்த புதிய தகவல்!

புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்ட எஞ்சினுடன் வாகனங்களை அறிமுகப்படுத்துவதில் நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், கேடிஎம் பைக் நிறுவனமும் பிஎஸ்-6 மாடல்களை அறிமுகப்படுத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறது.

பிஎஸ்-6 கேடிஎம் பைக்குகள் வருகை குறித்த புதிய தகவல்!

இந்தியாவில் விற்பனையில் இருக்கும் கேடிஎம் நிறுவனத்தின் ட்யூக், ஆர்சி வரிசை மாடல்கள் அனைத்துமே பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கேடிஎம் நிறுவனத்தின் பிஎஸ்-6 பைக் மாடல்கள் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிஎஸ்-6 கேடிஎம் பைக்குகள் வருகை குறித்த புதிய தகவல்!

வரும் டிசம்பர் 20 முதல் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கேடிஎம் 125 பைக்கை தவிர்த்து, கேடிஎம் 250 ட்யூக், 390 ட்யூக், ஆர்சி 390 ஆகிய பைக் மாடல்களின் வினியோகப்பணிகள் வரும் டிசம்பர் 20 முதல் துவங்கப்பட இருக்கிறதாம்.

பிஎஸ்-6 கேடிஎம் பைக்குகள் வருகை குறித்த புதிய தகவல்!

அதேநேரத்தில், கேடிஎம் 125 ட்யூக் பைக்கின் டெலிவிரி ஜனவரியிலும், 200 ட்யூக் பைக்கின் டெலிலிரி வரும் பிப்ரவரியிலும் துவங்கப்பட இருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

பிஎஸ்-6 கேடிஎம் பைக்குகள் வருகை குறித்த புதிய தகவல்!

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு வரும் புதிய கேடிஎம் பைக்குகளின் விலை ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை கூடுதலாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

பிஎஸ்-6 கேடிஎம் பைக்குகள் வருகை குறித்த புதிய தகவல்!

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு வரும் பைக்குகளில் எஞ்சினின் செயல்திறன் சற்று குறைவாக இருக்கிறது. ஆனால், கேடிஎம் பைக்குகளின் அவ்வாறு பெரிய அளவிலான மாற்றம் இருக்காது என்று நம்பலாம்.

பிஎஸ்-6 கேடிஎம் பைக்குகள் வருகை குறித்த புதிய தகவல்!

அடுத்த மாதம் கோவாவில் நடைபெற இருக்கும் இந்திய பைக் திருவிழாவில் கேடிஎம் நிறுவனத்தின் 250 மற்றும் 390 அட்வென்ச்சர் பைக் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இவையும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் எதிர்பார்க்கலாம்.

பிஎஸ்-6 கேடிஎம் பைக்குகள் வருகை குறித்த புதிய தகவல்!

இதுதவிர்த்து, கேடிஎம் நிறுவனத்தின் 790 அட்வென்ச்சர் பைக்கும் இந்திய பைக் வீக் திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட இருப்பதாக தெரிகிறது. அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்த புதிய பைக் மாடல் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Autocarindia

More from DriveSpark

Article Published On: Tuesday, November 26, 2019, 12:10 [IST]
English summary
According to report, KTM is planning to launch BS-6 complaint bike models in India by next month.
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+