விற்பனைக்கு வருகிறது கேடிஎம் ஆர்சி 125: உற்சாகத்தில் கேடிஎம் ரசிகர்கள்

கேடிஎம் வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கேடிஎம் ஆர்சி 125 வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு வருகிறது. இதனால் கேடிஎம் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இது குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

விரைவில் விற்பனைக்கு வரும் கேடிஎம் ஆர்சி 125: உற்சாகத்தில் கேடிஎம் ரசிகர்கள்

கடந்த 2007ம் ஆண்டு முதல் இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து ஆஸ்திரியன் நாட்டைச் சேர்ந்த கேடிஎம் நிறுவனம் பைக்குகளை விற்பனைச் செய்து வருகிறது. கேடிஎம் நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு கேடிஎம் ட்யூக் 125 பைக்கினை அறிமுகம் செய்தது. அறிமுகமானது முதல் ட்யூக் 125 விற்பனையில் அமோக வரவேற்பை பெற்றது. குறைந்த ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டதால் ட்யூக் 125 வாடிக்கையாளர்களிடம் ட்யூக் 125 நல்ல வரவேற்பை பெற்றது.

விரைவில் விற்பனைக்கு வரும் கேடிஎம் ஆர்சி 125: உற்சாகத்தில் கேடிஎம் ரசிகர்கள்

இந்நிலையில் சமீபத்தில் கேடிஎம் ஆர்சி 125 பைக்கினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.மேலும் சாலைகளில் ஆர்சி பைக் டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்டது. ட்யூக் 125 பைக்கின் தாக்கத்தினால் ஆர்சி 125 பைக்கின் வருகை வாடிக்கையாளர்களிடம் பெரும் ஆவலை தூண்டியது. தற்போது வரும் ஜூன் மாதம் கேடிஎம் ஆர்சி 125 பைக் விற்பனைக்கு வரும் என கேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது.

விரைவில் விற்பனைக்கு வரும் கேடிஎம் ஆர்சி 125: உற்சாகத்தில் கேடிஎம் ரசிகர்கள்

ட்யூக் 125 பைக்கின் டிசைனை மையமாக கொண்டு கேடிஎம் ஆர்சி 125 பைக் டிசைன் அமைத்துள்ளது, மேலும் ட்யூக் 125 பைக்கில் உள்ள அதே என்ஜின்தான் ஆர்சி 125 பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் கூடுதல் மாற்றங்களாக எக்சாஸ்ட் சிஸ்டம் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ளது. இது ட்யூக் 125 பைக்கினை விட கூடுதல் வேகம் கிடைக்க இந்த மாற்றம் செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.

விரைவில் விற்பனைக்கு வரும் கேடிஎம் ஆர்சி 125: உற்சாகத்தில் கேடிஎம் ரசிகர்கள்

மேலும் இதன் முன் டயரில் 4-பிஸ்டன் காலிபர் கொண்ட 300mm டிஸ்க் பிரேக்கும், பின் டயரில் 200mm டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஆர்சி 125 பைக்கின் முன்பக்கத்தில் டபிள்யூபி அப்சைட்-டவுண் ஃபோர்க் சஸ்பென்ஷனும், பின்பக்கத்தில் மோனோ-சாக் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளன. இதில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது.

விரைவில் விற்பனைக்கு வரும் கேடிஎம் ஆர்சி 125: உற்சாகத்தில் கேடிஎம் ரசிகர்கள்

ஆர்சி 125 பைக்கின் சக்தி வாய்ந்த 124.7சிசி லிக்யூடு கூல்ட் எஞ்ஜின் 14.3 பிஎச்பி பவரையம் 12 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேலும், இதில் 6-ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஆர்சி 125 பைக் என்ஜின் மற்றும் அம்சங்கள் ட்யூக் 125 பைக்கினை போல இருந்தாலும் ஆர்சி 125 பைக்கின் செயல்திறன் ட்யூக் பைக்கினை விட சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் விற்பனைக்கு வரும் கேடிஎம் ஆர்சி 125: உற்சாகத்தில் கேடிஎம் ரசிகர்கள்

கேடிஎம் ஆர்சி 125 பைக் இந்திய மதிப்பில் ரூ. 1.4 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. யமஹா நிறுவனத்தின் யமஹா ஆர்15 வி3 மாடலுக்கு போட்டியாக கேடிஎம் ஆர்சி 125 பைக் களமிறங்குகிறது. கேடிஎம் ஆர்சி 125 பைக் ட்யூக் 125 பைக்கினை போலவே விற்பனையில் சாதனை படைக்குமா என கேடிஎம் ரசிகர்கள் ஆவலாய் உள்ளனர்.

Most Read Articles
English summary
ktm rc 125 india launch in june 2019: Read More in Tamil
Story first published: Thursday, May 2, 2019, 12:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X