இந்தியாவின் அதிக விலைகொண்ட 125சிசி பைக்... கேடிஎம்-மின் புதிய ரிலீஸ் இதுதான்...!
கேடிஎம் நிறுவனம், அதன் 125 ட்யூக் பேஸ்ட் ஆர்சி125 என்ற புதிய மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஆஸ்திரியன் நாட்டைச் சேர்ந்த கேடிஎம் நிறுவனம், இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து, அதன் தயாரிப்புகளை விற்பனைச் செய்து வருகின்றது. இந்நிலையில், கேடிஎம் நிறுவனம், ட்யூக்-மாதிரியான புத்தம் புதிய ஆர்சி 125 என்ற ஸ்போர்ட்ஸ் ரக பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த பைக் அதன் மூதாதையர்களான ஆர்சி 200 மற்றும் ஆர்சி390 மாடலை ஒத்தாக உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப வகையில், அதன் பாடி தோற்றம் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் அமைந்துள்ளன. இந்த 125சிசி பைக், இந்த சிசி திறனில், இந்தியாவில் விற்பனையாகும் மற்ற பைக்குகளைக் காட்டிலும் அதிக விலையுயைக் கொண்ட பைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில், அதற்கு ரூ. 1.47 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையானது, அதிக சக்தி வாய்ந்த யமஹா ஆர்15 வி3 பைக்கைக் காட்டிலும், சற்று அதிகமான விலைக் கொண்ட பைக்காக இருக்கின்றது. இந்த மோட்டார்சைக்கிளில் 125சிசி திறன்கொண்ட லிக்யூடு கூல்ட் 4 ஸ்ட்ரோக் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இதே எஞ்ஜின்தான் ட்யூக் 125 பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஷார்ட் ஸ்ட்ரோக் மோட்டாரில் நான்கு வால்வுகள் கொண்ட தலை, இரண்டு கேம்ஷாஃப்ட்ஸ் மற்றும் ப்யூவல் இன்ஜெக்ஷன் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதேசமயம், இந்த எஞ்ஜின் 14.5 பிஎஸ் பவரை 9,250 ஆர்பிஎம்மிலும், 12என்எம் டார்க்கை 7,000 ஆர்பிஎம்மிலு வழங்கும் திறன்கொண்டது. இத்துடன் இந்த எஞ்ஜினில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பைக்கில் பாதுகாப்பு வசதியாக டிஸ்க் பிரேக்குடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

125 சிசி முதல் 373 சிசி வரையிலான எஞ்ஜின் திறனைக் கொண்ட பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்து வரும், கேடிஎம் நிறுவனம், அதன் பவர்ஃபுல் பைக்கான 790 ட்யூக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தது. ஆனால், அதன் அறிமுகத்தை ஒத்தி வைத்து அண்மையில் அறிவித்தது.

கேடிஎம் நிறுவனத்தின் அனைத்து ரக பைக்கிற்கும் இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. அந்தவகையில், அதிக சக்தி வாய்ந்த மாடலாக களமிறங் இருந்த கேடிஎம் 790 ட்யூக் பைக்மீதும் இளைஞர்கள் மத்தியில் நல்ல எதிர்ப்பார்ப்ப நிலவி வந்தது.

இந்த எதிர்பார்ப்பினை உடைத்தெறியும் விதமாக, கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் அறிமுகத்தை அந்த நிறுவனம் வருகின்ற 2020ம் ஆண்டிற்கு மாற்றியமைத்தது. இவ்வாறு, அந்த நிறுவனம் இத்துடன் இரண்டு முறைக்கும் மேலாக, அறிமுகத்தை ஒத்தி வைத்து அறிவித்துள்ளது.

இந்நிலையில்தான், ட்யூக் பேஸ்ட் 125 சிசி கேடிஎம் பைக் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமகும் செய்யப்பட்டுள்ளது. நல்ல ஸ்டைலில் இந்த பைக் காணப்பட்டாலும், அதிக விலையைக் கொண்ட மாடலாக இது இருக்கின்றது. ஆகையால், இந்த பைக்கிற்கு எந்த அளவிற்கு இந்தியச் சந்தையில் வரவேற்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


Click it and Unblock the Notifications








