புதிய மாடல் பைக்கை இந்தியாவில் சோதனை செய்யும் கேடிஎம்: ஸ்பை படங்கள் கசிந்தன...!

கேடிஎம் நிறுவனம் தனது புதிய மாடல் ஆர்சி125 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் வைத்து பரிசோதனை செய்யும் ஸ்பை புகைப்படங்கள் கசிந்துள்ளன.

புதிய மாடல் பைக்கை இந்தியாவில் வைத்து சோதனை செய்யும் கேடிஎம்: பைக்கின் புகைப்படம் மற்றும் சிறப்பு தகவல்கள்...!

ஆஸ்திரியாவைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான கேடிஎம், இந்தியா மற்றும் உலக நாடுகள் முழுவதும் இளைஞர்களைக் கவரும் விதமாக ஸ்போர்ட்ஸ் ரக இரு சக்கர வாகனங்களை விற்பனைச் செய்துவருகிறது. இந்த நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள்கள் மீது மதி மயங்கிய இளைஞர்கள், அதற்கான சந்தையை பெருமளவில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

புதிய மாடல் பைக்கை இந்தியாவில் வைத்து சோதனை செய்யும் கேடிஎம்: பைக்கின் புகைப்படம் மற்றும் சிறப்பு தகவல்கள்...!

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் அனைத்து 400சிசி கொண்ட மோட்டார்சைக்கிள்களும் பஜாஜ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த நிறுவனம் சில குறிப்பிட்ட மாடல்களை மட்டுமே இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது.

புதிய மாடல் பைக்கை இந்தியாவில் வைத்து சோதனை செய்யும் கேடிஎம்: பைக்கின் புகைப்படம் மற்றும் சிறப்பு தகவல்கள்...!

இந்த நிலையில் தான், கேடிஎம் நிறுவனம் தனது புத்தம் புதிய மாடலான ஆர்சி 125 பைக்கை இந்தியாவில் வைத்து சோதனையோட்டம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த புகைப்படங்களை ஜிக்வீல்ஸ்.காம் இணையதளம் வெளியிட்டுள்ளது.

புதிய மாடல் பைக்கை இந்தியாவில் வைத்து சோதனை செய்யும் கேடிஎம்: பைக்கின் புகைப்படம் மற்றும் சிறப்பு தகவல்கள்...!

கேடிஎம் நிறுவனம் அதன் ட்யூக் வரிசையில் விலை குறைவான மாடலான 125சிசி கொண்ட ட்யூக்125 மோட்டார்சைக்கிளை கடந்த ஆண்டு அறிமுகம் செய்திருந்தது. இந்த மோட்டார்சைக்கிளின் சக்தியானது சற்று குறைவாக இருந்தாலும், கேடிஎம் பைக்கிற்கே உரித்தான ஸ்டைலை பெற்றிருந்ததால், ட்யுக்125 அமோகமான விற்பனையைப் பெற்று வருகிறது.

புதிய மாடல் பைக்கை இந்தியாவில் வைத்து சோதனை செய்யும் கேடிஎம்: பைக்கின் புகைப்படம் மற்றும் சிறப்பு தகவல்கள்...!

இந்நிலையில், ஆர்சி 125 என்ற மேலும் ஒரு புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் விதமாக கேடிஎம் நிறுவனம் பரிசோதனைச் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. இதுகுறித்த ஸ்பை படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த மாடல் மோட்டார்சைக்கிள் ஏற்கனவே ஐரோப்பா உள்ளிட்ட சில நாடுகளில் விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய மாடல் பைக்கை இந்தியாவில் வைத்து சோதனை செய்யும் கேடிஎம்: பைக்கின் புகைப்படம் மற்றும் சிறப்பு தகவல்கள்...!

தற்போது இந்தியச் சாலையில் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் கேடிஎம் ஆர்சி125 மோட்டார்சைக்கிளின் தோற்றம் சில வித்தியாசங்களைப் பெற்றுள்ளது. அதன்படி, இந்த மோட்டார்சைக்கிளின் சைலன்சர் அமைப்பு இதற்கு முன்னதாக வெளியான மாடல்களைக் காட்டிலும் சற்று மாறுதல் கொண்டு காணப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஆர்சி 200 மற்றும் 390 மாடல்களின் சிறியரக மாடலாக காட்சியளிக்கிறது.

புதிய மாடல் பைக்கை இந்தியாவில் வைத்து சோதனை செய்யும் கேடிஎம்: பைக்கின் புகைப்படம் மற்றும் சிறப்பு தகவல்கள்...!

இதேபோன்று, இந்த மோட்டார்சைக்கிளில், பாகங்களை ஹைலைட் செய்து காட்டும் வகையில் சில இடங்களில், வண்ணம் மாற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இது வாகனத்தின் தோற்றத்தை மேலும் ரம்மியமாகக் காட்சிப்படுத்துகிறது. இதேபோன்று, இந்த மோட்டார்சைக்கிளின் ஃபேரிங் அமைப்பிற்கு வெள்ளை நிறத்தாலும், பெட்ரோல் டேங்கிற்கு ஆரஞ்சு நிறத்தாலும் அழகு சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய மாடல் பைக்கை இந்தியாவில் வைத்து சோதனை செய்யும் கேடிஎம்: பைக்கின் புகைப்படம் மற்றும் சிறப்பு தகவல்கள்...!

இதன் பின்பக்க தோற்றம் மற்றும் வண்ணக் கலவையானது யூரோ ஸ்பெக் மாடலில் இருக்கிறது. மேலும், இதன் ஃபிரேம்களுக்கு கருப்பு நிறம் தீட்டப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் 124.7சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 14.5பிஎஸ் பவரை 9,250 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். இதேபோன்று, 12என்எம் டார்க்கை 8,000 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். மேலும், இந்த மோட்டார்சைக்கிளின் எஞ்ஜின் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஸனில் இயங்கும். இதே எஞ்ஜின் தன் கேடிஎம் ட்யூக்125 மாடலில் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய மாடல் பைக்கை இந்தியாவில் வைத்து சோதனை செய்யும் கேடிஎம்: பைக்கின் புகைப்படம் மற்றும் சிறப்பு தகவல்கள்...!

இதைத்தொடர்ந்து, மோட்டார்சைக்கிளின் முன்பக்கத்தில் இன்வெர்டட் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோசாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், முன்பக்க வீலில் 300எம்எம் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்தில் 230எம்எம் டிஸ்க் பிரேக்கும், சிங்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியுடன் பொறுத்தப்பட்டுள்ளது. கேடிஎம்-இன் இந்த புத்தும் புதிய ஆர்சி125 மாடல் மோட்டார்சைக்கிள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் அறிமுகத்திற்கு பின்னரே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, April 5, 2019, 11:14 [IST]
English summary
KTM RC 125 Spied Testing In India. Read In Tamil.
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+