விற்பனையில் அசூர வளர்ச்சி பெற்று வரும் கேடிஎம்... 125, 200 பைக்குகள் தொடர்ந்து முன்னிலை..

கேடிஎம் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை காட்டிலும் இந்த வருட அக்டோபர் மாதத்தில் கூடுதலாக விற்பனையை பதிவு செய்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம், கடந்த மாதத்தில் தொடர்ச்சியாக வந்த ஆயுதப்பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிக்கைகள் தான்.

விற்பனையில் அசூர வளர்ச்சி பெற்று வரும் கேடிஎம்... 125, 200 பைக்குகள் தொடர்ந்து முன்னிலை..

ஏனெனில் இந்த பண்டிக்கை நாட்களுக்கு கேடிஎம் நிறுவனம் சில சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்திருந்தது. இதனால் இந்நிறுவனத்தின் விற்பனை 4,413 பைக்குகள் விற்பனையான 2018 அக்டோபர் மாதத்தை விட சுமார் 46.86 சதவீதம் அதிகரித்து 2019 அக்டோபரில் 6,481 ஆக உயர்ந்துள்ளது.

விற்பனையில் அசூர வளர்ச்சி பெற்று வரும் கேடிஎம்... 125, 200 பைக்குகள் தொடர்ந்து முன்னிலை..

மேலும் இந்த 6,481 என்கிற எண்ணிக்கை 2019 செப்டம்பர் மாதத்தை விட 11.65 சதவீதம் அதிகமாகும். கேடிஎம் நிறுவனத்தின் இந்த வளர்ச்சியில் 125 மற்றும் 200 (ட்யூக் + ஆர்சி) பைக்குகளின் பங்கு மிக அதிகமாக உள்ளது. எந்த அளவிற்கு என்றால், கடந்த மாத விற்பனை பைக்குகளின் எண்ணிக்கையான 6,481ல் 5,436 பைக்குகள் இந்த இரு மாடல்கள் தான்.

விற்பனையில் அசூர வளர்ச்சி பெற்று வரும் கேடிஎம்... 125, 200 பைக்குகள் தொடர்ந்து முன்னிலை..

கேடிஎம் நிறுவனத்தின் மிக சிறந்த விற்பனை மாடலாக விளங்கும் இந்த இரு பைக்குகளில் ட்யூக் 125, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகமானது. அதனை தொடர்ந்து இந்த வருடத்தின் துவக்கத்தில் ஆர்சி 125 பைக் வெளியானது.இவை இந்த வருட செப்டம்பர் மாதத்தில் 2,648 பைக்குகளும் இதைவிட 13.44 சதவீதம் கூடுதலாக கடந்த அக்டோபர் மாதத்தில் 3,004 பைக்குகளும் விற்பனையாகியுள்ளன.

விற்பனையில் அசூர வளர்ச்சி பெற்று வரும் கேடிஎம்... 125, 200 பைக்குகள் தொடர்ந்து முன்னிலை..

மற்றொரு முன்னணி மாடலான ட்யூக் 200 தான் கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் பைக்காகும். அறிமுகமான மாதத்தில் இருந்து தொடர்ந்து கணிசமான விற்பனை எண்ணிக்கைகளை ட்யூக் 200 பைக் பெற்றுவந்தாலும் 2018 அக்டோபர் மாதத்தை விட 24.94 சதவீதம் குறைவாக 2,432 பைக்குகளின் விற்பனையை கடந்த மாதத்தில் பதிவு செய்துள்ளது. இருப்பினும் கடந்த செப்டம்பர் மாத விற்பனையை விட இந்த எண்ணிக்கை 337 யூனிட்கள் அதிகமாகும்.

விற்பனையில் அசூர வளர்ச்சி பெற்று வரும் கேடிஎம்... 125, 200 பைக்குகள் தொடர்ந்து முன்னிலை..

இந்த இரு மாடல்களுக்கு அடுத்த உள்ள கேடிஎம் 250 மாடல் கடந்த அக்டோபர் மாதத்தில் 666 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. இந்த எண்ணிக்கை 620 பைக்குகள் விற்பனையான 2018 அக்டோபர் மாதத்தை விட 7.42 சதவீதமும், 623 பைக்குகள் விற்பனையான கடந்த செப்டம்பர் மாதத்தை விட 6.90 சதவீதமும் அதிகமாகும்.

விற்பனையில் அசூர வளர்ச்சி பெற்று வரும் கேடிஎம்... 125, 200 பைக்குகள் தொடர்ந்து முன்னிலை..

இதற்கு அடுத்த இடத்தில் கேடிஎம் 390 பைக் வெறும் 361 யூனிட்கள் விற்பனையுடன் உள்ளது. இந்த எண்ணிக்கை 553 பைக்குகள் விற்பனையான 2018 அக்டோபர் மாதத்தை விட சுமார் 34.72 சதவீதம் குறைவாகும். அதேபோல் 398 யூனிட்கள் விற்பனையான 2019 செப்டம்பர் மாதத்தை விட 9.30 சதவீதம் இந்த எண்ணிக்கை குறைவு.

விற்பனையில் அசூர வளர்ச்சி பெற்று வரும் கேடிஎம்... 125, 200 பைக்குகள் தொடர்ந்து முன்னிலை..

கேடிஎம் நிறுவனம் 390 மாடலின் அட்வென்ஜர் பைக்கை சமீபத்தில் ஐக்மா கண்காட்சியில் அறிமுகப்படுத்தியிருந்தது. ரூ.3.2 லட்சத்தில் இருந்து ரூ.3.5 லட்சம் வரையில் இந்தியாவில் விற்பனையாகவுள்ள இந்த பைக்கின் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன. இதனால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டெலிவரியை துவங்கவுள்ள இந்த 390 அட்வென்ஜர் பைக் குறித்த விரிவான தகவல்களை அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

விற்பனையில் அசூர வளர்ச்சி பெற்று வரும் கேடிஎம்... 125, 200 பைக்குகள் தொடர்ந்து முன்னிலை..

கேடிஎம் நிறுவனத்தின் தனித்துவமான மாடலாக விளங்கும் கேடிஎம் ட்யூக் 790 பைக் அறிமுகமான முதல் மாதத்திலேயே (2019 செப்டம்பர்) 41 யூனிட்கள் விற்பனையாகி மற்ற முன்னணி நிறுவனங்கள் அனைத்தையும் அதிர்ச்சியாக்கி இருந்தது. இந்த பைக்கின் கடந்த அக்டோபர் மாத விற்பனை எண்ணிக்கை 18 ஆகும்.

விற்பனையில் அசூர வளர்ச்சி பெற்று வரும் கேடிஎம்... 125, 200 பைக்குகள் தொடர்ந்து முன்னிலை..

799சிசி, லிக்யூடு கூல்டு, இணையான இரட்டை என்ஜின் அமைப்புடன் வெளியாகி வரும் இந்த பைக் 104 பிஎச்பி பவரையும் 87 என்எம் டார்க் திறனையும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வெளிப்படுத்தும் திறன் உடையது. இதற்கு போட்டி மாடல்களாக இந்திய சந்தையில் கவாஸாகி இசட்900, டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் எஸ் மற்றும் டுகாட்டி மான்ஸ்டர் 797 போன்ற பைக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, November 22, 2019, 13:09 [IST]
English summary
KTM sales report in October 2019
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+