கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் அறிமுகமாகிறது!

கேடிஎம் 790 ட்யூக் பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது.

கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் அறிமுகமாகிறது!

கேடிஎம் ட்யூக் வரிசை மாடல்கள் இந்திய இளைஞர்களை வசியம் செய்துவிட்டன. ட்யூக் வரிசையில் 125சிசி, 200சிசி, 250சிசி மற்றும் 390சிசி ஆகிய 4 மாடல்கள் விற்பனையில் உள்ளன. இதில், அண்மையில் வந்த 125சிசி ட்யூக் மாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. விலை குறைவான ட்யூக் என்பதே அதன் வரவேற்புக்கு காரணம்.

கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் அறிமுகமாகிறது!

இந்த நிலையில், ட்யூக் வரிசையில் சக்திவாய்ந்த 790சிசி மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும், அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை இல்லை. தற்போது 790 ட்யூக் பைக்கின் இந்திய வருகை அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது.

கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் அறிமுகமாகிறது!

ஆம். இந்தியாவில் புதிய 790 ட்யூக் வருகையை முன்னறிவிக்கும் விதமாக அதன் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. எனவே, மிக விரைவில் இந்த பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. இது கேடிஎம் ட்யூக் பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தரும் விஷயமாக மாறி இருக்கிறது.

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், எல்இடி இண்டிகேட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கில் 14 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க், 17 அங்குல ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. 169 கிலோ எடை கொண்டது.

கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் அறிமுகமாகிறது!

கேடிஎம் 790 ட்யூக் பைக்கில் பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய 799சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎஸ் பவரையும், 87 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் அறிமுகமாகிறது!

இந்த பைக்கில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. குயிக் ஷிஃப்ட் வசதியும் உள்ளது. டிரைவிங் மோடுகள், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் பின்புற பயணிக்கான ஃபுட்ரெஸ்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் அறிமுகமாகிறது!

கேடிஎம் 790 ட்யூக் பைக்கில் க்ரோமியம் மற்றும் மாலிபிடினம் கலப்பு உலோகத்தாலான ட்யூபிலர் ஃப்ரேம் உள்ளது. முன்புறத்தில் 43 மிமி WP அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன.

கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் அறிமுகமாகிறது!

அதேபோன்று, முன்சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. இரண்டு சக்கரங்களுக்குமான டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் அறிமுகமாகிறது!

புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் ரூ.7.50 லட்சம் முதல் ரூ.8 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. கவாஸாகி இசட்900, ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் எஸ் மற்றும் டுகாட்டி மான்ஸ்ட்டர் 797 ஆகிய பைக் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 24, 2019, 12:02 [IST]
English summary
KTM teases much-anticipated 790 Duke in India.
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+