இந்திய பைக் வீக் திருவிழாவில் பங்கேற்கும் கேடிஎம்... 2 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்துகிறது

கோவாவில் நடைபெற இருக்கும் இந்திய பைக் வீக் திருவிழாவில் பங்கேற்க இருப்பதாக கேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்திய பைக் வீக் திருவிழாவில் பங்கேற்கும் கேடிஎம்... 2 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்துகிறது

இந்தியாவில் உள்ள பைக் உரிமையாளர்கள் மற்றும் பைக் பிரியர்களை ஒன்றிணைத்து கொண்டாடும் நிகழ்வாக இந்திய பைக் வீக் திருவிழா கடந்த சில ஆண்டுகளாக கோவாவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இந்திய பைக் வீக் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்திய பைக் வீக் திருவிழாவில் பங்கேற்கும் கேடிஎம்... 2 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்துகிறது

ஆண்டுக்கு ஆண்டு இந்த பைக் திருவிழாவில் கலந்து கொள்ளும் உரிமையாளர்கள் மற்றும் பைக் பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான இந்திய பைக் வீக் திருவிழா அடுத்த மாதம் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கோவாவில் நடக்கிறது.

இந்திய பைக் வீக் திருவிழாவில் பங்கேற்கும் கேடிஎம்... 2 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்துகிறது

இந்த திருவிழாவில் பல முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த நிலையில், கேடிஎம் நிறுவனமும் இந்த திருவிழாவில் பங்கேற்க இருப்பதாக தெரிவித்துள்ளது. பிற நிறுவனங்களைவிட இந்திய பைக் வீக் திருவிழாவில் கேடிஎம் பங்கேற்க இருப்பதாக கூறியிருப்பது பைக் பிரியர்களின் ஆவலை அதிகப்படுத்தி உள்ளது.

இந்திய பைக் வீக் திருவிழாவில் பங்கேற்கும் கேடிஎம்... 2 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்துகிறது

காரணம், கேடிஎம் 250 அட்வென்ச்சர் மற்றும் 390 அட்வென்ச்சர் பைக் மாடல்களை இந்த திருவிழாவில் இந்தியர்களின் பொது பார்வைக்கு கொண்டு வருவதற்கு கேடிஎம் திட்டமிட்டுள்ளது. இதில், புத்தம் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் இத்தாலியில் நடந்த ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய பைக் வீக் திருவிழாவில் பங்கேற்கும் கேடிஎம்... 2 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்துகிறது

மற்றொரு மாடலான கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் ஐரோப்பிய சந்தையில் விற்பனை செய்யப்படாது என்பதால், கேடிஎம் நிறுவனம் தனது இந்தோனேஷிய பிரிவின் இணையதளத்தில் வெளியிட்டது. இந்த நிலையில், இரண்டு பைக்குகளையும் ஒரே இடத்தில் பார்ப்பதற்கு இந்திய பைக் பிரியர்களும், கேடிஎம் பைக் வாடிக்கையாளர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்திய பைக் வீக் திருவிழாவில் பங்கேற்கும் கேடிஎம்... 2 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்துகிறது

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கில் எல்இடி ஹெட்லைட், டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆனால், 250 அட்வென்ச்சர் மாடலில் ஹாலஜன் பல்புகளுடன் கூடிய ஹெட்லைட் உள்ளது. அதேபோன்று, டிராக்ஷன் கன்ட்ரோல் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்திய பைக் வீக் திருவிழாவில் பங்கேற்கும் கேடிஎம்... 2 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்துகிறது

கேடிஎம் 390 ட்யூக் பைக்கில் இருக்கும் அதே 373.2 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் 390 அட்வென்ச்சர் மாடலில் இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 44 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

இந்திய பைக் வீக் திருவிழாவில் பங்கேற்கும் கேடிஎம்... 2 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்துகிறது

கேடிஎம் 250 ட்யூக் பைக்கில் இருக்கும் அதே எஞ்சின்தான் 250 அட்வென்ச்சர் மாடலில் பயன்படுத்தப்பட இருக்கிறது. எனவே, பட்ஜெட் அடிப்படையில் இரண்டு அட்வென்ச்சர் வகை பைக் மாடல்களை இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்க கேடிஎம் திட்டமிட்டுள்ளது. கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் ரூ.3 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், 250 அட்வென்ச்சர் பைக் ரூ.2.20 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 9, 2019, 18:01 [IST]
English summary
Austrian motorcycle manufacture KTM has confirmed that it will be a participant at the India Bike Week scheduled to happen at Goa later this year. The company said via a statement that they would make 'key announcements' at the event.
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+