வாம்மா மின்னலு... 241 கிமீ வேகத்தில் செல்லும் புதிய எலெக்ட்ரிக் சூப்பர் பைக்கை களமிறக்கியது லைட்னிங்

பல ஆண்டுகள் கடினமான உழைப்பு மற்றும் முயற்சியில் LS-218 என்ற எலெக்ட்ரிக் சூப்பர் பைக் மாடலை லைட்னிங் அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, தற்போது இரண்டாவது சூப்பர் பைக் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. லை

அமெரிக்காவை சேர்ந்த லைட்னிங் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் சூப்பர் பைக் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

லைட்னிங் ஸ்ட்ரைக் எலெக்ட்ரிக் சூப்பர் பைக் அறிமுகம்!

பல ஆண்டுகள் கடினமான உழைப்பு மற்றும் முயற்சியில் LS-218 என்ற எலெக்ட்ரிக் சூப்பர் பைக் மாடலை லைட்னிங் அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, தற்போது இரண்டாவது சூப்பர் பைக் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. லைட்னிங் ஸ்ட்ரைக் என்ற பெயரில் வந்துள்ள இந்த பைக் மணிக்கு 241 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

லைட்னிங் ஸ்ட்ரைக் எலெக்ட்ரிக் சூப்பர் பைக் அறிமுகம்!

இந்த புதிய எலெக்ட்ரிக் சூப்பர் பைக் பேட்டரி திறன் அடிப்படையில் மூன்று விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும். ஆனால், மூன்றிலும் ஒரே மின் மோட்டார்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்டான்டர்டு வேரியண்ட்டில் 10 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மின் மோட்டார் 90 எச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

மேலும், ஸ்டான்டர்டு வேரியண்ட்டானது மணிக்கு 217 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்ததுடன், 113 கிமீ தூரம் பயணிக்கும். நெடுஞ்சாலையில் செல்லும்போது இதன் ரேஞ்ச் 161 கிமீ தூரம் வரை இருக்கும். இந்த மாடல் 206 கிலோ எடை கொண்டது.

லைட்னிங் ஸ்ட்ரைக் எலெக்ட்ரிக் சூப்பர் பைக் அறிமுகம்!

இரண்டாவது மாடலில் 15 kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் நகர்ப்புறத்தில் 168 கிமீ வரையிலும், நெடுஞ்சாலையி் 240 கிமீ தூரம் வரையிலும் பயணிக்கும். மணிக்கு 217 கிமீ வேகம் வரை செல்லும் என்பதுடன் இந்த வேரியண்ட்டானது 211 கிலோ எடை கொண்டது.

லைட்னிங் ஸ்ட்ரைக் எலெக்ட்ரிக் சூப்பர் பைக் அறிமுகம்!

மூன்றாவது வேரியண்ட்டிற்கு ஸ்ட்ரைக் கார்பன் எடிசன் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட்டில் 20 kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் மின் மோட்டார் 120 எச்பி பவரை அளிக்கும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் நகர்ப்புற பயன்பாட்டின்போது 241 கிமீ தூரமும், நெடுஞ்சாலையில் 322 கிமீ தூரம் வரையிலும் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

இந்த வேரியண்ட்டின் டாப் ஸ்பீடு மணிக்கு 241 கிமீ என்பது வியக்க வைக்கும் விஷயம்.

லைட்னிங் ஸ்ட்ரைக் எலெக்ட்ரிக் சூப்பர் பைக் அறிமுகம்!

விலை உயர்ந்த கார்பன் எடிசன் வேரியண்ட்டில் ஏராளமான சிறப்பு ஆக்சஸெரீகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஓலின்ஸ் சஸ்பென்ஷன் அமைப்பு, பிரெம்போ பிரேக்கிங் சிஸ்டம், ஜிபிஎஸ் அடிப்படையிலான தகவல் பதிவு வசதி, டிஜிஸ்ட்டர் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை உள்ளன.

லைட்னிங் ஸ்ட்ரைக் எலெக்ட்ரிக் சூப்பர் பைக் அறிமுகம்!

இந்த பைக்கின் பேட்டரியை சாதாரண 110v சார்ஜர் மூலமாக சார்ஜ் ஏற்றுவதற்கு 6 முதல் 8 மணிநேரம் பிடிக்கும். இரண்டாவது வகை சார்ஜர் மூலமாக 3 மணிநேரத்தில் சார்ஜ் ஏற்றலாம். குயிக் சார்ஜர் மூலமாக வெறும் 20 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.

லைட்னிங் ஸ்டான்டர்டு வேரியண்ட்டிற்கு 12,998 டாலர்கள் என்ற விலையும், மிட்ரேஞ்ச் வேரியண்ட்டிற்கு 16,998 டாலர்கள் விலையும், விலை உயர்ந்த கார்பன் எடிசன் வேரியண்ட்டிற்கு 19,998 விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.8.98 லட்சம் முதல் ரூ.13.83 லட்சம் வரையிலான விலை கொண்டதாக இருக்கிறது. குயிக் சார்ஜருக்கு 1,500 டாலர்கள் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

லைட்னிங் ஸ்ட்ரைக் எலெக்ட்ரிக் சூப்பர் பைக் அறிமுகம்!

லைட்னிங் ஸ்ட்ரைக் எலெக்ட்ரிக் சூப்பர் பைக்கிற்கான பெரும்பான்மையான உதிரிபாகங்கள் பாகங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது. கார்பன் ஃபைபர் பாடி பேனல்கள் மட்டும் அமெரிக்காவில் தயாரிக்கப்படுகிறது.

லைட்னிங் ஸ்ட்ரைக் எலெக்ட்ரிக் சூப்பர் பைக் தற்போது அமெரிக்காவில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். ஆனால், எதிர்காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்வதற்கான திட்டத்தையும் லைட்னிங் நிறுவனம் வைத்துள்ளது. உலகின் வேகமாக வளர்ந்து வரும் வாகன சந்தையாக விளங்கும் சீனாவிலும் அடுத்த சில ஆண்டுகளில் லைட்னிங் நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனைக்கு வந்துவிடும் என்று நம்பலாம்.

Most Read Articles
English summary
Lightning Motorcycle strike again. Literally! After spending years developing and showing off the ridiculously fast LS-218, Lightning Motorcycle has unveiled its all new Lightning Strike—the world's first mass-market, premium electric motorcycle.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X