சக்தி வாய்ந்த ஸ்போர்ட்ஸ் பைக்கின் விலையை அதிரடியாக குறைத்த மஹிந்திரா: எவ்வளவு குறைத்தது தெரியுமா...?
மஹிந்திரா நிறுவனம் தனது ஆரம்பநிலை ஸ்போர்ட்ஸ் டூரர் மாடல் பைக்கின் விலையை பாதிக்கு பாதி குறைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா, அனைத்து ரக வாகனங்களையும் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோஜோ யுடி300 என்ற ஆரம்ப நிலை ஸ்போர்ட் மாடல் மோட்டார்சைக்கிளை குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது.
அவ்வாறு, மஹிந்திார நிறுவனம் இந்த ஆரம்பநிலை ஸ்போர்ட் டூரர் மாடல் பைக்கை ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 520 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது. இது மற்ற ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்கைக் காட்டிலும் குறைவு.

இந்நிலையில், இந்த மோட்டார்சைக்கிளின் விலையை பாதிக்கு பாதியாக குறைத்து அறிவித்துள்ளது. அதன்படி, மஹிந்திரா நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் வரை குறைத்து விற்கப்பட உள்ளதாக மஹிந்திரா டீலர்கள் அறிவித்துள்ளனர். மஹிந்திராவின் ஊழியர்கள் அல்லாதவர்களுக்கு எக்ஸ்சேஞ் முறையில் 60 ஆயிரம் வரை குறைத்து விற்பனைச் செய்யவிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அதிரடி விலை குறைப்பால் அந்த நிறுவனத்தில் பணி புரியும் அடிமட்ட ஊழியர்களும் இந்த பைக்கை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த சலுகையானது மோஜோ யுடி300 மாடலின் 2018ம் ஆண்டு மோட்டார்சைக்கிள்களுக்கு மட்டும் வழங்க இருப்பாதக மஹிந்திரா டீலர்கள் கூறியுள்ளனர். தேக்கமடைந்திருக்கும் மோட்டார்சைக்கிள்களை விற்பனைச் செய்யும் விதமாக வெளியடப்பட்டுள்ள இந்த அறிவப்பு, மீண்டும் இந்த மாடல் பைக்கை மஹிந்திரா தயாரிக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் கிளாசிக் லெஜண்ட்ஸ் என்ற பிராண்ட் மூலம் ஜாவா பைக்குகளை விற்பனைச் செய்து வருவதால், தற்போது அதன்மீது முழு கவனத்தையும் மஹிந்திரா செலுத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கேற்ப, ஜாவா பைக்குகள் வாகன ஓட்டிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால், ஜாவா பைக்கின் தயாரிப்பில் மஹிந்திரா முனைப்புடன் செயல்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், விற்பனையில் குறைந்து காணப்படும் மோஜோ மாடல் மோட்டார்சைக்கிளை, அறை விலையில் விற்பனைச் செய்யும் நோக்கில் மஹிந்திரா நிறுவனம் களமிறங்கியுள்ளது. இந்த மோஜோ பைக்கானது, இரண்டு வேரியண்ட்களில் சந்தையில் கிடைக்கின்றது. அந்த வகையில், மோஜோ யுடி300 மற்றும் எக்ஸ்டி300 என்ற மாடலில் கிடைக்கிறது. ஆனால், இந்த சலுகையானது யுடி300 மாடலுக்கு மட்டுமே பொருந்தும் டீலர்கள் தெரிவித்துள்ளனர்.

மோஜோ யுடி300 பைக்கில் கார்புரேட்டர் வெர்ஷன் 295சிசி கொண்ட நான்கு ஸ்டிரோக் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 22.5 பிஎச்பி பவரை 25.2 என்எம் டார்க்கில் வெளிப்படுத்தும். மேலும், இந்த எஞ்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் லிக்யூடு மூலம் குளிர்விக்கப்படுகிறது.

மோஜோ யுடி300 மாடலில் சாதாரணமான டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளுடன் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த மாடலில் எல்இடி பகல்நேர விளக்குகள் இல்லை. இரண்டு சைலென்சர் அமைப்புக்கு பதிலாக ஒற்றை சைலென்சர் அமைப்பே உள்ளது. மோஜோ யுடி300 மாடலானது நீலம் மற்றும் சிவப்பு என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. பின்புற இருக்கையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால், பின்னால் அமர்பவருக்கு சற்று சவுகரியமான இடவசதி இருக்கும்.


Click it and Unblock the Notifications








