போலீஸுக்கே இந்த கதியா... உதவி காவல் ஆய்வாளர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க இதுதான் காரணம்...
உதவி காவல் ஆய்வாளர்மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணத்தை மிக விரிவாக இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் அண்மைக் காலங்களாக விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்து வண்ணம் உள்ளது. இது நாளுக்கு நாள், ஓர் புதிய உச்சத்தைத் தொட்டு வருகின்றது.
அதிலும், மிக முக்கியமாக ஹெல்மெட் அணியாமல் செல்வதனால் ஏற்படும் உயிரிழப்புகளே மிக அதிகமாக இருக்கின்றன.

இந்தியாவின் சாலைகள் தினந்தோறும் பல விதமான விபத்துகளைச் சந்தித்தாலும், மாற்றமே இல்லமால் நாள்தோறும் சந்திக்கின்ற வகையில், இரு சக்கர வாகனங்களால் ஏற்படும் விபத்துகள் இருக்கின்றன.
அதேசமயம், இந்த விபத்தில் பெரும்பாலானோர் இறப்பதற்கு ஹெல்மெட் அணியமால், இருசக்கர வாகனங்களை இயக்குவதே முக்கிய காரணமாக இருக்கின்றது.

இதன்காரணமாக, இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற உத்தரவினை அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது. அதுமட்டுமின்றி, ஓட்டுநருடன் சேர்ந்து பைக்கில் பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அந்த உத்தரவில் அது கூறியிருந்தது.

கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதி, வெறும் போக்குவரத்து விதிமுறையாக மட்டுமின்றி, வாகன ஓட்டிகளின் உயிரையைக் காக்கும் விஷயமாகவும் இருக்கின்றது. இருப்பினும் பலர் இதனைக் கடைபிடிக்காமல், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், போலீஸாரிடம் சிக்கும்போது, ஏதாவது காரணத்தைக் கூறி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
அதுமட்டுமின்றி, போலீஸார்களில் பலர் ஹெல்மெட் அணியாமல் பைக்குகளை இயக்குகின்றனர். அவர்களை நீங்கள் என்ன செய்தீர்கள் என்ற கேள்வியை முன் வைத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத போலீஸார் மீதும், ஹெல்மெட் அணியாமல் செல்லும் போலீஸார் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

இதனடிப்படையில், தமிழக போலீஸார் மாநிலம் முழுவதும் அதிரடி வேட்டையை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, தமிழகத்தின் புதிய டிஜிபி-யாக பணியேற்றுள்ள ஜே.கே. திரிபாதி அண்மையில் ஓர் உத்தரவை பிறப்பித்திருந்தார்.

அதில், "சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டுபவரையும், அவர் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று, போலீஸாரும் ஹெல்மெட் அணிந்தே பைக்குகளை இயக்க வேண்டும். மீறினால், அவர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்திருந்தார்.

இந்த உத்தரவு அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட கண்கானிப்பு ஆணையர் அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இவ்வாறு, ஹெல்மெட் விவகாரத்தில் தமிழகமே சூடுபிடித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், சென்னை மாம்பலம் காவல்நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் மதன், ஹெல்மெட் அணியாமல் பைக்கை இயக்கிச் சென்ற குற்றத்திற்காக அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஏற்கனவே ஹெல்மெட் அணியாமல் சென்ற குற்றத்திற்காக அபராதம் செலுத்தியதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், அவர் மீண்டும் ஹெல்மெட் அணியாமல் பைக்கை இயக்குவது போன்ற புகைப்படம் காவலர்கள் செயலில் வளம் வந்துள்ளது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் மதன் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, அவரை பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காவல்துறையின் இந்த நடவடிக்கையானது, போலீஸார் மத்தியில் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஹெல்மெட் விவகாரத்தில் தமிழக அரசும், சட்டத்துறையும் காட்டிவரும் தீவிரத்தைக் கண்டு வாகன ஓட்டிகள் தற்போது அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் என்ற கூறலாம்.

முன்னதாக, இதேபோன்று முறைகேட்டில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு உச்சபட்ச அபராதம் விதிக்கும் வகையிலான, திருத்தம் செய்யப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு அண்மையில் நடைமுறைக்குக் கொண்டு வந்தது.
அதில், முன்னதாக விதிக்கப்பட்ட அபராதத் தொகையைக் காட்டிலும், பத்து மடங்கு உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின்மூலம், அண்மைக் காலங்களாக நாட்டில் அதிகரித்து வரும் வாகனங்கள் சார்ந்த முறைகேடுகள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்துடன், விதிமீறல்களினால் உருவாகும் விபத்துகள் மற்றும் பின்விளைவுகளைத் தவிர்க்கவும் இத்தகைய நடவடிக்கை தேவையென மத்திய அரசு விளக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








