எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய மைக்ரோமேக்ஸ் ராகுல் ஷர்மா!

எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி இருக்கிறார் மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர்களில் ஒருவரான ராகுல் ஷர்மா. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய மைக்ரோமேக்ஸ் ராகுல் ஷர்மா!

இந்தியாவின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் மைக்ரோமேக்ஸ் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் 5 இணை நிறுவனர்களில் ஒருவரான ராகுல் ஷர்மா எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி இருக்கிறார்.

எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய மைக்ரோமேக்ஸ் ராகுல் ஷர்மா!

ரிவோல்ட் இன்டெலிகார்ப் என்று இந்த புதிய மின்சார பைக் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் ரூ.400 முதல் ரூ.500 கோடி வரை ராகுல் ஷர்மா முதலீடு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய மைக்ரோமேக்ஸ் ராகுல் ஷர்மா!

இந்த நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடல் வரும் ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும், செயற்கை நுண்ணறிவு சாஃப்ட்வேருடன் இந்த பைக் வர இருப்பது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய மைக்ரோமேக்ஸ் ராகுல் ஷர்மா!

இந்த பைக்கின் திறன் வாய்ந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 156.8 கிமீ தூரம் வரை பயணிக்குமாம். மணிக்கு 85 கிமீ வேகம் செல்லும் என்று நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சிம் கார்டுடன் இணைய வசதி, நேவிகேஷன் வசதி, ஹேண்ட்ஸ் ஃப்ரீ மொபைல் போன் அழைப்புகளை மேற்கொள்வதற்கான வசதிகள் கொடுக்கப்பட இருக்கின்றன.

எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய மைக்ரோமேக்ஸ் ராகுல் ஷர்மா!

மேலும், முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. பைக்கின் ஃப்ரேமில் பேட்டரியும் இடம்பெற்றிருக்கும். இந்த பைக்கிற்கான முக்கிய பாகங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட இருக்கின்றன. குர்கானில் உள்ள தலைமையகத்தில் உள்ள தொழில்நுட்ப மையத்தில் வடிமைப்பு மற்றும் பொறியியல் பணிகள் நடக்கின்றன.

எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய மைக்ரோமேக்ஸ் ராகுல் ஷர்மா!

இதுகுறித்து ராகுல் ஷர்மா குறிப்பிடுகையில்," வாடிக்கையாளர்களுக்கு சரியான விலையில் சிறந்த எலெக்ட்ரிக் பைக் மாடல்களை வழங்குவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். எங்களது மின்சார பைக்குகள் பெட்ரோல் பைக்குகளுக்கு இணையான செயல்திறனை வழங்கும் நோக்கோடு உருவாக்குகிறோம். இதில் எந்த சமரசமும் செய்து கொள்ள விரும்பவில்லை," என்று கூறியுள்ளார்.

எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய மைக்ரோமேக்ஸ் ராகுல் ஷர்மா!

ரிவோல்ட் இன்டெலிகார்ப் நிறுவனம் குர்கானை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. ஹரியானா மாநிலம், மானேசரில் 1 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்டு இருக்கும் ஆலையில் ரெவோல்ட் எலெக்ட்ரிக் பைக்குகள் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

Most Read Articles
English summary
Micromax co-founder Rahul Sharma has announced his foray into smart mobility and his venture called Revolt intellicorp.
Story first published: Thursday, April 4, 2019, 17:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X