உடற்பயிற்சியாளருக்கு விலையுயர்ந்த பைக்கை பரிசாக வழங்கிய பிரபல நடிகர்... யார் என தெரியுமா?
பிரபல நடிகர் தனது உடற்பயிற்சியாளருக்கு யமஹா நிறுவனத்தின் விலையுயர்ந்த பைக்குகளில் ஒன்றான, ஆர்15 வி3 மாடல் பைக்கை ஆச்சரியப் பரிசாக வழங்கியுள்ளார். அவர் யார்... எதற்காக பைக்கை வழங்கியுள்ளார் என்பதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

வாகனம் என்பது பல இளைஞர்களின் வாழ்க்கையில் பெரும் கனவாக மாறியிருக்கின்றது. அதிலும், ஒரு சில குறிப்பிட்ட வாகனங்களை வாங்குவதென்பது, பலருக்கு லட்சியக் கனவாகவே இருக்கின்றது. அத்தகைய வாகனத்தை, தங்களுடைய குடும்பத்தினரோ, நண்பரோ அல்லது நம்முடையா நலம் விரும்பிகள் யாரேனும் பரிசாக கொடுக்கும்போது ஒப்பற்ற மகிழ்ச்சி தோன்றும்.

அத்தகைய சிறப்பான சம்பவம் குறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் காணவிருக்கின்றோம்.
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக இருப்பவர் உன்னி முகுந்தன். மலையாள திரைப்பட படங்களில் நடித்து வருகின்றார். இவர், தனக்கு உடற்பயிற்சியளித்த ஜிம் மாஸ்டருக்கு யமஹா ஆர்15 வி3 மாடல் பைக்கை பரிசாக வழங்கியுள்ளார்.

இதுகுறித்த புகைப்படத்தை அவர் அண்மையில் வெளியிட்டிருந்தார். அது தற்போது அவரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
உன்னி முகந்தன் நடிப்பில் மாமங்கம் என்ற திரைப்படம் வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்திற்காக, அவரது உடல்வாகை தேத்தும் விதமாக பயிற்சியளத்தவர்தான் ஜிம் மாஸ்டர் ஜான்சன். இவர் சிறந்த முறையில், உன்னி முகந்தனுக்கு பயிற்சி அளித்ததன் காரணமாக, அவருக்கு பரிசாக ஆர்15 வி3 பைக்கை பரிசாக வழங்கியுள்ளார் உகுந்தன்.

இதுகுறித்த வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், நடிகர் உன்னி, நேரடியாக டீலர் ஷோ-ரூமிற்கு சென்று பைக்கை டெலிவரி பெறுகின்றார். பின்னர், அங்கிருந்து புறப்பட்ட அவர், நேரடியாக ஜிம் மாஸ்டர் இருக்கும் இடத்திற்கேச் சென்று ஆச்சரியப் பரிசாக பைக்கை வழங்குகின்றார். இதில், மட்டற்ற மகிழ்ச்சியடைந்த ஜான்சன், நடிகர் உன்னி முகுந்தனை கட்டியனைக்கின்றார்.
இந்த தருணம் குறித்து உன்னி முகந்தன் அவரது பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதில், "உனக்கு மிகவும் பிடித்தமான இந்த பைக்கை பரிசளிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். இந்த பரிசு, நீ என்னுடன் செலவிட்ட நேரத்திற்கு இணையானதா என்பது எனக்கு தெரியவில்லை. ஏனென்றால், மாமங்கம் படத்தில் என்னுடன் ஓர் அங்கமாக இருந்து உழைத்தாய். உன்னுடைய சகோதரனைப் போன்று அக்கறை காட்டினாய்!!! ஓனம் வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.
உன்னி முகந்தன் பதிவிட்டதை வைத்து பார்க்கையில், இந்த பைக் ஜிம் மாஸ்டர் ஜான்சனுக்கு மிகவும் பிடித்தமான பைக் என்பது தெரியவருகின்றது. யமஹாவின் இந்த ஆர்15 வி3 பைக் இந்தியாவில் ரூ. 2 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகின்றது. இதில், 155சிசி திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 19 பிஎச்பி பவரையும், 15 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

இந்த எஞ்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்குகின்றது. இதில், ஸ்லிப்பர் க்ளட்ச் வசதி காணப்படுகின்றது. இத்துடன், விவிஏ மற்றும் ட்யூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி உள்ளிட்டவை இந்த பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன.

ஆர்வி15 வி3 பைக் எடைக் குறைந்த மாடலாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதீத வேகம் மற்றும் திறனை வெளிப்படுத்துவதற்காக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால், இந்த பைக் 139 கிலோவாக இருக்கின்றது.

அதேபோன்று, அண்மையில்தான் யமஹா நிறுவனம் ஆர்15 வி3 பைக்கில் புதிய நிறங்களை அறிமுகம் செய்தது. அதில், முதல் இடத்தில் ஸ்போர்ட் கருப்பு இருக்கின்றது. இது, சிவப்பு மற்றும் வெள்ளை நிற கிராஃபிக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, கூடுதல் கவர்ச்சியாக அது காட்சியளிக்கின்றது. அதற்கேற்ப, அதன் கிராஃபிக்குகள் ஹெட்லேம்ப் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

இதையடுத்து, க்ரே மற்றும் மஞ்சள் நிறம் இருக்கின்றது. இதில் க்ரே நிறம் பேஸ் வண்ணமாகவும், மஞ்சள் ஹைலைட் செய்யும் வகையிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விரு நிறங்களும் பைக்கிற்கு எடுப்பான தோற்றத்தை வழங்கும் வகையில், ப்யூவல் டேங்க், எஞ்ஜின் கேஸ் கவர், பக்கவாட்டு பகுதி மற்றும் ஹெட்லேம்ப் உள்ளிட்ட பகுதிகளில் கொடுக்கப்பட்டுள்ளனன.

தொடர்ந்து, கருப்பு வண்ணத்துடன் கூடிய நீல நிறத்திலும் யமஹா ஆர்15 வி3 மாடல் காட்சியளிக்கின்றது. இதனைத் தனித்துவமாக காட்டும் வகையில், ஆர் என்ற கிராஃபிக் பைக்கின் பக்கவாட்டு பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், பைக்கின் வீல்களுக்கு நீல நிறம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வண்ண மாற்றத்தைத் தவிர ஆர்15 வி3 பைக்கில் வேறெந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








