மிக மிக மலிவானது... புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்கின் விலை தெரிந்தால் சத்தியமா நம்ப மாட்டீர்கள்

ராயல் என்பீல்டு நிறுவனம் மிகவும் மலிவான விலையில் புத்தம் புதிய மோட்டார்சைக்கிள் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் விலை எவ்வளவு இருக்கும் என தெரிந்தால் நீங்கள் கண்டிப்பாக நம்ப மாட்டீர்கள்.

மிக மிக மலிவானது... புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்கின் விலை தெரிந்தால் சத்தியமா நம்ப மாட்டீர்கள்

உலகின் மிக பழமையான மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ராயல் என்பீல்டு. தற்போது தமிழக தலைநகர் சென்னையை தலைமையிடமாக கொண்டு ராயல் என்பீல்டு நிறுவனம் செயல்பட்டு கொண்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்கள் விற்பனையில் வெற்றி கொடி நாட்டி கொண்டுள்ளன.

மிக மிக மலிவானது... புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்கின் விலை தெரிந்தால் சத்தியமா நம்ப மாட்டீர்கள்

உலகெங்கும் பரவியிருக்கும் ராயல் என்பீல்டு ரசிகர்கள் வழங்கும் அமோக வரவேற்புதான் இதற்கு காரணம். ராயல் என்பீல்டு பைக்குகளின் சப்தத்திற்கு என்றே பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இளசுகள் முதல் பெருசுகள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் ராயல் என்பீல்டு பைக்குகளை விரும்புகின்றனர்.

மிக மிக மலிவானது... புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்கின் விலை தெரிந்தால் சத்தியமா நம்ப மாட்டீர்கள்

ராயல் என்பீல்டு பைக்குகளை ஓட்டுவதை அவர்கள் ஒரு பெருமையாகவே கருதுகின்றனர். ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு புதிய மாடல்களை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இவை ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் என குறிப்பிடப்படுகின்றன.

மிக மிக மலிவானது... புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்கின் விலை தெரிந்தால் சத்தியமா நம்ப மாட்டீர்கள்

இந்திய மார்க்கெட்டில் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மாடல்கள் விற்பனையில் சக்கை போடு போட்டு வருகின்றன. இந்திய மட்டுமல்லாது பல்வேறு சர்வதேச மார்க்கெட்களிலும் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள்களின் விற்பனை மிக சிறப்பாகவே இருந்து வருகிறது.

மிக மிக மலிவானது... புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்கின் விலை தெரிந்தால் சத்தியமா நம்ப மாட்டீர்கள்

ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் சமீப காலமாக ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களின் விற்பனை சரிவடைந்து வருகிறது. இந்திய மார்க்கெட்டில் நிலவும் மந்த நிலை காரணமாக கடந்த சில மாதங்களாக அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் ஆட்டம் கண்டு வருகின்றன. இதில், ராயல் என்பீல்டு நிறுவனமும் தப்பவில்லை.

மிக மிக மலிவானது... புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்கின் விலை தெரிந்தால் சத்தியமா நம்ப மாட்டீர்கள்

தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எண்ட்ரி-லெவல் மோட்டார்சைக்கிள் மாடலில் 350 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போதைய நிலையில் மிகவும் மலிவான ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளின் விலை 1.21 லட்ச ரூபாயாக உள்ளது. இதை விட இன்னும் குறைவான விலையில் புதிய மாடலை அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

மிக மிக மலிவானது... புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்கின் விலை தெரிந்தால் சத்தியமா நம்ப மாட்டீர்கள்

இதன் மூலம் இன்னும் அதிகமான வாடிக்கையாளர்களை ராயல் என்பீல்டு ஷோரூம்களை நோக்கி திருப்ப முடியும் என அந்நிறுவனம் கருதுகிறது. பட்ஜெட் விலையில் பைக் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களின் கவனம் கூட ராயல் என்பீல்டு நிறுவனம் மீது திரும்பலாம். ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது புத்தம் புதிய மாடல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மிக மிக மலிவானது... புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்கின் விலை தெரிந்தால் சத்தியமா நம்ப மாட்டீர்கள்

இந்த புதிய மோட்டார்சைக்கிள்தான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எண்ட்ரி-லெவல் மாடலாக உருவெடுக்கவுள்ளது. அதாவது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிக மலிவான விலை மோட்டார்சைக்கிள் மாடலாக இது இருக்கும். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தற்போதைய எண்ட்ரி-லெவல் மாடலாக இருப்பது புல்லட் 350.

மிக மிக மலிவானது... புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்கின் விலை தெரிந்தால் சத்தியமா நம்ப மாட்டீர்கள்

இதன் எக்ஸ் ஷோரூம் விலை 1.21 லட்ச ரூபாய். ஆனால் இதைக்காட்டிலும் குறைவான விலையில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய மாடல் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சமீப காலமாக மோட்டார்சைக்கிள்களின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. புதிய பாதுகாப்பு விதிமுறைகள், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் ஆகியவையே இதற்கு காரணமாக உள்ளன.

மிக மிக மலிவானது... புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்கின் விலை தெரிந்தால் சத்தியமா நம்ப மாட்டீர்கள்

இப்படிப்பட்ட சூழலில் மிகவும் குறைவான விலையில் ராயல் என்பீல்டு பைக் களமிறங்கினால், அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஆனால் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய மாடல் தொடர்பாக வேறு எந்த தகவல்களும் வெளியாகவில்லை. தற்போது இந்தியாவில் உள்ள ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஆர்&டி சென்டர் (R&D - Research and Development) இந்த பைக் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறது.

மிக மிக மலிவானது... புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்கின் விலை தெரிந்தால் சத்தியமா நம்ப மாட்டீர்கள்

இந்த ஆய்வின் அடிப்படையில் புதிய பைக்கை உருவாக்கும் பணிகளில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஈடுபடும் என தெரிகிறது. புத்தம் புதிய மாடலை ஆரம்ப நிலையில் இருந்து புரொடெக்ஸன் நிலைக்கு கொண்டு வர சிறிது காலம் பிடிக்கும். எனவே கிரீன் சிக்னல் கிடைத்தால், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய மாடல் வரும் 2023ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிக மிக மலிவானது... புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்கின் விலை தெரிந்தால் சத்தியமா நம்ப மாட்டீர்கள்

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புத்தம் புதிய மோட்டார்சைக்கிள் 1 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் குறைவான பட்ஜெட்டில் ராயல் என்பீல்டு பைக்கை எதிர்பார்ப்பவர்களுக்கு இது கொண்டாட்டமான செய்திதான். ஆனால் இதற்கு இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்.

மிக மிக மலிவானது... புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்கின் விலை தெரிந்தால் சத்தியமா நம்ப மாட்டீர்கள்

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ராயல் என்பீல்டு பைக் புத்தம் புதிய இன்ஜினை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக 250 சிசி இன்ஜின் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ராயல் என்பீல்டு நிறுவனம் மிகவும் சவாலான விலையை நிர்ணயம் செய்ய முடியும்.

மிக மிக மலிவானது... புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்கின் விலை தெரிந்தால் சத்தியமா நம்ப மாட்டீர்கள்

அதே சமயம் இந்த பைக் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பாரம்பரியமான அம்சங்களை தாங்கி வரும் எனவும் தெரிகிறது. முன்னதாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இங்கிலாந்து டெக்னிக்கல் சென்டர், அதிக திறன் கொண்ட பைக்குகளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சவால் அளிப்பதற்காக ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Note: Images used are for representational purpose only.

சூப்பர்... குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா?

ராயல் என்பீல்டு மிகவும் குறைவான விலையில் புதிய பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ள நிலையில், ஹூண்டாய் நிறுவனம் மிகவும் மலிவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதுகுறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

சூப்பர்... குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் புரட்சி தொடங்கி விட்டது. தற்போது எலெக்ட்ரிக் டூவீலர்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்கள் என புதுப்புது எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்திய சந்தையில் வரிசையாக அறிமுகமாகி வருகின்றன. இதற்கு மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கி வரும் ஊக்கமும் ஒரு காரணமாக உள்ளது.

சூப்பர்... குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி அளவை கணிசமாக குறைக்க முடியும். இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகை குறைந்து, பொருளாதார நிலை மேம்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்கள் மூலம் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.

சூப்பர்... குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா?

இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இது எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களுக்கு ஊக்கம் கொடுப்பதாக அமைந்துள்ளது. எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளன.

சூப்பர்... குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா?

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று அதிகமாக இருப்பதால், நடுத்தர வர்க்க மக்களால் வாங்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்தியாவில் தற்போது கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்களில் ஹூண்டாய் கோனா மற்றும் எம்ஜி இஸட்எஸ் ஆகியவை முக்கியமானவை. இவை இரண்டுமே எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள்தான்.

சூப்பர்... குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா?

ஆனால் இவற்றின் விலை மிக அதிகமாக உள்ளது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் எக்ஸ் ஷோரூம் விலையே 23 லட்ச ரூபாய்க்கும் மேலாக இருக்கிறது. அதே சமயம் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி சமீபத்தில்தான் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் ஆரம்ப விலையே 20.88 லட்ச ரூபாயாக (எக்ஸ் ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சூப்பர்... குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா?

இந்த விலைக்கு ஏற்ப ஹூண்டாய் கோனா மற்றும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார்கள் மதிப்பு வாய்ந்தவை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் 20 லட்ச ரூபாய்க்கும் மேல் இருப்பதால், நடுத்தர வர்க்க மக்களுக்கு ஏற்ற தயாரிப்புகளாக இவை இருக்காது. இருப்பினும் ஓரளவிற்கு குறைந்த விலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய பல்வேறு முன்னணி நிறுவனங்களும் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கின்றன.

சூப்பர்... குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா?

இதில், ரெனால்ட், எம்ஜி மோட்டார் ஆகிய நிறுவனங்கள் குறிப்பிடத்தகுந்தவை. ரெனால்ட் நிறுவனம் க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்ய முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் எம்ஜி நிறுவனமும் 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

சூப்பர்... குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா?

இந்த வரிசையில், முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனமும், 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில், புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

சூப்பர்... குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா?

இது குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.எஸ்.கிம் கூறுகையில், ''இந்திய மார்க்கெட்டிற்கு பசுமை வாகனங்களை கொண்டு வர ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. அத்துடன் 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட எலெக்ட்ரிக் கார் பணிகளையும் செய்து வருகிறது'' என்றார்.

சூப்பர்... குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் ஹூண்டாய்... எவ்வளவு தெரியுமா?

ஆனால் 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட ஹூண்டாயின் புதிய எலெக்ட்ரிக் கார் எப்போது விற்பனைக்கு வரும்? என்ற சரியான தகவல் வெளியாகவில்லை. ஆனால் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் வெகு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் ஹூண்டாய் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தால், அது நிச்சயம் வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

Note: Images used are for representational purpose only.

உலகின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

ஹூண்டாய் நிறுவனம் 10 லட்ச ரூபாய்க்குள் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ள நிலையில், உலகிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை உங்களை கண்டிப்பாக வியப்பில் ஆழ்த்தும். இதுகுறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

உலகின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

சீனாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் க்ரேட் வால் மோட்டார்ஸ், இந்திய எலக்ட்ரிக் கார்களின் பிரிவில் இடம் பிடிக்க பல வருடங்களாக திட்டம் தீட்டி வந்தது. இந்த நிலையில் ஒரா வரிசை கார்களுள் ஒன்றான ஆர்1 மாடல் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது.

உலகின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

அளவில் சிறியதாக உள்ள ஆர்1 மாடலில் 33kWh மற்றும் 28.5 kWh பேட்டரிகள் வேரியண்ட்டை பொறுத்து வழங்கப்படவுள்ளன. இந்த பேட்டரிகள் பொருத்தப்படும் எலக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 48 பிஎச்பி பவர் மற்றும் 125 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது.

உலகின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

இதன் பேட்டரியை விரைவான சார்ஜிங் நிலையத்தின் மூலம் சார்ஜ் செய்தால் 80 சதவீதத்தை அடைய வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். ஆர்1 எலக்ட்ரிக் மாடலின் அதிகப்பட்ச வேகம் 102 kmph ஆகும்.

உலகின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

விரைவான சார்ஜிங் நிலையங்கள் உருவாக்கப்படும் பணிகள் நாடு முழுவதும் தற்சமயம் நடைபெற்று வருவதால், இந்த புதிய மாடலை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வீட்டிலேயே உபயோகிக்கும் வகையிலான சார்ஜர் வழங்கப்படுகிறது.

உலகின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

இந்த எலக்ட்ரிக் மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும் பேட்டரி ஹீட்டிங் (வெப்பம் குறைவான பகுதியில் காரை இயக்கும்பொழுது உதவும்) மற்றும் ப்ரேக் எனர்ஜி உள்ளிட்ட தொழிற்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

உலகின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

மாருதி சுசுகி செலிரியோ மாடலை விட 3.49 மீட்டர் நீளம் குறைவாக உள்ள இந்த ஆர்1 எலக்ட்ரிக் மாடலின் உட்புறத்தில் வாய்ஸ் உரையாடல்களை ஏற்கும் விதத்திலான 9-இன்ச் தொடுத்திரை வழங்கப்பட்டுள்ளது.

உலகின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

மேலும் இதன் விலை குறைந்த வேரியண்ட்களும் இரு காற்றுப்பைகள், ஏபிஎஸ் ப்ரேக்கிங், பின்புற பார்க்கிங் சென்சார்ஸ் மற்றும் கேமிரா, டயரின் அழுத்தத்தை கணக்கிடும் வசதி, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளன.

உலகின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

எலக்ட்ரிக் மூலமாக கண்ட்ரோல் செய்யக்கூடிய இறக்கை வடிவிலான கண்ணாடிகள், 4 ஸ்பீக்கர்கள், ப்ளூடூத் டெலிபோனி மற்றும் மற்ற அடிப்படை இணைப்பு தொழிற்நுட்பங்கள் அனைத்தையும் க்ரேட் வால் மோட்டார்ஸின் இந்த ஆர்1 எலக்ட்ரிக் மாடல் கார் பெற்றுள்ளது.

உலகின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

ஆர்1 மாடலின் டாப் வேரியண்ட்டான காட்ட்ஸ் எடிசனுக்கு கூடுதலாக எமர்ஜென்சி காலத்தில் தன்னிச்சையாக செயல்படக்கூடிய ப்ரேக்கிங் மற்றும் 6 காற்றுப்பைகள் வழங்கப்பட்டுள்ளன.

உலகின் விலை குறைவான எலக்ட்ரிக் கார் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!

சிங்கிள் சார்ஜில் சுமார் 301- 351 கிமீ தூரம் இயங்கக்கூடிய இந்த ஒரா ஆர்1 எலக்ட்ரிக் மாடலின் விலையை இந்திய சந்தையில் ரூ.7.13 லட்சத்தில் இருந்து ரூ.8.27 லட்சம் வரையில் நிர்ணயிக்க க்ரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

மாருதி சுசுகி 800 மாடலை விட அனைத்து விதங்களிலும் சிறப்பாக இருக்கும் இந்த எலக்ட்ரிக் மாடலின் விலையை இன்னும் சில லட்சங்கள் குறைத்தால் நடுத்தர குடும்பத்தினரும் வாங்க யோசிப்பர். மற்றப்படி மற்ற எரிபொருள் கார்களை போல் இந்த எலக்ட்ரிக் காருக்கு அதிகளவில் பராமரிப்பு செலவுகள் ஆகாது என கூறலாம்.

ஆட்டோ எக்ஸ்போ அறிமுகத்திற்கு பிறகு க்ரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த புதிய எலக்ட்ரிக் மாடல் கார் டாடா டிகோர் இவி மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள ரெனால்ட் எலக்ட்ரிக் கார்களுடன் போட்டியிடவுள்ளது.

Most Read Articles
English summary
Most Affordable Royal Enfield: All-new 250cc Motorcycle Under Development. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X