ஸ்கூட்டர்களை பின்னுக்கு தள்ளிய பைக்குகள்: விற்பனையில் சாதனை..!!
கடந்த 2018ம் வருடம் ஸ்கூட்டர்களை விட 2 கோடி பைக்குகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது என ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு செய்தி வெளியிட்டது. கடத்த 2017ம் வருடத்தை விட இது மிகப்பெரும் விற்பனையாக கருதப்படுகிறது.

ஸ்கூட்டர் என்பது பிரபலமான ஒரு வாகனமாகவும் திறன் படைத்த வாகனம் எனவும் இந்தியாவில் பார்க்கப்படவில்லை.ஆனால் சமீபத்திய காலங்களில் இந்தியா அதை மறந்தது. இன்று பல திறன் பெற்ற பைக்குகள் மற்றும் கார்களுக்கு இணையாக ஸ்கூட்டரின் விற்பனை போட்டி போட்டு கொண்டு நடக்கிறது.

மோட்டார் சைக்கிள்களுக்கு இணையான திறன் மற்றும் தேவையுடன் ஸ்கூட்டர்களை பஜாஜ், சுசுகி, ஹோண்டா என வாகன துறையில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் தயாரித்து வெளியிடுகின்றன.

இந்தியாவில் ஒரு காலத்தில் பைக்கை தான் மக்கள் அதிகமான விரும்பினர்.ஸ்கூட்டர் மீது மக்கள் அதிகமாக நாட்டம் காட்டவில்லை, டிவிஎஸ் நிறுவனம் ஸ்கூட்டி என்ற மாடலை விற்பனைக்கு கொண்டு வந்ததும், பெண்கள் மத்தியில் பெரும்புரட்சியையே ஏற்படுத்தியது.

அதுவரை அவ்வளவு அதிகமாக வாகனம் ஓட்டாத பெண்கள் ஸ்கூட்டி வந்த பின்பு அவர்களும் வாகனங்களை ஓட்ட துவங்கினர். தொடர்ந்து ஹோண்டா நிறுவனம் வெளியிட்ட ஆக்டிவா பெரும் புரட்சியை ஏற்படுத்தி இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாக ஒரு டூவீலராக இது இருக்கிறது.

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு விற்பனையின் படி பைக் விற்பனை 15 சதவீதமும் வளர்ச்சியை பெற்றது. அதே ஸ்கூட்டர் விற்பனை 9 சதவீத விற்பனையை பெற்றது. பைக் விற்பனை தொடர்ந்து சராசரி வளர்ச்சியன 13 சதவீத வளர்ச்சியை பெற்றது. மேலும் என்றும் இல்லாத அளவில் கடந்த ஆண்டு 21.6 மில்லியன் யூனிட்கள் வரை விற்பனையாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பைக்குகள் அமோக விற்பனை குறித்து ஆட்டோமொபைல் டீலர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் ஆஷிஷ் காலே கூறுகையில், கிராம பகுதிகளிலும் சிறிய நகர் பகுதிகளிலும் சிறிய வணிகர்கள் மற்றும் கிராமப்புறங்களில் விவசாயிகள்தான் பைக்கினை அதிகமா பயன்படுத்துகின்றனர், ஸ்கூட்டர் வீட்டில் இருக்கும் பெண்களின் உபயோகத்திற்காக வாங்கினார்.

ஸ்கூட்டரை ஆண்களும், பெண்களும் ஓட்டலாம் என்பதால ஒரு குடும்பத்திற்கு ஒரு வாகனம் போதும் என்ற மனநிலையில் பலர் இதை வாங்க துவங்கினர். ஆனால் பெட்ரோல், டீசல் விலையுயர்வு, அதிக பைக் காப்பிட்டு செலவுகள் போன்ற பல்வேறு காரணத்தினால் வீட்டிற்கு ஒரு மோட்டார்சைக்கிள் போதும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.இதன் காரணமாக ஸ்கூட்டர்களின் விற்பனை சரிந்து விட்டது என ஆஷிஷ் காலே கூறினார்.

தற்போது பைக்குகள் தான் நல்ல விற்பனையில் இருந்தாலும், கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் மட்டும் ஸ்கூட்டர்கள் எதிர்பாராத விதமாக 45 சதவீத வளர்ச்சியை பெற்றது. அதே நேரத்தில் பைக்குகள் 29 சதவீம் தான் பெற முடிந்தது. கடந்தநிதியாண்டின் ஒட்டு மொத்த விற்பனையை பார்த்தால் பைக்குகள் 14 சதவீத வளர்ச்சியையும், ஸ்கூட்டர்கள் 20 சதவீத வளர்ச்சியையும் கண்டுள்ளன.

இந்த ஸ்கூட்டர் விற்பனை சரிவை முன்பே எதிர்பார்த்த பைக் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக பெர்பாமென்ஸ் கொண்ட ஸ்கூட்டர்களை களம் இறக்க தயாராகி வருகின்றனர். இதனால் இந்த சரிவில்இருந்து அவர்கள் மீண்டு வரலாம் எனவும் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications








