ஒரே இடத்தில் 5 பிரிமீயம் பிராண்டு பைக்குகளின் வாங்குவதற்கான வாய்ப்பு!
கடந்த ஆண்டு அக்டோபரில் தான் விற்பனை செய்ய இருக்கும் பிரிமீயம் பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. மேலும், தனது 5 பிராண்டு பைக்குகளை விற்பனை செய்வதற்காக மோட்டோராயல் என்ற ஷோரூம்களை அந்நி
ஒரே இடத்தில் 5 பிரிமீயம் பிராண்டு பைக்குகளை வாங்குவதற்கான வாய்ப்பை வழங்கும் மோட்டோராயல் பைக் ஷோரூம் பெங்களூரில் திறக்கப்பட்டுள்ளது. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இருசக்கர வாகன தயாரிப்பில் பிரபலமான கைனெட்டிக் நிறுவனம், ஹயோசங், எஃப்பி மாண்டியல், எஸ்டபிள்யூஎம், நார்டன் மற்றும் எம்வி அகுஸ்ட்டா ஆகிய 5 பிரிமீயம் பைக் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த 5 பிராண்டு பைக்குகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பொறுப்பை அந்நிறுவனம் ஏற்றுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் தான் விற்பனை செய்ய இருக்கும் பிரிமீயம் பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ரூ.3 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரையிலான பைக் மாடல்களை அந்நிறுவனம் விற்பனை செய்ய இருக்கிறது.

மேலும், தனது 5 பிராண்டு பைக்குகளை விற்பனை செய்வதற்காக மோட்டோராயல் என்ற பிராண்டு பெயரில் பிரத்யேக ஷோரூம்களை அந்நிறுவனம் திறக்க முடிவு செய்தது. டெல்லி, மும்பை, சென்னை நகரங்களை தொடர்ந்து பெங்களூரிலும் மோட்டோராயல் ஷோரூம் திறக்கப்பட்டு இருக்கிறது. அவந்த் கார்டே என்ற பெயரில் இந்த ஷோரூம் செயல்படுகிறது.

பிஎம்டபிள்யூ, போர்ஷே, லம்போர்கினி உள்ளிட்ட கார் ஷோரூம்கள் அமைந்துள்ள லாவெல்லே ரோட்டில்தான் மோட்டோராயல் மல்டி பிராண்டு பைக் ஷோரூமும் அமைந்துள்ளது. இந்த ஷோரூம் திறப்பு விழாவில், கைனெட்டிக் உயர் அதிகாரிகள் மற்றும் பிரிமீயம் பைக் ரசிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஸ்ட்ரீட், ஸ்போர்ட்ஸ், சூப்பர், அட்வென்ச்சர் மற்றும் ஆஃப்ரோடு என பல்வேறு ரக பைக்குகளையும் வாடிக்கையாளர்கள் விருப்பம்போல் தேர்வு செய்து கொள்வதற்கான வாய்ப்பையும் இந்த மோட்டோராயல் ஷோரூம் வழங்கும்.

ஏற்கனவே மோட்டோராயல் ஷோரூம்களில் எம்வி அகுஸ்ட்டா பிராண்டு பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது எஃப்பி மான்டியல், எஸ்டபிள்யூஎம், நார்டன் மற்றும் ஹயோசங் பைக்குகளையும் வாங்க முடியும். இதற்கு தக்கவாறு மோட்டோராயல் ஷோரூம்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இந்த திறப்பு விழா நிகழ்வில் பேசிய மோட்டோராயல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஜிங்கியா ஃபிரோடியா," சூப்பர் பைக்குகளுக்கான வரவேற்பு பெங்களூரில் மிக அதிகம் என்பதுடன், வேகமாக வளர்ச்சி பெற்று வரும் இடமாக விளங்குகிறது. உலக அளவில் பிரபலமான பல பைக் பிராண்டுகளை ஒரே இடத்தில் தேர்வு செய்வதற்கான வாய்ப்பை இந்த ஷோரூம் வழங்கும்," என்று கூறினார்.

அகமதுநகரில் உள்ள கைனெட்டிக் இருசக்கர வாகன ஆலையில், 5 பிராண்டு பைக்குகளும் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 30,000 பைக்குகளை அசெம்பிள் செய்யும் திறனை இந்த ஆலை பெற்றிருக்கிறது. நார்டன் நிறுவனம் இங்கிலாந்தை தவிர்த்து, முதல்முறையாக வெளிநாடு ஒன்றில் தனது பைக்கை அசெம்பிள் செய்ய இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








